Monthly Archives: December 2017

20-Connecting the Dots… – Jay Jayaraman


ஜெ. வேலையில் தன்னை நீடிக்க உதவிய Manager Patrick – க்கு நன்றிக்கடனாக Infosys stock வாங்க உதவி செய்த இருபதாம் அத்தியாயம்…

With the Blessings of Balaji things were going fine. 15 months passed quickly. I am an early person when it comes to work. One morning at 6:30 am in March 1999 when I reached work I saw a worried look on my manager Patrick’s face. The reason for the worry was the stock he loaded up on the previous day in anticipation of mind blowing results were luke warm at best and the cautious outlook from the company made matters worse and the stock took a 16% nose dive. A quick look at the stock and its history and the sector it was in was not very appealing. The charts were pointing to more negativity.

I decided to help Patrick albeit in a small way. After all I owe my existence in that job to him. Without him shielding me and protecting me I would be nowhere..! It is payback time and I started to think on how I could help him. Infosys had just listed a few days (Mar 11) earlier on NASDAQ. The stock was quoting at $41 those days. I told my manager to invest in INFY.

People don’t take investment recommendations seriously and they want solid reasons on why to buy. The recommendation coming from a dumb Software Engineer makes it even worse. People generally don’t question recommendations from big name companies like Goldman Sachs. They follow their recommendations like a herd. My manager decided to laugh it off.

Every other day it became customary for me to ask my manager if he bought INFY. The stock was slowly inching its way up. The stock was up about 20% in a month to about $49. My lunch time was usually after 12:15 pm. I would watch closing trading of stocks I used to follow. That day INFY jumped a further 4%.

Upon returning to my desk, a beaming Patrick walked up to me and with a sheepish grin told me that he decided to take my advice and bought 200 shares of Infosys. I asked him the price he paid. He mentioned $66 per share.. something was weird. Infosys closed at $50.75 and how could Patrick buy INFY at $66.  I asked to look at the trade confirmation. He had bought INFOSEEK (SEEK) an online search engine (instead of Infosys) that was later acquired by Disney. Patrick was a lucky man though.

The next day when we sold SEEK and bought INFY he made a few extra dollars.  INFY did very well and after several stock splits I asked Patrick to reduce 90% of his INFY holdings.

This incident provided the base for a strong friendship that lasted several more years until he passed away a few years ago.

Advertisements

2-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


அனுமன் மகிமைக்கு பெரும் சான்றாக விளங்குவது “அனுமன் சாலீசா‘ என்னும் மந்திரமாகும். அடிப்படையில் அனுமன் ஒரு தெய்வீகப் பிறவி. ராம- லட்சுமணர்கள் பிறந்த அதே காலகட்டத்தில் புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாகவும், அனுமனின் தாயான அஞ்சனை கும்பகத்தில் மூச்சை நிறுத்தி யோகத் தவமிருந்த நிலையிலும் கருத்தரிக்கப் பெற்றவன்.

அனுமனின் உயிர்மூலத்தில் சிவசக்தியின் ஸ்கலிதமும், வாயு பகவானின் உயிர்மூச்சும் இருப்பது அடுத்த விசேஷம்.

இப்படிப்பட்டவன் நட்சத்திரங்களில் “மூலம்‘ என்னும் நட்சத்திரத்தில் அவதரித்தவன். பிரம்ம பத்தினி சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் உருக்கொண்டவளாவாள்!

இந்த உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிர்க்காவலாக விளங்குவது அறிவே. ஓரறிவு கொண்ட ஒரு சிலந்திகூட வலைபின்னி, அதில் தனக்கான உணவை விழவைத்து பிறகுதான் அதை உண்டு ஜீவிக்கப் பார்க்கிறது. எனவே ஓரறிவில் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரையில் அவர்களுக்குக் காவலாக இருப்பது அறிவே! அந்த அறிவின் விரிவில் வருவதே கல்வி, ஞானம் போன்றவை. இந்தக் கல்வியும் ஞானமும் சப்தமாகிய மொழியால் அமைந்தவை. இந்த மொழிக்கு மூலமாக விளங்குபவளே சரஸ்வதி. இந்த மூலத்தில் முளைத்த அனுமனும் பெரும் கல்வி, ஞானம் இவற்றை அருளும் ஆற்றல் படைத்தவன். அதற்குக் காரணம் அவன் புலன்களை அடக்கி தியானிக்க முடிந்தவனாக இருப்பதுதான்.

தியானம் எல்லாருக்கும் வசப்பட்டு விடாது. அதற்கு பெரும் மனவலிமை வேண்டும். அடுத்து தியானமே அறிவாகிய மனதிற்கு பெரும் மருந்தாகவும் திகழ்கிறது. இந்த உண்மை நமக்குத் தெரிந்திட நமக்கு நல்ல விதியமைப்பு இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மனதை அடக்கமுடியாமல் அதன் பின்னே செல்பவர்களாகவே நாம் இருப்போம்.

மனதை அடக்க முனைபவர்களுக்கு மகத்தான மந்திரமாக விளங்குவது ராம நாமம்! அனுமன் அந்த ராம நாமத்தைக் கூறியே பெரும் தியான சுந்தரனாகத் திகழ்கிறான்.

இப்படித் திகழ்பவனை நாம் நமக்கான இஷ்ட தெய்வமாக ஆக்கிக்கொண்டு சுலபமாக முக்தியை அடைந்துவிட முடியும். இவன் பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவன். அதனாலேயே இவன்பால் பக்தி கொண்டவர்க்கு இவன் எளிதில் வசப்பட்டுவிடுகிறான்.

இவனை உபாசனா மூர்த்தியாகக் கருதி பலர் இவனது தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; இவனை உபாசிப்பவர்கள் இடும் கட்டளையை இவன் க்ஷணத்தில் செய்து முடிப்பவனும்கூட! இப்படிப்பட்ட அனுமனை உபாசிக்க நிறைய மந்திரங்கள் உள்ளன. அதில் உன்னதமாய்த் திகழ்வதுதான் அனுமன் சாலீசா!

இதை முதியவர்களைவிட இளம்பிள்ளைகள் எளிதில் மனப்பாடம் செய்துவிட முடியும். பிள்ளைகள் வரையில் அதிகபட்சம் ஒன்பது முறை இதைச் சொல்லி முடிப்பதற்குள் இது மனப்பாடமாகிவிடும்.

இந்த அனுமன் சாலீசாவை எழுதியவர் இந்தி மொழியில் “ராமசரித மானஸம்‘ என்னும் நூலை இயற்றிய துளசிதாசர் ஆவார்.

இதில் ஒரு ஆச்சரியப்படும் விஷயமும் உள்ளது.

துளசிதாசர் ராமசரித மானஸம் எழுதக் காரணமே அனுமன்தான். துளசிதாசர்முன் தோன்றி அவருக்கு கவியாற்றலை அனுமன் அளித்திட, அதன்பின் பிறந்ததுதான் ராமசரித மானஸம்! இதனால் துளசிதாசர் தன் குருவாய்க் குறிப்பிடுவது அனுமனைத்தான். “அனுமனே என்னுள் இருந்து கொண்டு என்னை இயக்கி ராமசரிதையை எழுத வைத்தான்‘ என்னும் துளசிதாசர், மிகுந்த நெகிழ்ச்சியோடு எழுதியதுதான் அனுமன் சாலீசா!

திருக்குறள்போல நாற்பது ஈரடிகளில் அமைந்துள்ளது இது!

இந்த அனுமன் சாலீசாவுக்குப் பின்னே  பெரும் வெற்றிக்கதை ஒன்று உண்டு.

நமக்கு எப்போதுமே பெரும் தலைவலியாக இருந்துவரும் ஒரு நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான்தான். 1965-ல் பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்யுத்தம் ஏற்பட்டது.

நமது  பாரத நாடு சுதந்திரம் பெற்று அப்போதுதான் ஓரளவு நிமிர ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் போர் ஏற்படவும், அதனால் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் நம் நாட்டுக்குள் கட்டுப்படுத்த முடியாதபடி விலைவாசி உயர்வும் ஏற்படத் தொடங்கியது.

இந்த நிலை தொடர்ந்தால் நம் பாரத நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் இருந்த மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடும் ஒரு ஆபத்தும் ஏற்பட்டுவிட்டது.

ஒன்று யுத்தம் மிக விரைவாக நடந்து முடியவேண்டும்- அதோடு யுத்தத்தில் பாரதம் கட்டாயம் வெற்றியும் பெற்றாகவேண்டும். இது நடக்காத பட்சத்தில் நம் நாட்டைக் காப்பாற்ற கடவுளால்கூட முடியாது என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

அப்போது ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் கேட்டார்.

அது என்ன தெரியுமா?

“எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில்… எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில்.. சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப்படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின்மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா… இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவதுபோல தெய்வமே ஒரு கற்பனையா?’

என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை.

எப்பொழுதும் காய்த்த மரமே கல்லடி படும்… அதிலும் இந்த பாரத தேசத்தை ஞானத்துறவி விவேகானந்தர், “இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரத தேசம் ஒரு புனிதமான பூஜையறையைப் போன்றது‘ என்றார்.

இந்தப் பூஜையறைக்குள் அருள் இருப்பதுபோலவே அதை சரியாகக் கொண்டாடாவிட்டால் இருள் வந்து சேர்ந்துவிடும். இருள் வந்தால்தான் அருள் ஒளியின் தன்மையை உணரமுடியும்.

நிழலருமை வெய்யிலில் அல்லவா தெரியும்?

இப்படிப்பட்ட சிந்தனைகளால் பெரியவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை தோன்றியதோ என்னவோ? மிகுந்த வருத்தமுடன் கேள்வி கேட்டவருக்கு அவர் வார்த்தைகளில் பதில் கூறவில்லை. அவரிடம், “உங்களுக்கு “அனுமன் சாலீசா‘ தெரியுமா?” என்றுதான் கேட்டார். அவரும் “கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.

“அனுமன் ஒரு மாவீரன்… தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்” என்ற மகாபெரியவர், தனது சங்கரமட அமைப்பு மூலமும் அன்பர்கள் உதவியோடும் “அனுமன் சாலீசா‘வை லட்சக்கணக்கில் அச்சிட்டார்… அச்சிட்டதை போர்முனைக்கு அனுப்பி ஜவான்கள் கையில் கிடைக்கும்படிச் செய்தார்.

“இதை பாராயணம் செய்யுங்கள். புதிய பலம் தோன்றும். செய்யத் தெரியாதவர்கள் இந்த அனுமனே உடனிருப்பதாகக் கருதி  சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். யுத்த களத்தில் உங்களுக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது’ என்கிற தகவலையும் அனுப்பினார்.

மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்.

அதைத் தொடர்ந்து நடந்த பங்களாதேஷ் யுத்தத்திலும் அனுமன் சாலீசா பல ஜவான்களிடம் பெரும்பங்கு வகித்தது.

இந்த அனுமன் சாலீசாவை லட்சம் முறை பாராயணம் செய்த பலர் இந்த மண்ணில் உண்டு. அவர்களுக்கெல்லாம் அனுமனின் தரிசனமும் பல வடிவத்தில் கிடைத்திருக்கிறது.

அப்படி ஒரு அனுமன் உபாசகர் சென்னைக்கு அருகில் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் இருந்தார். சாலீசா இவருக்கு தூர திருஷ்டியை வழங்கியது. சென்னையில் ஒரு பெரும் தொழிலதிபர். இன்றும் தொழிற்துறையில் பெரும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

அவர் தொழில் தொடங்கிய தொடக்க நாட்களில், தொழிலகத்தை விரிவுபடுத்த டெல்லிக்குச் சென்று அதற்கு அனுமதிபெற வேண்டியிருந்தது. ஆனால் டெல்லியில் அனுமதியை அவ்வளவு சுலபத்தில் தரவில்லை. இப்படி இருந்தால் எப்படி தொழில் முனைவது என்று அவருக்குள் ஒரு ஆயாசம். உண்மையில் டெல்லியில் ஒரு அதிகாரிதான் தடையாக இருந்தார். அதற்குப் பல காரணங்களும் இருந்தன.

இந்த நிலையில் இந்தத் தொழிலதிபர் அனுமன் உபாசகரையும் சென்று தரிசித்திருக்கிறார்.

வாயைத் திறந்து தனது பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைகூட உபாசகரிடம் கூறவில்லை. உபாசகரின் தூரதிருஷ்டியே அவ்வளவையும் அறிந்துகொண்டது. அப்போது அவர் திருஷ்டியில் டெல்லியில் தடையாக இருந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு வந்து அவர் அந்த சீட்டிலேயே இல்லை என்பதும் தெரிந்தது.

அதை அப்படியே அந்த தொழிலதிபரிடம் கூறினார்.

“உனக்கான தொழில் தடை விலகிவிட்டதே. நாளைக்கே லைசென்ஸ் கிடைக்கும். உன் தொழிலும் அனுமன் அருளால் நன்றாக நடக்கும்” என்றார். தொழிலதிபர் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் மறுநாள் நடக்கவும் ஆடிப்போனார்…. உபாசகரின் தூர திருஷ்டியை எண்ணி வியந்ததோடு அனுமனின் கருணையையும் எண்ணி சிலிர்த்துப் போனார்.

அனுமன் உபாசகர்களுக்கு அப்படியொரு சக்தி.

ஒரு உபாசகரின் வாழ்வில் இன்னொரு சிலிர்ப்பூட்டும் சம்பவமும் நடந்தது. சென்னைக்கு அருகில் உள்ள திருநீர்மலைக்கு இவர் தரிசனத்துக்காகச் சென்றபோது ராமஜெயம் அம்மாள் என்னும் ஒரு பெண்மணியும் கோவிலுக்கு வந்திருந்தார்.

உண்மையில் அந்தப் பெண்மணிக்கு வேறு பெயர். ராமபக்தியோடு தினமும் ராமஜெயம் எழுதுவதோடு மற்றவர்களையும் எழுதச் சொல்வார் அந்தப் பெண்மணி. அதனால் அந்தப் பெண்மணிக்கு “ராமஜெயம் அம்மாள்‘ என்றே பெயர் வந்துவிட்டது.

அந்தப் பெண்மணி தனிமையில் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மலைப்படிகளிலும் அவ்வளவாக யாருமில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் அந்தப் பெண்மணியின்  கழுத்தைப் பார்த்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு பவுனில் தடிமனான தாலிச்சங்கிலி அந்த அம்மாளின் கழுத்தில் மின்னுவதைப் பார்த்து விட்டான். அதை அபகரிக்கும்  எண்ணத்தோடு மெல்ல அந்த அம்மாவை பின்தொடரத் தொடங்கினான். அதேசமயம் மேலிருந்து உபாசகரும் இறங்கத் தொடங்கியிருந்தார். உபாசகர் வருவதை கவனிக்காமல் அந்தப் பெண்மணியை வேகமாக நெருங்கியவன், சங்கிலியை அறுத்துக்கொண்டு கீழிறங்கி ஓடத் தொடங்கினான். அந்தப் பெண்மணி பதறிட உபாசகரும் திகைத்துப்போய் அனுமனைத்தான் அடுத்த நொடி நினைத்தார்….

(தொடரும்)

19-Connecting the Dots… – Jay Jayaraman


Image result for mylapore restaurant folsom ca

ஜெ. தனக்கு Malibu Temple மூலம் கிடைத்த முதல் pay check – $301 பற்றி விவரிக்கும் பத்தொன்பதாம் அத்தியாயம்…

My weekend routine those days were to get up and shower, do my Sandhyavandhanam, make Prasadam for Lord Balaji and head to the Malibu Temple with the Prasadam, watch the Abhishekam, chant Vishnu Sahasranamam and head back home.

One day I️ was presented with an opportunity of a life time, an opportunity to be of great service. The Priest Narasimha Bhattar called me and asked me if I could help with the Catering operations for the upcoming Kumbhabishekam functions.

A multi million dollar expansion of the Temple was happening and was in its final stages. The events were planned for June 5, 6 & 7 of 1998. I️ was delighted. I️ went and took a look at the Temple kitchen. It was spacious and well equipped.

I️ was told that there would be plenty of volunteers to help. The number of guests were expected to be upwards of 1000.

I️ did not go to work on Friday, June 5. The whole day was spent in prepping veggies with the help of volunteers. I️ had earlier made a list of what I️ needed. All the items I requested were ready on the day of the event. The volunteers did an amazing job. The Prasadams turned out to be fantastic. People appreciated the food so much.

On the last day much against my wishes the Priests announced my name on the microphone and gave me a check for $301. My first pay check that I truly worked hard for..!

May be the seed for Mylapore in USA was planted by Him on that day. I️ always wonder about the connection between this opportunity and the events that followed later.

to be continued…

1-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க முடிகிறது. சீறிப் பாய்ந்துவரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, பஞ்சபூதங்களில் ஒரு பூதமான நீரையே அடக்கி ஆளவும் முடிகிறது.

மனிதனின் வல்லமையை இதுபோல் பட்டியல் போடத் தொடங்கினால் அது நீண்டபடியே இருக்கும். என்னதான் மனிதன் பெரும் வல்லாளனாக இந்தப் பூவுலகில் திகழ்ந்தபோதிலும் அவனால் மரணத்தை வெல்லமுடியவில்லை. அதேபோல் நரை, திரை, மூப்பிடமும் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.

அதுமட்டுமா?

அவனால் பல விருப்பங்களைத் தெரிவிக்க முடிகிறது- ஆனால் அனைத்தையும் ஈடேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை என்றாகிறது. கூர்ந்து கவனித்தால் அவன் வாழ்வு முழுக்க இன்பம் மட்டுமே வாழ்வாக இருந்ததில்லை. துன்பமும் கூடவே வந்து, “இரண்டும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறது.

மொத்தத்தில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கினால், எதுவும் நிலையில்லை என்பது முதல் எதையும் எவரும் எடுத்துச்செல்ல முடியாது என்பது வரைதான், மேலான ஒப்பற்ற உயிரினத்தின் வாழ்க்கைப்பாடு அமைந்துள்ளது.

இதனால் ஏன் இப்படி? எதனால் இப்படி என்கிற கேள்விகள் முளைவிட, அவனும் தன் ஆறாவது அறிவாலே, தான் வாழ்வதற்காக வழிவகை செய்துகொள்வதற்கு நடுவில் ஒரு ஞானவேள்வியும் செய்ததில் பல சத்தியங்கள் புலனாகின்றன. அந்த சத்தியங்களின் ஒட்டுமொத்தமாக- தன்னைப் படைத்தது முதல் உலகைப் படைத்து அதில் பல்லாயிரம் உயிரினங்களை- தாவரங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்தது வரை மேலான ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிற பேருண்மையை நெருங்குகிறான்.

அந்த சக்திக்கு அவன் சூட்டிய பெயர்தான் கடவுள்! இந்தக் கடவுளை அவன் தன் புலனடக்கத்தால் தரிசனம் செய்து, புவனம் கடந்த பல பேருண்மைகளையும் அறிந்து, அதை அவன் உலகிற்குச் சொல்லும்போது அது ஆன்மிகப் பாடமாக, வேதங்களாக விளங்குகிறது.

இந்த ஆன்மிகமும் வேதமும் மானிடனை மகத்தானவனாக்கி- பிறப்பற்றவனாக்கி நித்திய இன்பத்தில் நிலைக்க வைக்கிறது. ஆனாலும் இந்த மகத்தான நிலையை அடைவது எளிதல்ல!

கோடியில் ஒருவருக்கே அது வாய்க்கிறது.

அப்படி வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமே அனுமன்! இத்தனைக்கும் அனுமன் மனிதாம்சத்தோடு விலங்கின் தன்மையும் கொண்ட ஒரு விசித்திரன்!

இந்த விசித்திரன் மானுட பக்திக்கு எளிதாக அகப்படும் ஒரு ஆச்சரியனும் கூட! இவனுடைய வரலாற்றை இதுகாறும் வாசித்ததில் இந்தப் பேருண்மையை நாம் உணர்ந்திருப்போம்.

வானர இனத்தில் பிறந்து, மானுட குணத்தில் வளர்ந்து, தேவதன்மையை அடைந்து, மனித இனத்துக்கு பெரும் உதாரணபுருஷனாக விளங்குகின்றவன் மாருதி என்கிற இந்த அனுமன்!

எது சக்தி என்பதற்கு உதாரணம் இவன்.

எது பக்தி என்பதற்கும் உதாரணம் இவனே!

பெரும் சகாயன், இணையில்லாத நண்பன், உத்தமகுரு என்று எல்லா நிலைப்பாடும் இவனுக்குப் பொருந்தும்.

நால்வகை யுகங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்துக்கு வினோதமான பல தன்மைகள் உண்டு. அதில் ஒன்று தர்மம் நசிவதும் அதர்மம் வளர்வதுமாகும். அதுமட்டுமல்ல; கலியுகத்தில் எதுவானாலும் கண்ணுக்கு முன்னே! விதைப்பது எதுவோ அதையே அறுப்பவராகவும் இருப்போம்.

இந்த யுகத்தில் மானிடப் பிறப்பெடுத்து, பிறப்பை அழகாக முடித்துக் கொள்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இந்த உலகை தற்போது பெரும் மாயை சூழ்ந்துள்ளது. அது நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டவல்லது. தர்மத்துக்கு பெரும் சோதனைகள் சர்வசாதாரணமாக ஏற்படும். இறுதியில் தர்மமே வெல்லும். ஆனபோதிலும் இறுதிவரை பொறுமையாக இருக்கமுடியாதபடி வினைகள் ஆட்டிவைக்கப் பார்க்கும். பெரும் மனோதிடம் இருந்தாலன்றி மானிடப் பிறப்பை நல்லவிதமாக ஆக்க இயலாது.

இப்படி ஒரு காலகட்டம் வரும்; அப்போது மனித இனம் அல்லல்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று, வானரப் பிறப்பெடுத்து ராமபக்தனாகத் திகழ்ந்த அந்த நாளிலேயே அனுமன் முடிவு செய்துவிட்டான். அதனாலேயே “உனக்கு என்ன வேண்டும்?’ என்று ராமன் கேட்டபோது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.

“ப்ரபோ! உன் பக்தனாக உன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்’ என்று கேட்டான்.

அதாவது “ராமராம‘ என்று நாமம் சொல்லிக்கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.

நாம் நம்முன் கடவுள் தோன்றினால் இப்படியா கேட்போம். எவ்வளவோ பேர்முன் கடவுள் தோன்றத்தான் செய்திருக்கிறார்.

எவருமே அனுமன்போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே…?

என்றால் அனுமன் எத்தனை பெரியவன்?

எவ்வளவு கருணை மிக்கவன்?

நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.

பரந்த இந்த உலகில் அவனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்! அங்கே அவனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அவனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.

பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அவனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், இறுதியாகத்தான் தமிழகம்!

இவனது ரூபமே இவனது குணத்தைச் சொல்லிவிடும். தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், இவன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.

கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் இவன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். இவனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.

கைகூப்பி வணங்கியபடி இவன் இருந்தால், இவன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். இவன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன்.

நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.

தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.

இப்படி இவன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு. இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் இவன் பல இடங்களில காட்சி தருகிறான்.  அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.

இவனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி… வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.

முதலில் பழத்தைப் பார்ப்போம்.

உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது

பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.

நால்வகை நிலைப்பாடு… இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.

அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.

அது ஒரு சந்தோஷப் பிரிவு!

இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்பு என்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.

அடுத்து வடை! வடையின் பிரதான தானியம் உளுந்து. உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.

இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அவன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.

இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.

அடுத்து வெண்ணெய்.

வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.

விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.

மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.

பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.

மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.

வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம். பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.

இதுபோக வெற்றிலை மாலையும்

அனுமனுக்கு மிக விசேஷமானது. அதேபோல செந்தூரமும் மிகப் பிரியம். பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம். செந்தூரம் அவனுக்கு ஏன் பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான சம்பவம் ஒன்றுண்டு. இந்தச் சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.

இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.

அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர். அதுமட்டுமா… பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர். அனுமன்  உபாசனா மூர்த்தி. அவன் எப்படி “ராம ராம‘ என்று ஜெபித்தபடி  பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அவனை உபாசிப்பவர்களுக்கு அவன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.

பெரும் ஞானிகளுக்கு மட்டுமா அவன் வழிகாட்டி? பிஞ்சுப் பிள்ளைகளுக்கும் தான். இவனது மந்திரங்களில் “சாலீசா‘ மிக பவித்ரமானது. அனுமன் சாலீசா சொல்லும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகி எதிலும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். அனுமனின் பல உபாசனா மந்திரங்கள் அவனை கட்டி இழுத்து வீட்டுக்கே அழைத்து வந்துவிடும். அப்படி அவன் எதிர்வந்து, “அழைத்தீர்களா?‘ என்று கதையும் கையுமாக நின்று கேட்கும்போது மேனி சிலிர்த்துப் போகும்! அதெல்லாம்தான் அனுமன் மகிமை.  அந்த மகிமைகளை வரிசையாக அறிவோம்!

(தொடரும்)

ஜெர்மானியத் தொழில்நுட்பம் – முரளி கண்ணன்


பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்ஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

“ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது”

எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?

அதற்கு அவர் சொன்னார்,

நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, Factor of safety ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வோம். என்றார்.

அதாவது ஒரு பாலத்தில், 1000 டன் எடையுள்ள புகைவண்டி, 100கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 10 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.

பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.

பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும். என்றார்.

இதே போல ராணுவத்திலும் Factor of Safety என்பது, குறைந்தது ஐந்துக்கு மேல் இருக்கும். அதை மில் (mil standard) ஸ்டேண்டர்ட் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் அந்த உபகரணம் 100% திறனுடன் செயல்பட வேண்டும் என்பதால்.

Image result for willys jeep india

இந்திய ராணுவத்தில் வில்லிக்ஸ் (WILLYS) என்ற ஜீப் முன்னர் இருந்தது. தன்னுடைய பணிக்காலம் முடிந்ததும், அது ஏலத்துக்கு வரும். மக்கள் அதனை போட்டி போட்டு வாங்குவார்கள். கோவை உட்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி மற்றும் அதன் உட்பகுதி கிராமங்களில் பண்ணையார்கள் இந்த வில்லிஸ் ஜீப்பைத்தான் முன் பயன்படுத்துவார்கள். அதே போல ஆந்திரா ஜமீந்தார்கள், நிலச்சுவான்தார்கள் எல்லாம் இந்த ஜீப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

போலவே, வடமாநில கிராமங்களிலும் இந்த ஜீப்புக்கு பெரும் மவுசு உண்டு. பீகார் மாநில உயர் ஜாதியினர் தாங்கள் வைத்திருக்கும் பிரத்யேக படைகளுக்கு (ரன்வீர் சேனா போல) இந்த வாகனத்தைத் தான் பயன்படுத்துவார்கள். தங்கள் ஜாதிக்குரிய அடையாளம் அல்லது அரிவாள், கோடாலி, துப்பாக்கி போன்ற மாடல்களுடன் இந்த ஜீப்பை அலங்கரிப்பார்கள். பல திரைப்படங்களிலும் நாம் இதனைக் காணலாம். தயாரிப்பாளர் நிர்ணயித்த ஆயுட்காலம் முடிந்து பல ஆண்டு கழித்தும் சிங்கம் போல் கர்ஜிக்கும் திறன் கொண்டவை இவை.

இப்பேர்பட்ட ஜீப்பின் மைனஸ் எரிபொருள் சிக்கனம். வெயில் களைப்படைந்து வந்தவன் மண்பானைத்தண்ணீரை மடக் மடக் என்று குடிப்பதைப் போல எரிபொருளை விழுங்கும் இது.  இதற்கு காரணம் இந்த ஜீப்பின் எடை என்பதால், இந்திய ராணுவத்தினர் இதன் எடையைக் குறைத்து தங்களுக்கு வழங்குமாறு ஜெர்மானியத் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன், இந்த ஜீப்புக்கு ஐந்து கோட்டிங் பெயிண்ட் அவர்கள் அடிப்பார்கள். அதைக் குறைத்து ஒரு கோட்டிங் அடித்தாலே 50 கிலோ வரை எடை குறையும்.

ஆனால் அந்தக் கம்பெனி அதற்கு மறுத்துவிட்டது. இந்த தகவலை நான் கேட்டபோது, எனக்கு ஹென்றி போர்டின் ஞாபகம் வந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு காரணமான ட்ரான்ஸ்பர் லைன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவர் சொல்லுவார்.

“மக்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் நான் கறுப்பு நிறத்தைத் தான் அவர்களுக்கு கொடுப்பேன்”

என்று.

காரணம், தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் அவர்கள் கண்டறிந்தது, கறுப்பு நிறம் மற்ற நிறங்களை விட விரைவில் காயும் என்பதே.

பெயிண்ட் காய்வதற்காக நான் அதிக நேரம் என்னுடைய காரை தொழிற்சாலையில் நிறுத்தினால் அதன் விலை கூடிவிடும். பின் எப்படி சாமானியனும் வாங்கும் விலையில் அதைத் தர முடியும் என்பார்?

இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது ஜெர்மன் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏனென்றால் ஹிட்லர். ஆனால் ஒரு பொறியாளனாக என்னை ஜெர்மனி ஈர்த்தது என்றே சொல்லலாம்.

நாம் இந்திய, சீன, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மானிய பொருட்களை நம் வாழ்வில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நாடும், தங்களுக்குரிய ஐடியாலஜி-படி தங்கள் பொருளைத் தயாரிக்கின்றன.

China – உபகரணம் அந்த வேலையை செய்து விடும், ஆனால் தவறி விழுந்தால் கேட்கக் கூடாது. நீடித்து உழைக்குமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

Japan – இதை விட அதிக தரம் இந்த வேலைக்குத் தேவையில்லை (Optimization). (குறிப்பிட்ட அளவு கேரண்டி)

America – வேலை செய்யும். தப்பு பண்ணினா வேற தர்றோம்.

German – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.

இந்த கொள்கைதான் அவர்கள் அடிநாதம்.

எல்லோருக்கும் தெரிந்த காரை எடுத்துக் கொள்வோம்.

கார்களுக்கு உள்ளே ஓடும் வயர்களின் தூரம் குறைந்தது 5 கி மீ இருக்கும். இதற்கு டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள், 2 மிமீ தடிப்பான Insulation மற்றும் மேற்புற உரை போதுமென்று தீர்மானித்தால் (Optimization), ஜெர்மானிய Benz, Audi, Skoda, B.M.W போன்றவை 6 மிமீ திக்கான வயராக அதை தயாரிப்பார்கள். இதனால் செலவு கூடும், காரின் எடை அதிகரிக்கும் அதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கும். ஆனாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.  அதேபோல பெயிண்ட், முன்பு வில்லிக்ஸுக்கு சொன்னது போலத்தான், தாராளமாகச் செய்வார்கள். அதனால் தான். Scratch ஆனாலும் உள்ளிருக்கும் பெயிண்ட் மானம் காக்கும்.

நம் இந்தியத் தயாரிப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு, அந்தப் பொருள் எல்லா காலநிலைக்கும் தாங்குமா என்று பார்க்கமாட்டார்கள். ஐடியா கிடைத்ததும், டிசைன் செய்து, தயாரிப்புக்கு அனுப்பி விடுவார்கள். Product Development Cycle கால அளவு மிக குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஜெர்மன் கம்பெனிகளில், தாங்கள் டிசைன் செய்த பாகங்களை Prototype ரெடி செய்து கம்பெனியின் மேற்கூரையில் போட்டு விடுவார்கள். அது பனி, வெயில், மழை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். நான்கு பருவங்களும் முடிந்த பின்னர், அதனை எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அது acceptable லெவலில் இருந்தால் மட்டுமே, அதனை approve செய்வார்கள். எனவே அந்தப் பொருள் எந்தச் சூழலையும் தாங்கும்.

இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே Winter, Autumn, Summer, Spring என்று நான்கு காலநிலைகள் உள்ளன. ஆனால் இந்த விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. Summer மற்றும் Hot Summer. ஏப்ரல், மேயில் Hot Summer மற்ற மாதங்கள் Summer என்று நண்பர்கள் கலாய்த்தார்கள்.

அதே போல Factor of Safety. ஒருமுறை நான் உபயோகித்த லோட் செல் 400 டன் வரை உள்ள தாக்கும் எடையை அளக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்டது. பொதுவாக மற்ற நாட்டு தயாரிப்புகள் 300 டன் வரையே தாக்கும் எடையை நன்கு அளக்கும். அதன்பின் அதன் லீனியாரிட்டி குறையும். 400 டன்னுக்கு மேல் எடை தாக்கினால் செயல் இழந்து விடும்.

சரியாக கணக்கிடாமல், 600 டன் வரை அதில் வேகமான எடை விழும்படி தவறு செய்து விட்டேன். ஆனாலும் அது அசரவில்லை. விழுந்த எடை 600 டன் என காட்டியது. அடுத்தடுத்தும் நன்கு இயங்கியது. ஏனென்றால் அது ஜெர்மானிய தயாரிப்பு.

இதைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் கேட்டார்.

இவ்வளோ நல்லா பண்ணுறாங்க. ஆனா Software மற்றும் கணிணியில அவங்க ஒண்ணும் பெரிசா சாதிக்கலையே? என்றார்.

உடனே இன்னொருவர் சொன்னார். சிஸ்டம் ஹேங்க் ஆகுது, வைரஸ் வருது, பக் இருக்குது, அடுத்த வெர்சன்ல சரி பண்ணிடுறோன்னு சொல்லுறாங்க. அது அமெரிக்கன் ஐடியாலஜி.

ஆனா ஜெர்மன் தப்பே வரக்கூடாதுன்னு நினைப்பாங்க. அதனால் அவங்க product develop பண்றதுக்குள்ள அது outdate ஆகுதோ என்னவோ என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

Murali Kannan's Profile Photo, Image may contain: 1 person, closeup

18-Connecting the Dots… – Jay Jayaraman


Image may contain: 1 person, eyeglasses and closeup

ஜெ. முதல் முறை Driving License பெற்ற சுவையான அனுபவத்தை விளக்கும் பதினெட்டாம் அத்தியாயம்…

Getting my first driving license:

Many peers were fired. One was fired because he was tardy. He used to come to work in chappals and shorts 30 minutes late every day. Another was let go because he would take 45 minute long coffee breaks. The dust settled in 2 weeks.

It did not take a long time for a sharp manager like mine to figure out that I was a liability to him and probably the weakest link in his team. I don’t know what he saw in me but he decided to take me under his wings and help me.

My Code review meetings were a disaster. My manager shielded me. My friends sent me the code on a word document. I remember replying “ What should I do with it” when I first received the code.

I was so dumb..!

A few months went by and I now had the courage and confidence to ask my family to join me. They were scheduled to come in May 1998. I needed to get my driving license and a car. After taking driving lessons I applied with the Hollywood DMV and my test was scheduled for 3:00 pm.

I was confident and did pretty well. When we returned back to the DMV, I was handed over a F. Apparently while parallel parking I hit the curb.

I argued that I did everything else so well. The inspector said that he would have failed me otherwise because I was doing 41 on a 40 mile zone. I was disappointed. The first time I failed at something..!

I decided to reschedule . This time i scheduled my appointment for 8:00 am when traffic would be heavy so that I am forced to drive at 25 mph.  On a three lane road I was asked to change lanes to the middle lane. Then I was asked to change lanes to the right most lane. No problems.

The next instruction was to turn left at the upcoming stop light. I had to cut across two lanes and make left. The rush hour traffic in Hollywood was crazy. No one bothered to give me way. I did not want to stop completely and wait for others to give me way for the fear of the inspector failing me for blocking traffic. I skipped the left turn and took the next left turn.

When we returned the inspector handed me an F again. I was shocked and disappointed. I asked why I was failed. The inspector said that I missed a left turn. That meant I can’t buy a car. Family was coming from India that weekend.

I decided to talk my way through. This is what I told the inspector :

“Look, I am a 33 year old responsible man, married and have a kid as well. My family is coming from India. I have a lot on my hands. I will be a good driver and a careful driver. Can you please help ?

This worked like magic. The inspector took back the F and tore it to pieces and handed me a pass certificate and told me that he trusted me and had faith in me. I was elated ..!

to be continued…

ரிஷபம் – சனிப்பெயர்ச்சி – 2017


No automatic alt text available.

அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட தங்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டச்சனியைக் கொடுத்த சனி பகவான் இனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்து சனியாக வந்துள்ளார். 8-ம் மிடம் ஆயுள் மற்றும் கஷ்டத்தைக் கொடுக்கும் ஸ்தானம் என்றாலும், குருவின் வீடாகிய தனுர் ராசியில் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் பெரிதும் அச்சம் கொள்ள வேண்டாம்.

உங்களது சுய ஜாதகத்தில் சனிபகவான் நல்லநிலையில் அமர்ந்து சுப கிரஹப்பார்வை பெற்றிருந்தால் இந்த அஷ்டமசனி உங்களை பெரிதும் பாதிக்காது…!

இதுவரை உங்களது ஜாதகத்தில் ராசியை பார்த்துவந்த சனிபகவானால்
சரியான முடிவெடுப்பதில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும்.!

இருந்தும் தொலைதூர பயணங்கள், வாகனப் போக்குவரத்து, நண்பர்களுடனான பழக்கவழக்கம் முதலானவற்றில் மிகுந்த கவனம் எச்சரிக்கை தேவை.! இந்த காலகட்டத்தில் விரும்பியவர்கள் விலகி செல்வார்கள்.! விலகியவர்கள் விரும்பி அருகில் வருவார்கள்.!

அஷ்டமத்தில் சனி பகவான் வந்துவிட்டாரே என்று பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் வரும் பலன்களைப் பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம்.! புராணங்களில் கூட தவறு செய்யாதவர்களை சனிபகவான் தண்டித்ததாக வரலாறு இல்லை..!

சனிபகவான் தனுசு ராசியில் அமர்ந்து ராசிக்கு 8-ம்மிடத்தில் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் எதிலும் எச்சரிக்கை தேவை.! தேவையற்ற பேச்சுக்களை தேவையற்றோரிடம் தவிர்ப்பது நலம்.! ஏனெனில் உங்களைப்பேச வைத்து உங்களையே எதிரியாக இந்த காலகட்டத்தில் மாற்றிவிடுவார்கள்.! பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் கவனமுடனும் சிக்கனமுடனும் நடந்து கொள்வது சாலச்சிறந்தது.!

மேலும் சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்களுடைய தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் பதவி உயர்வு கிட்டும் .மேலும் உயர் பொறுப்புகள் தேடிவரும்.! இருந்தும் உத்தியோகத்தில் கவனம் தேவை.!

வேலைபளு அதிகரிக்கும்,தொழிலில் போட்டிகள் பெருகும்,இருந்தும் அச்சம் கொள்ளவேண்டாம் இந்தகாலத்தில் பொறுமை காத்து அனைவரிடத்திலும் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும்.! ஒருசிலருக்கு பணியிடை மாற்றம் ஏற்படும்.அது நல்ல மாற்றமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.!

அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியால் புதுவித முதலீடு,புதிய தொழில் தொடங்கும் முயற்சி,வாகனம் வாங்குவது,வீடு கட்டுவது உள்ளிட்ட எதிலும் எதிர்வரும் குருபெயர்ச்சிவரை ஈடுபடவேண்டாம்.! தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நலம்.!

மேலும் சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் குடும்ப சுகஸ்தானமாகிய இரண்டாமிடத்தை பார்ப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை, அடுத்த ஆண்டின் இறுதியில் பொருளாதாரத்தில் சிறு நெருக்கடி ஏற்படலாம்.! கணவன் மனைவி உறவுக்குள் மனக்கசப்பு ஏற்படும்.!

இந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது நன்மை தரும்.! சிலர் வேலையின் காரணமாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது..!

மேலும் சனிபகவான் உங்களது 10-வது பார்வையாக உங்கள் ராசிக்கு 5-மிடமான புத்திர ஸ்தானத்தை பார்க்கிறார்.! உங்களது குழந்தையின் உடல்நலனின் அக்கரை செலுத்துவது நலம்.!

நீண்டநாள் தடைபட்டுவந்த உங்களின் பிள்ளைகளின் திருமணம் நிச்சயம் நடந்தேரும்..!

சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடத்தில் 19.12.2017 முதல் 27.05.2018 வரை தனுர் ராசியில் உலா வருகின்றார்.! இந்த காலத்தில் உங்களுக்கு வரவேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலையாக வந்து சேரும்.! கொடுக்கல் வாங்களில் கவனம் தேவை.! மூன்றாம் நபரை நம்பிய எந்த செயலிலும் இறங்க வேண்டாம்..!

28-05-2018 முதல் 10-09-2018 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார்.! இந்த காலகட்டத்தில் பெண்கள் கவனமுடன் செயல்படுவது நலம்.!  வக்கிர சனி தேவையற்ற சொல்லையும் பழியையும் சேர்க்கும் எனினும் கவனமுடன் இருந்தால் இதனை தவிர்க்கலாம்.! இந்த காலகட்டத்தில் திருமணம் சார்ந்த பேச்சுக்களை தவிர்ப்பது நலம்.!

மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம்.!

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய படவாய்ப்புகள் கிட்டும்.இருந்தும் எல்லோரிடத்திலும் அரவனைத்து செல்வது நன்மை தரும்.!

அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு இந்த வருடத்தில் எதிர்வரும் சவால்கள் உங்களுக்கு ஆயிரம் உண்டு.! அதனை பக்குவத்துடன் சமாளிக்க பழகிக்கொள்வது நலம்.! மேலும் நெருக்கமானவர்களுடன் கவனமுடன் இருப்பது நலம்.! புதிய பதவிகள் பொறுப்புகள் குருவின் பெயர்ச்சி காலத்தில் தங்களை தேடிவரும்.!

எனதருமை ஊடகத்துறை நண்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிகாலத்தில் தாங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நலம்.! சிலருக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்.! வேலை பளு அதிகரிக்கும்.! உயர் அதிகாரி, நண்பர்களுடன் கவனமுடன் இருப்பது நலம்..!

ஆறுதலுக்காக சிறப்பாக இருக்கிறதென்று கூறினாலும் அஷ்டமத்து சனி பல்வேறு குழப்பங்களையும் மன உலைச்சல்களையும் இன்னல்களையும் தங்களுக்கு அளிக்கும்.! இருந்தும் வழிபாட்டின் அடிப்படையில் அந்த சனியின் தாக்கத்தினை நாம் குறைக்க இயலும்.! வாரந்தோறும் கருப்பு எள் கலந்த வெள்ளை சாதத்தை காகத்திற்கு இட்டுவர சனியால் ஏற்படும் அத்துணை துன்பங்களும் பகலவனை கண்ட பனிபோல விலகும்..!

மேலும் இந்த சனிப்பெயர்ச்சி தங்களது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தினை அளித்திட வேண்டிக்கொள்கிறேன்..!

வாழ்த்துக்களுடன்
#ஓம்_அருண்குமார்
பிரபல கணித ஜோதிடர்
70101 21277, 87548 20698

Image may contain: 2 people, people smiling, people standing