Daily Archives: January 16, 2017

கும்பம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)

குடும்பம்:

ஜூன் மாதம் முடியும் வரை கும்ப ராசியினருக்கு ஓரளவே நன்மைகள் ஏற்படும். அதன்பிறகு இப்புத்தாண்டு முடியும்வரையில் படிப்படியாகப் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் குருபகவான் சுபபலம் பெறுவதால், முயற்சிகள் வெற்றி பெறும். நீதிமன்ற வழக்குகள் எவ்வித முடிவும் ஏற்படாமல் நீடிக்கும். கணவர் – மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதங்களும், அதனால் மனதில் வேதனையும் ஏற்படும்.

கும்ப ராசியில் ஜெனித்துள்ள பெண்மணிகளுக்கு ஆண்டின் பிற்பகுதி நன்மையை அளிக்கும். முற்பகுதியில், குடும்பச் சூழ்நிலையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உறவினர்களின் தேவையற்ற தலையீடு இருக்கும்போது, பொறுமை காத்தல் நல்லது. வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகப் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம்.

உத்தியோகம்:

அலுவலகப் பொறுப்புகள் கூடும். மேலதிகாரி ஒருவரால் சிரமங்கள் ஏற்படும். எவ்வளவுதான் உழைத்தாலும், நிர்வாகத்தினரை திருப்திபடுத்த இயலாது. நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மறுக்கப்படும். ஒரு சிலருக்கு விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

ஆரோக்கியம்:

அவ்வப்போது சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் குணமாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

பொருளாதாரம்:

வருமானம் ஒரே சீராக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. செப்டம்பர் மாதம் குருபகவான் சுபபலம் பெறுவதால், நிதி நிலைமையில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய கடன்களினால் கவலை ஏற்படும்.

அறிவுரை:

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கைப்பணத்தை அளவோடு செலவு செய்யுங்கள். உணர்ச்சி வசப்படுவதையும், அவசர முடிவுகளையும் தவிர்க்கவும்.

பரிகாரம்:

Ramanujar_ma_se

1. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் ராமானுஜரின் தானுகந்த திருமேனி தரிசனம்.

2. திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தரிசனம்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements