Daily Archives: January 19, 2017

மீனம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்:

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சுபபலம் பெற்றுள்ள நிலையில் இந்த ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது மீன ராசி அன்பர்களுக்கு. குடும்பத் சூழ்நிலை மன நிம்மதியை அளிக்கும். கணவர் – மனைவியரிடையே பரஸ்பரம் அன்னியோன்யம் ஓங்கும். ஒரு சிலருக்குச் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. நீதி மன்ற வழக்குகள் இருப்பின், அவற்றில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

பெண்மணிகளுக்கு மிகவும் அனுகூலமான ஆண்டிது. ஆண்டின் கடைசிப் பகுதியில் குரு அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுவதால், சிறு சிறு குடும்பப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இருப்பினும், குரு உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்குவதால், அதிக சிரமம் ஏற்படாது.

உத்தியோகம்:

உத்தியோகத் துறையினருக்கு அலைச்சலும், உழைப்பும் கடினமாக இருப்பினும், அதற்கேற்ற ஊதியமும், நிர்வாகத்தினரின் பாராட்டுதலும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சித்து வரும் மீன ராசியினருக்கு மனதிற்கு திருப்தி அளிக்கும் வேலை கிடைக்கும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியம் அபிவிருத்தியடையும்.

பொருளாதாரம்:

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை:

வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யவும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும்.

பரிகாரம்:

IMG_4557

1. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், 1008 ராம நாமம் ஜெபித்தல், கைமேல் பலன் அளிக்கும்.

2. திருப்பதி – திருமலை, திருப்பூர் – திருப்பதி, மடிப்பாக்கம், ஒப்பிலியப்பன் கோவில் ஆகிய திருவேங்கடவன் திருக்கோயில்களில் எவை முடிகிறதோ அவற்றை ஒரு முறை தரிசனம் செய்து விட்டு வரவும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்