Category Archives: Sujatha Short Story

என்னாலும் ஓட முடியாது! – சுஜாதா


ஒரு வீட்டு வாசலில், ‘இங்கு நாய்க் குட்டிகள் கிடைக்கும்’ என்ற அறிவிப்பு இருந்தது.

கேட் வழியாக ஒரு குட்டிப் பையன் எட்டிப் பார்த்து, வீட்டுக்காரரைக் கூப்பிட்டான். அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

‘அங்கிள்! எனக்கு ஒரு நாய்க் குட்டி தருவீங்களா?’

‘இதெல்லாம் ஒஸ்தி நாய். உன்னிடம் அத்தனை காசு இருக்குமா?’

‘என்னிடம் எட்டணா இருக்கிறது!’ என்றான்.

‘போதாதே’ என்றார் ஓனர்.

‘சரி, நாய்க்குட்டிகளை நான் பார்க்கவாவது பார்க்கலாமா?’ என்றான்.

அவர் வீட்டுக் கதவைத் திறந்து விசில் அடிக்க, சந்தோஷப் பந்துகளாக மூன்று நாய்க்குட்டிகள் சிறுவனை நோக்கி ஓடி வந்தன. அவனைப் பார்த்து வாலாட்டி, அவன் முகத்தை நக்கிக் கொடுத்தன.

சற்று தூரத்தில் நான்காவது நாய்க் குட்டி, இதைச் சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.

‘நீயும் வா குட்டி’ என்று சிறுவன் அழைக்க, ‘அது பிறந்ததிலிருந்தே ஓட முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள்’ என்றார் வீட்டுக்காரர்.

‘எனக்கு அதுதான் அங்கிள் வேண்டும். என்னாலும் ஓட முடியாது’ என்றான் சிறுவன், தன் சக்கர நாற்காலியில் இருந்து!

– சுஜாதா
(கற்றதும்… பெற்றதும்… – ஆனந்த விகடன் – 01-10-06)

Varagooran Narayanan

Advertisements

2- சுஜாதாவின் சிறுகதைகள் – ஜெயமோகனின் பார்வையில்…


சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. உதாரணமாக கீழ்க்காணும் கதைகளைச் சொல்லலாம்:

  • அம்மா மண்டபம்
  • கள்ளுண்ணாமை
  • கால்கள்
  • கரைகண்ட ராமன்

அம்மா மண்டபம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 28-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.

அன்புள்ள குழந்தாய்!

அரங்கன் உனக்கு சகல சௌபாக்கியங்களும் அளிக்கட்டும். உன் ஜாதகத்தையும் உன் பர்த்தாவின் ஜாதகத்தையும் பார்த்ததில் தோஷம் அவரிடத்தில்தான் இருப்பது தெள்ளெனத் தெரிகிறது. அதற்கான பரிகாரம் எளிதானது. இரண்டு பேரும் தம்பதி சமேதராய் திருவரங்கம் வந்து, அம்மா மண்டபத்தில் குளித்து, ரங்கனைச் சேவித்து, உன் புருஷனின் சார்பாக வாதங்களுக்கெல்லாம் அவனிடம் நீ மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் அந்தத் தினமே ஸ்ரீரங்கத்திலேயே நீ கர்ப்பவதியாவது திண்ணம். பிறக்கும் ஆண் மகவுக்கு ரங்கன் என்று பெயர் வை.

பரமேஸ்வரி பெருமாளுக்கு மிக அருகில் இருந்தாள். ‘பெருமானே, பகவானே ! என் முன் ஜோதியாய் நிற்கிறாய். மார்பில் நீலமேகம்! பின்னால் கிடந்த திருஉருவம்!  கண நேர மெய்மறப்பில் காவேரிக் கரையில் நடந்ததைப் பரிபூர்ணமாக மறந்து, “ரங்கா, எனக்கு என் உள்ளம் பூராவும் நிறைந்து இருக்கும் அந்த இச்சையைப் பூர்த்தி செய்! அஞ்சு வருஷமாகப் பிள்ளைப் பேறில்லாமல் நடத்திய வெற்று வாழ்க்கைக்கு அதை முடிப்பதற்குள் ஒரு பிள்ளையைக் கொடு ரங்கா! ரங்கா?”

கள்ளுண்ணாமை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 11-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.

உங்களுக்கு என்ன வேணும் ?

“விஸ்கி” என்றான்.

“என்ன விஸ்கி ? டிப்ளமாட், ப்ளாக் நைட், ரெட் நைட், ஓல்ட் டாவர்ன்?”

ராம் கோபாலுக்கு இந்தப் பெயர்கள் எல்லாம் புதிதாக இருந்தன.

“எதிலே நல்ல… எது ஸ்ட்ராங்காக இருக்கும்?”

“எல்லாம் ஒரே ஸ்ட்ராங்குன்னு தான் நினைக்கிறேன். நான் குடிச்சதில்லை சார்.”

“மறுபடி சொல்லுங்க பேரை” என்றான்.

அவர் சாரதா கபே சர்வர் போல் பட்டியலிட்டார், வெளியே பார்த்துக் கொண்டு.

Red Knight

“ரெட் நைட் கொடுங்க. லெட் தி நைட் பி ரெட்.”

“என். ஐ. ஜி. எச். டி. இல்லை, கே. என். ஐ. ஜி. எச். டி.”

“நீங்க படிச்சவரோ?”

“விஸ்கி விக்கறேனே, தெரியலையா?”

“தமாஷாப் பேசறீங்க. பில்லைப் போடுங்க.”

“க்வார்ட்டர் பாட்டிலா?”

“ரெண்டு பேர் சாப்பிடணும்.”

“நீங்க எத்தனை பேர் வேணும்னாலும் சாப்பிடுங்க சார். க்வார்ட்டர் பாட்டிலா, அரை பாட்டிலா ?”

“அரை பாட்டில் கொடுங்க. உங்க பேர் என்ன ?”

“அமிர்தராஜ். ‘அமுதரசன்’னு பத்திரிகைகள்ளே துணுக்கு எழுதுவேன்.”

“விஸ்கி விக்காதபோது துணுக்கு எழுதுவீங்களா ?காகிதப்பை வேண்டாம். பை கொண்டு வந்திருக்கேன். ஆமா அமிர்தராஜ் உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கலாமா?”

“விஸ்கி சாப்பிடறதைப் பத்தி மேற்கொண்டு கேக்காதீங்க. எனக்குத் தெரியாது. விலை தெரியும். அவ்வளவுதான்.”

“சரி வரேன், தாங்க்ஸ்.”

கால்கள்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 29-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.

அவர் சிரிப்பு அவர் முகமெல்லாம் விரிந்தது. “நான் என் சர்வீஸில் ஒரு இருநூறு கால்களைச் சுட்டிருப்பேன்! ஜஸ்ட் லெக்ஸ்! முழங்கால், ஷின் எலும்பு, பாதங்கள், கணுக்கால். எனக்கு இன்னும் முப்பது வருஷங்களுக்குப் பின்னும் கார்டைட் வாசனை போகவில்லை…..

……………………

“ஒன் மினிட் மிஸ்டர் ராஜன்!” என்று என்னிடம் சொல்லிவிட்டு, ஜான் தன் தந்தையை நாற்காலியிலிருந்து அலாக்காக ஆட்டுக்குட்டி போல் தூக்கிக் கொண்டான். “அவரால் நடக்க முடியாது….அவர் கால்கள்… Paralysed” என்றான்.

கரைகண்ட ராமன்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 34-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.

photo (16)

 

கரைகண்ட ராமனைப் பார்த்தான். பிரமித்தான். கோடி வேட்டி சுற்றியிருந்தது விக்கிரகம். கரப்பான் பூச்சி சுவாமி மேலே ஓடியது. இருந்தும் மங்கலான ஒளியில் அந்த முகத்தில் இருந்த புன்னகையும் கையில் வில் வைத்திருந்த ஒயிலும் காதில் படாகமும் கன்னத்தில் குழிவுகளும் பக்கத்தில் பதவிசாக நின்ற மனைவியும், தம்பியும்.

“திருமஞ்சனம் திருவாராதனம் ஒண்ண விடறதில்லை நான். எல்லாம் என் ஏழைக் கிரமப்படி நடத்திண்டு வரேன். அஷ்டோத்தரம் சொல்லி அர்ச்சனை பண்ணிடலாமா ?”

“என்ன விக்கிரகம்யா அது, செம்பா ?” என்றான்.

“இல்லை, இதைப் பஞ்சலோகம்னு சொல்றா. ரொம்ப அபூர்வமான விக்கிரகம். மூலவர் பேர் கோதண்டராமன். உத்சவர்தான் கரை கண்ட ராமன். ஸ்ரீராமன் சீதாதேவி, லட்சுமணனோட காட்டுக்குப் போறபோது இங்கே வந்து…”

அபாரமான விக்கிரகம். மூன்றரை அடி உயரம் இருந்தது. நகைகள் அதிகமில்லை. மார்பில் ஒரு பச்சைக்கல் நகை இருந்தது. நகைகள் யாருக்கு வேண்டும்? விக்கிரகம் முப்பதினாயிரம் பெறும். பாக்கி இரண்டும் பதினைந்து பதினைந்துக்குப் போகும். மொத்தம் எழுபதுகூடத் தேறும். மிகப் பழைய விக்கிரகம். பஞ்சலோகம். அருமையான வேலைப்பாடு! ஜான் மயங்கி விழுந்து விடுவான்.

எடுப்பதிலும் அதிகம் தொந்தரவு இருக்காது. பெடஸ்டல் வைத்து மூன்று பேரும் நிற்க சுலபமாக…

“நன்னா சேவிங்கோ…!”

ஆரத்தியின் அதிகப்பட்ட வெளிச்சத்தில் ராமன் ஜொலித்தான்.

பஞ்சலோகம். தொள்ளாயிரம் வருஷத்துக்கு முந்தின சிலை. அடேய் உனக்கு அதிர்ஷ்டம்டா! கார்பன் டேட்டிங் கூட பண்ணலாம். அப்புறம் பணம் கொடு என்று கேட்கலாம். டாலர்கள்…. இனிமையான டாலர்கள்.

100dollarbills

1- சுஜாதாவின் சிறுகதைகள் – ஜெயமோகனின் பார்வையில்…


சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

 1. சுருக்கம்
 2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள்:

 1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
 2. குறைவான கதைமாந்தர்
 3. சிறிய கால அளவு
 4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

 1. வலுவான வடிவ உணர்வு
 2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

 1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாகoom_1
 • ஒரே ஒரு மாலை
 • ஒரே ஒரு மாலை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்  தொகுதியில் 2-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)
 • வழி தெரியவில்லை
 • வழி தெரியவில்லை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 6-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)
 • சென்ற வாரம்
 • சென்ற வாரம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்  தொகுதியில் 10-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)

சுஜாதா கூறுகிறார்… (விமர்சனங்கள் – என் அனுபவம்)

ரொம்ப நாள் முன்னால் என் சிறு கதையான ‘ஒரே ஒரு மாலை‘ ஆனந்த விகடனில் வெளி வந்த போது, மூத்த விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘இந்தக் கதை என்னைப் பிரமிக்க வைத்தது. இந்த எழுத்தாளர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்’ என்று எழுதி விட்டார். அதற்கு பல பேர் அவரைக் கோபித்துக் கொண்டிருக்க வேண்டும் — ‘என்ன விமர்சகன் நீ! சுஜாதா கதையைப் போய் நன்றாக இருக்கிறது என்கிறாயா ? மஹா பாவம் அல்லவா ?’ என்று. அதன்பின் க.நா.சு. என்னைப் பற்றி எழுதுவதையே நிறுத்திவிட்டார். டில்லியில் எதாவது கூட்டத்தில் பார்த்தால், அவர் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இன்றும் பல க.நா.சுக்கள் இருக்கிறார்கள்.

சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்…)

oom_3

ஒரே ஒரே மாலை‘ கதையில் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தேன். கதையின் சோகமான முடிவை பாதியில் குறுக்கே புகுந்து சொல்லி விட்டு கதையைத் தொடர்ந்தேன். அதனால் அந்தக் கதையின் பிற்பகுதியின் உருக்கம் அதிகமாகியது. இருவரும் செத்துப் போகப் போகிறார்கள். ‘உனக்கு எத்தனை சம்பளம்…? என்ன கலர் பிடிக்கும்?’ என்றெல்லாம் அற்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்ற ‘ஐயோ பாவம்’ கிடைத்தது.
Ka.Naa.Su.
க.நா.சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கதையைப் படித்துவிட்டு ஒரு விமரிசனக் கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு ‘இந்தப் பையன் பின்னால் பெரிசாக வருவான்‘ என்று எழுதியிருந்தார். அதன்பின் க.நா.சு. அவர்களைக் கவரும்படியான கதைகளை நான் எழுதவில்லை. நல்ல எழுத்தும் ஜனரஞ்சகமான எழுத்தும் விரோதிகள் என்ற பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களில் ஒருவர் அவர். மக்களுக்குப் பிடித்தால், அது நல்ல இலக்கியமல்ல என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் எப்போதும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு நான்கு நாள் தாடியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.

6-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33

ஒரு லட்சம் புத்தகங்கள்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 17-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
சுஜாதா கூறுகிறார் (கற்றதும் பெற்றதும்…)

விகடனில் நான் எழுதிய ‘ஒரு லட்சம் புத்தகங்கள்‘  கதையை இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு என்னை வழி மறித்துப் பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்குக் குழாயில் தினமும் நல்ல தண்ணீர் வரவும் கூட்டமில்லாமல் பஸ்கள் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

ஒரு லட்சம் புத்தகங்கள்‘ கதைச்சுருக்கம் மட்டும் இங்கே.
அ.ராமசாமி எழுத்துகள்

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப்பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட நிகழ்வும் இருந்தது. அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பது மூலமாக தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப் பட்டிருந்தது. அக்கதையை முதலில் வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும், சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கதை நடக்கும் வெளி ஒரு கருத்தரங்க மாநாட்டுக் கூடம். கருத்தரங்கத்தின் பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு கதை அந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது கதை முடிந்து விடுகிறது. கதையில் பெயர் குறிப்பிடப் படாமல் பல பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் கதைக்கு முக்கியமில்லை. கதையில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறும் ஆறேழு பாத்திரங்களும் கூட முக்கியமில்லை. முக்கியமான இரண்டு பாத்திரங்கள் டாக்டர் நல்லுசாமியும் செல்வரத்னமும் மட்டும் தான்.

பாரதி பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் தலைமை தாங்க வந்துள்ள டாக்டர் நல்லுசாமி. அறியப்பட்ட தமிழறிஞர். பாரதியின் கவிதைகளில் தோய்ந்த புலமையாளர். தமிழ் சார்ந்த மாநாடுகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். இந்தக் கருத்தரங்கின் முடிவில் சிறப்புரை ஆற்ற வரும் அமைச்சர் அவரது செயல்பாட்டைப் பார்த்து விட்டு அங்கேயே அவரைப் பாரதி பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்க உள்ளதாகச் செய்தி அந்த அரங்கில் பரவி உள்ளது. கருத்தரங்கிற்கு வந்த பலரும் அதனை அறிந்து பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தான் அந்த இளைஞன் செல்வரத்னமும் வருகிறான்.

முதலில் அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும், அவர் இலங்கை வந்த போது தனது வீட்டிற்கு வந்தது; விருந்துண்டது; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாகக் கருதப்படும் நிலை பற்றி உரையாடியது எனப் பழையனவற்றைச் சொன்னபின் நினைவுகள் திரும்பியவராய் அன்புடன் அளவளாவுகிறார். அவனது குடும்பம் பற்றியும்,வீட்டிற்குப் போன போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாரதியின் கவிதையைப் பாடலாகப் பாடிய அவனது தங்கச்சியையும் விசாரிக்கிறார். அங்கே நடந்த கலவரம் பற்றி அறியாமல் இருந்த அவருக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது; இளைஞர்கள் கொல்லப்பட்டது; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டது பற்றிச் சொன்ன அவன், அந்தக் கலவரத்தில் அவன் குடும்பத்தில் அவன் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், அவன் தங்கை நடுவீதியில் துகிலுரியப்பட்டதையும் ஆவேசத்துடன் சொல்கிறான்.

கேட்டவர் பரிதாபப்பட்டு உங்களுக்கு எந்த வகையிலாவது எனது உதவிகள் தேவையா? எனக் கேட்கிறார். அதற்கு எனது சொந்த சோகத்தை விடவும் தமிழ் மக்களின் துயரமே இங்கு சொல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் பற்று உண்மை யானதல்ல; வெறும் பேச்சளவில் தான் அவர்களது பற்று உள்ளது. உண்மையில் தமிழகத் தமிழர்களின் ஈழப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது; எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதையும் அவன் சொல்லப் போவதாகவும், சொல்லி முடித்தபின் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லையும் செயலையும் பிரித்து வைத்திருக்கும் விநோதத்தைச் சுட்டிக் காட்டி இந்தக் கருத்தரங்க மலரை தனது பேச்சின் முடிவில் எரிக்கப் போவதாகவும் கூறுகின்றான்.

அவருக்கு அது உவப்பானதாகப் படவில்லை. காரணம் அவரது பேச்சு மட்டுமே அன்று சிறப்பானதாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறார். இடையில் இவன் இப்படிப் பேசி எதையாவது செய்வதால், கருத்தரங்கம் திசை மாறி அமைச்சர் கோபம் கொள்ளக் கூடும். அதனால் தனக்குக் கிடைக்க இருக்கும் துணைவேந்தர் பதவி கூடக் கிடைக்காமல் போகும் வாய்ப்பிருக்கிறது எனக் கருதுகிறார். தனது மென்மையான பேச்சின் வழியாக அதைத் தடுக்கும் விதமாகப் பேசிப் பார்க்கிறார். நடப்பது பாரதிபற்றிய கருத்தரங்கம்; அதனால் அவனைப்பற்றிய கருத்துக்களைப் பேசுவதே சரியாக இருக்கும். இந்த மேடையை உங்கள் ஆவேசத்திற்குரியதாக மாற்றி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவன் பாரதியின் மனிதநேயக் கருத்துக்களை- பிஜித் தீவு மக்களுக்கும், பெல்ஜியத்திற்கும் புதிய ருஷியாவிற்கும் வரவேற்பு சொன்ன சர்வதேசக் கவிஞன். அவன் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காகக் கதறவே செய்திருப்பான். ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து விட்டது.நாடற்றவர்களாக நிற்கும் ஆறு லட்சம் மனிதர்கள் எங்கே போவார்கள். எனவே இங்கே சொல்வதே சரியானது என உறுதியாகச் சொல்லி விட்டுச் செல்கிறான்.

டாக்டர் இப்போது அதைத் தடுத்தாக வேண்டும் என நினைக்கிறார். மறைமுகமாக அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி அடைகிறார். அவரது மனைவிக்குத் தொலைபேசியில் பேசி, அவளது அண்ணனை வைத்துப் போலீசுக்குப் பேசி,செல்வரத்னம் அவனது உரையை நிகழ்த்தாதவாறு தடுத்து விடுகிறார். அடுத்த நாள் செய்தித்தாளில் டாக்டர் நல்லசாமியை பாரதி விழாக் கூட்டத்தில் துணைவேந்தராக அறிவித்த செய்தி வந்திருக்கிறது. ஆனால் செல்வரத்னத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாகத் திருப்பி அனுப்பப் பட்ட செய்தி வரவில்லை என்பதாகக் கதையை முடித்துள்ளார்.

சுஜாதா கதைகளில் நீவிர் விரும்பும் ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, இருநூற்றுப் பதினேழு சிறுகதைகளைப் பட்டியலிடுக’ என்று யாராவது விரட்டினால், முதல் பத்துக்குள் வலது கை சுண்டு விரலையாவது மடக்கி (செய்து பார்த்தால் கஷ்டம் புரியும்) ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்று தயங்காமல் சொல்லலாம். இந்தக் கதையின் இக்காலத்துக்கும் பொருந்தும் சமகாலத் தன்மை நம்மை வியப்படைய வைக்கிறது. மனதில் கிளரொளியிலா இருளாகத் துக்கமும் மேலெழுகிறது.

ஈழம்.தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் எவ்விதமாகவேனும் பாதிக்கும் ஒரு வரலாற்றுத். துன்பியல் நிகழ்வு. இருந்தது குறித்த பெருமிதமும், இழந்தது குறித்த கையறு நிலை நெகிழ்வும், ஆத்திரமும், காரணங்களை வேர் பிரித்து சரம் சரமாக விரியும் சிந்தனையுமாக நம்மை எல்லாம் சூழும் பாதிப்பு இது. நம்மோடு ரத்தமும் சதையும் உணர்வும் மொழியுமாக ஒன்றிய கடல் கடந்த சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகக் கருவறுத்து அழிக்கிற முயற்சிகள் இன்னும் அங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இனத்தை அழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைக் கடந்த ஐம்பது வருடமாக அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழின எதிர்ப்பாளர்கள். கலையை அழிப்பது, கலைஞர்களைக் காவு வாங்குவது, ஆயிரம் ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றை, கலாச்சாரத்தை, சமூக இணக்கத்தைச் சொல்லும் புனைகதை, கட்டுரை, ஜீவனுள்ள கவிதை, நாடகம் என்று அச்சில் பதிப்பித்த நூல்கள் எல்லாவற்றையும் தேடித்தேடி அழிப்பது – இனத்தின் மகத்தான வீழ்ச்சி அங்கே தொடக்கம் குறிக்கப்படும். ஆனால் அது முடிவு இல்லை. வெட்ட வெட்ட வளரும் நன்மரமாக இனம் துளிர்க்கும்.

அ.ராமசாமி எழுத்துகள்

கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப்பட்ட ஆண்டு 1982. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன்.

பாரதி நூற்றாண்டை ஒட்டி-1982-இல் ஆனந்த விகடன் அந்தத் தொடரை வெளியிட்டது.பாரதியின் வரிகளை மையப்படுத்திக் கதைகளை எழுதினார்கள் எழுத்தாளர்கள்.மாலன் தொடங்கி வைத்த அந்த வரிசை பாலகுமாரன், ஸ்ரீவேணுகோபாலன்,வண்ணநிலவன், சுஜாதா, ராஜேஷ்குமார், வைரமுத்து என ஏழு பேருடைய கதைகளுடன் நின்று போனது. பாரதி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் ஐம்பத்திரண்டு கதைகளை விகடன் வெளியிடும் என எதிர்பார்த்தேன். நான் மட்டுமல்ல; என்னைப் போன்ற இலக்கிய மாணவர்களின் ஆசையும் அதுவாக இருந்தது. ஆனால் ஏழு கதைகளை வெளியிட்டதுடன் நிறுத்தப்பட்டது.நிறுத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. பின்னர் அந்த ஏழு கதைகளும் அதே ஆண்டிலேயே புத்தகப் பண்ணை வெளியீடாக பாரதி நிலையத்தால் வெளியிடப்பெற்றது. தொகுப்பின் தலைப்பு : பாரதி சிறுகதைகள்.

பத்திரிகையில் வந்தபோது வாசித்திருந்தாலும் புத்தகமாக வந்தபோதும் வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துப் பார்த்துக் கொள்வேன். ஏழு கதைகளில் இரண்டு கதைகள் எப்போதும் மறக்க முடியாத கதைகள் எனச் சொல்வேன். இலங்கைத் தமிழரின் தனிநாட்டுத் தாகம் தீராததன் காரணமாகச் சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் மறக்காமல் இருக்கிறது என்றால் வண்ணநிலவனின் துன்பக்கேணி நினைவை விட்டு அகலாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அக்கதை குறித்துப் பின்னர் எழுதலாம். இப்போது சுஜாதாவின் கதை.சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப் பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட நிகழ்வும் இருந்தது.அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பதன் மூலமாகத் தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப்பட்டிருந்தது. அக்கதையை வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும்,சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கதை எழுதப்பட்ட 1982-க்குப் பிறகு ஈழப் போராட்டம் பலவிதமான பரிமாணங்களைத் தாண்டிவிட்டது. ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அதற்கும் மேலான எண்ணிக்கையில் நாடற்றவர்களாக – அகதிகளாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். வழி நடத்திய தலைவர்கள் சோரம் போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இறுதியாக இரண்டு லட்சம் பேர் கம்பி வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் ஈழ ஆதரவுக் கோஷங்கள் இன்னும் வெற்றுக் கோஷங்களாகவே இருக்கின்றன. இலங்கை அரசை எதிர்த்து இங்கே உண்ணாவிரதப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கிறது எனக் கூறி, அதனை எதிர்த்துக் கண்டனப் பேரணியோ, இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஒரு உண்ணாவிரதத்தையோ நடத்திடும் தைரியம் ஒருவருக்கும் கிடையாது.

தீர்மானமான நிலைப்பாடுகளைச் சொல்லாமல் ஈழத் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் பற்றாளர்களும் திரும்பத் திரும்பச் செய்யும் மோசடிகளை இன்னும் இலங்கைத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்கள். முன்னணிப் படையாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஈழ ஆதரவாளர்களின் தமிழ்ப் பற்றும், ஈழப் பற்றும் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லும் இந்தக் கதை எப்போதும் அதற்குச் சாட்சியாக இருக்கப் போகிறது. அண்மை நிகழ்வு ஒன்றை நினைவூட்டி அதன் ஆழமான பிரச்சினைகளுக்குள் சென்ற கதைகளுள் இதனையொத்த கதையாக வேறொன்றை என்னால் சொல்ல இயலவில்லை.

அ.ராமசாமி எழுத்துகள்

 

4-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33Thernthedutha Kathaigal 2

குதிரை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 10-வது கதையாக இடம் பெற்றுள்ளது. எழுதிய வருடம் : 1983.

கேசவமணியின் பார்வையில் ‘குதிரை’… 

நம் அனுபவத்தில் இதுவரை நிகழாத ஒன்று நிகழும்போது ஏற்படும் சிக்கல்களை தனக்கேயான நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் சுஜாதாவின் குதிரை என்ற கதை. மனிதர்களை நாய் கடிப்பதும் அதற்கு வைத்தியம் பார்ப்பதும் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பார்த்தும் பழகியதுமான ஒரு நிகழ்வு. ஆனால் அதுவே ஒரு குதிரை கடித்தால்?

கிச்சாமி என்னும் கிருஷ்ணசாமியை ஒரு நாள் குதிரை ஒன்று கடித்துவிடுகிறது. அவன் மனைவி முதல் டாக்டர் வரை அதை விநோதமாகப் பார்க்கிறார்கள். டாக்டருக்கு நாய்க்கடிக்கு வைத்தியம் செய்வது தெரியும். குதிரைக் கடிக்கு என்ன செய்வது? எந்த மெடிகல் டிக்ஷனரியிலும் அதற்கு விளக்கம் இல்லை. அதற்காக வைத்தியம் செய்யாமல் விடமுடியமா? டாக்டரும் தனக்குத் தெரிந்த வைத்தியத்தைச் செய்கிறார்.

கிச்சாமியைப் பற்றி சொல்லும்போது சுஜாதா தனக்கேயான நடையில் இவ்வாறு சொல்கிறார்:

தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படித்து, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு. மனைவி, குழந்தை, மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.

ஆனால் குதிரை கடித்தபிறகு அவன் குதிரை கிச்சாமி என்று பிரபலமாகிறான். ஒரு மனிதன் பிரபலமாக பெரிய காரணங்களோ, சாதனைகளோ தேவையில்லை. சில சமயம் அற்ப காரணங்கள் கூட அதற்குப் போதுமானது என்பதை இந்தக் கதையின் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார் சுஜாதா.

Over to இரா.முருகன்…

குதிரைக் கிச்சாமி கதையை ராச்சாப்பாடு முடித்து விட்டு வாசல் திண்ணையில் அறுபது வாட்ஸ் பல்ப் எரியப் படிக்க வேணும். தெருவில் சோன் பப்டியை நிறைத்து பெரிய தராசு கட்டித் தூக்கிக் கொண்டு ஒரு வடக்கத்திய வியாபாரி ‘ஹாங் ஜீ கரம் நா ஜீ நரம்’ என்று இந்தியில் ஏதோ பாடியபடி பெட்ரோமாக்ஸ் விளக்கு சகிதம் விற்றுக் கொண்டு போகிற ராத்திரியில் தான் படிக்க வேணும். தெருவே கேட்கும் அளவு அதிர்ந்து சிரித்து விட்டு ஐந்து ரூபாய்க்குக் கை நிறைய சோன் பப்டி பழைய இந்தி தினசரிப் பத்திரிகைக் கூம்பில் சுற்றி வாங்கிக் கொண்டு பிடிப்பிடியாகச் சாப்பிட்டபடி இன்னொரு தடவை ரசித்துச் சிரித்து ஆனந்தப்பட வேணும். பட்டிருக்கிறேன். இப்போதும் சோன்பப்டியைப் பார்த்தால் குதிரை தான் நினைவு வருகிறது.

கதை தான் என்ன?

கிச்சாமியைக் குதிரை கடித்து விட்டது.. அவ்வளவுதான். ஆமா, நான் ‘குளத்து ஐயர் அங்கியை மாட்டிக் கொண்டார்’ என்று சிறு நகரத்தில் ரேடியோ ரிப்பேர் செய்து பிழைக்கும் ஒரு பிராமணர் ஊரில் அவுட்டோர் ஷூட்டிங் வந்த படத்தில் ஒரு காட்சியில் பாதிரியாராக அழைக்கக் கூட்டிப் போவது பற்றி எழுதிய கதையின் முதல் வரி. அங்கேயே கதை முடிஞ்சுடுத்து முருகன் என்றார் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். குதிரை கிச்சாமியும் தேர்ந்த வாசகனுக்கு முதல் வரியிலேயே முடிந்திருக்கலாம். ஆனால் அதைப் படித்து வரிக்கு வரி, வரிகளுக்கு இடையில் வரும் நகைச்சுவையை அனுபவிக்க வேண்டி நான் உன்னத வாசகர் தகுதியை உதறித் தள்ளவும் தயார். தரை டிக்கெட்டில் உட்கார்ந்து விசில் அடித்து மனம் முழுக்க மகிழ்ச்சியோடு பார்க்க வேண்டிய எம் ஜி ஆர் படம் அது (எம் ஜி ஆருக்கும் குதிரைக்கும் சுஜாதாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டாம். ஒன்றும் இல்லை).

கதைசொல்லி கூற்றாக (இது ரொம்ப ஓவர் – இந்தக் கதைக்கு இப்படி பண்டிதத்தனமான பில்ட் அப் எல்லாம் கொடுத்தால் சுஜாதா என்னை மன்னிக்க மாட்டார்) ‘நான்’ – நேரடியாகக் கிச்சாமி என்ற மத்ய தர வர்க்கத்து, இளமையிலிருந்து நடு வயதுக்குப் போய்க் கொண்டிருக்கும் சாமான்யன் கிச்சாமி என்ற கதைத் தலைவன் தன் கதை சொல்கிறான்.

’எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படித்து, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!’

சுஜாதாவின் சிறப்பு வர்ணனைகளில் இந்தக் கதை முக்கிய இடத்தைப் பெறுகிறது. முனிசிபல் ஆஸ்பத்திரி, அதன் முன்னால் குதிரை லாயம் (பிட்ரகுண்டாவில் கூட இதே போல லாயம் இருக்கிறதாம்), ஸ்டவ் திரி வாங்க கிச்சாமி அகமது ஸ்டோருக்குப் போவது, டாக்டர் மருத்துவப் புத்தகத்தைப் பிரித்து குதிரைக்கடி என்று பொருளடக்கத்தில் தேடி உதட்டைப் பிதுக்குவது, அவர் சிறப்பு மருத்துவரிடம் போகும்படி சிபாரிசு செய்ய கிச்சாமியும் அவனைத் திட்டிக் கொண்டே மனைவியும் வெளியே வரும்போது கண்ணில் படுகிற, பனியனைத் தின்னும் பசுமாடு (அது பக்கத்திலே போகாதீங்க. அதுவும் கடிச்சு வைக்கப் போறது – மிசிஸ் கிச்சாமி’), ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே என்று ஜட்கா குதிரைகளில் பிஎச்டி வாங்கியது போல் நுண்மான் நுழைபுலத்தோடு தீர்மானமாகச் சொல்லும் மாமனார், கடித்த குதிரையை தினசரி பார்க்க கிச்சாமியின் நடை, ப்ருஹ்ஹ்ஹ் என்று சிரிக்கிற குதிரை.. சுஜாதா இந்தக் கதையை சின்னச் சின்ன நகாசு வேலைகளால் நிரப்பி இருக்கிறார். எந்த சிரமமும் இல்லாமல் கதை நகரும்போதே நகைச்சுவையும் நம்மை முழுக்கச் சூழ்ந்து கொள்கிறது. தணிந்த நகைச்சுவையில் சுஜாதா மாஸ்டர்பீஸாக இந்தக் கதையைச் சொல்வேன்.

குதிரை பற்றி ஜெயமோகன்…

உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள்.

உதாரணமாக…

சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.

Author’s note on this story.


This is also one of my much anthologised stories. Published in `Kalaimagal` Deepavali issue 1983 first, its Hindi translation appeared in a Sahithya Academy collection of Indian short stories. This experience was narrated by my cousin in Bangalore who was actually bitten by a horse. More than the bite the disbelief of the people that a harnessed city horse can bite, was described humourously by him. That gave me the idea for the story. The descriptions are a mixture of the horsecart stands, invariable features in front of many municipal hospitals I have seen in Trichy and other places.

A note on Madan the illustrator

madhan
My association with Madan the `Inai Aasiriyar` of Vikatan spans more than a decade. He is more than a cartoonist and illustrator. He is a versatile writer, a very well read thinker and a delightful conversationalist with a glint of humour in his eyes. He makes the whole Tamil nadu laugh but it is difficult to make him laugh though I have succeeded in extracting a chuckle or two from him occasionally. My collaborative effort with him in `Junior Vikatan` called `Een etarku Eppadi` was a delightful experience , Madan providing ideal editorial support which created minor history in popularising science in Tamil and got me a national award.

தொடரும்…

3-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33

சுஜாதாவின் முன்னுரை…
சிறந்த‘ சிறுகதையை விட்டுவிடுங்கள். ‘சிறுகதை‘ என்பதே என்ன என்று தீர்மானமாகச் சொல்ல முடியாதபடி இந்த இயல் அத்தனை விரிந்திருக்கிறது.  இன்றைக்கு எல்லாரும் ஒப்புக் கொள்ளும்படியாக சிறு கதையை அறுதியிட்டால் “சின்னதாக சொல்லப்பட்ட கதை“  அவ்வளவுதான்! வேறு எந்த விதிகளும் இருந்து அதன் வீச்சைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. “சின்னதாக” என்பதும் ஒரு அளவுக்குத்தான். பெரும்பாலான கதைகள் மூவாயிரத்திலிருந்து ஏழாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி விடுவதால்தான்.
தனிமை கொண்டு‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 20-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 60 கதைகள்)
photo (12)
 
இந்த ‘தனிமை கொண்டு‘ சிறு கதையைத் தான் பின்னர் விரிவாக ‘நைலான் கயிறு’ என்ற நாவலாக–எழுதினார்.
தனிமை கொண்டு‘ குமரிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பதினெட்டு கதைகள்‘ சிறுகதைத் தொகுப்பில் முதலாவது கதையாக இடம் பிடித்துள்ளது.
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளில் சுஜாதா எழுதியது தனிமை கொண்டு.

கிருஷ்ணனின் பொன் மொழிகள்: நம்ம Life ரொம்ப சின்னது. Try anything once. இப்பவோ, நாளைக்கோ நாம் முடியறதுக்குள்ளே. தப்பு வரம்பு என்கிறதெல்லாம் மனுஷன் வகுத்த நியதி. அதுக்கு நாம் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் வகுத்த நியதி ஒண்ணே ஒண்ணு. மற்ற உயிர்களுக்குத் துன்பம் கூடாது.

இந்தக் கதையை கம்ப்யூட்டர் யுகமாகிய இந்த 21-ம் நூற்றாண்டில் கூட தமிழில் எழுதப் பலமுறை யோசித்துக் கைவிட வேண்டி வரும். கத்தி மேல் நடந்திருக்கிறார். அவரே இன்று இருந்தால் கூட, எதுக்கு, வேறே கதை தரேனே என்று நகர்ந்திருப்பார். என்றாலும் என்ன? எழுதி, அச்சுப் போட்டு, புத்தகமாகவும் வந்தாகி விட்டது. இனி வாசகர்களின் சொத்து.

தொடரும்…

2-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33

சுஜாதாவின் முன்னுரை…

பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். “உங்கள் சிறுகதைகள் எல்லாம் வெவ்வேறு புத்தகங்களில் சிதறியிருக்கின்றன, அவைகளில் சிறந்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடுங்களேன்” — நல்ல யோசனைதான். இருந்தாலும் ஒரு சிக்கல்! சிறந்த சிறுகதை என்றால் என்ன ? அதற்கு பதில் கிடைத்து விட்டதென்றால் நான் இனி கதைகள் எழுத வேண்டியதில்லை. “இன்றைக்கு 9-05 க்குநான் ஒரு ‘சிறந்த சிறுகதை‘ எழுதினேன்” என்று எந்த எழுத்துக்காரனாலும் சொல்ல முடியாது. தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது.‘

ரேணுகா‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்–தொகுதியில்–25-ஆவது கதையாக–இடம் பிடித்துள்ளது.

photo (12)

ரேணுகா‘  – குமரிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பதினெட்டு கதைகள்‘ சிறுகதைத் தொகுப்பில் நான்காவது கதையாக இடம் பிடித்துள்ளது.

ரேணுகா – பளிச்சென்று எந்த ஆரவாரமும் இல்லாமல் ஒரு கீழ் நடுத்தர வீட்டுக் காலை நேரத்தில் கதை தொடங்குகிறது.. அந்தச் சூழல், கீழ்த் தட்டின் குடிசைப் பிரதேசத்துக்கு சற்றே சமூக நெருக்கத்தோடு வரும் ஒரு புறநகர்ப் பகுதி.

‘அழுகிற குழந்தையுடன் பால் பாத்திரத்துடன் வாசலுக்கு வந்து நின்றாள். எதிரே குடிசைகளுக்குப் பின்னால் வானம் காயப்பட்டிருந்தது. சரக் சரக் என்று ஊசி நிரடும் சத்தம் கேட்டு, ‘நாங்க புதுசா ஆ ஆ.’ என்று தொடங்கியது ஒலிபெருக்கி..

‘ஒரே திசையில் பார்த்துக் கொண்டு பல் தேய்த்தவனைச் சூரிய வெளிச்சம் நெற்றிக் கோடுகளையும் முன் மண்டை நரையையும் ஸ்பஷ்டமாகக் காட்டியது’.

இந்தக் கதையில் சுஜாதா பேசுவதேயில்லை. முகத்தை எந்த உணர்ச்சியும் காட்டாமல் வைத்துக் கொண்டு, வார்த்தை தடிக்காமல், பிரசாரமில்லாமல், கீழ்க் குரலில் கதையைச் சொல்லிப் போகிறார். இடைவரிகளுக்கு நடுவே கனமான மௌனமும் சோகமும் சமூக உரையாடலும் கனத்து அப்பிய கதை இது. அதெல்லாம் புரியக்கூட வேண்டாம். மினிமம் கியாரண்டியாக – கதை வாசிப்பு அனுபவம். சுவாரசியம் என்றால் கெட்ட வார்த்தை என்று ஒரு கூட்டம் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. சுஜாதா அவர் படத்துக்குப் போட்ட ஊதுபத்திப் புகையில் வந்து சொல்கிறார்- ஜல்லி அடிக்கறாங்க, நம்பாதே.

தொடரும்…