மகரம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)

குடும்பம்:

மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு பல நன்மைகளை அளிக்கும்படி, கிரக நிலைகள் அமைகின்றன. சனி, குரு ஆகிய இரு சக்தி வாய்ந்த கிரகங்கள் சுபபலம் பெற்று சஞ்சரிக்கின்றனர். குடும்பச் சூழ்நிலை நன்கு அமையும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை நிலவும். புதிய ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டு. திருமண முயற்சிகளை மேற்கொள்வதற்கு சாதகமான புத்தாண்டு இது.

குடும்ப பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு இது என உறுதியாகக் கூறலாம். குடும்ப ஒற்றுமை மன நிறைவை அளிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் வகையில் கிரக நிலைகள் அமைந்துள்ளன.

உத்தியோகம்:

யோக பலன்களை அளிக்கும் வகையில் சஞ்சரிக்கின்றனர் – சம்பந்தப்பட்ட கிரக நாயகர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். மேலதிகாரிகளின் ஆதரவு நீடிக்கிறது. சிலருக்கு சிறு பதவி உயர்வும், அதன் காரணமாக ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சலுகைகள் கூடும். தாய்நாடு திரும்பும் எண்ணம் இருப்பின் அது நிறைவேறும்.

ஆரோக்கியம்:

அஷ்டம ராசியான சிம்மத்தில் நிலை கொண்டுள்ள ராகுவும், ஜூலை மாதத்தில் சப்தம ஸ்தானமாகிய கடகத்திற்கு மாறி விடுவதால், உடல் நலனில் இது வரை ஏற்பட்டு வந்த பல உபாதைகள் நீங்கி விடும்.

பொருளாதாரம்:

நிதி நிலைமை செப்டம்பர் மாதம் வரை திருப்திகரமாகவே உள்ளது. வருமானம் உயரும்.

அறிவுரை:

ஜூலை மாதம் வரை ராகு அஷ்டமத்தில் உள்ளதால் உடல் நலனில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்:

1.கரூரை அடுத்த தேவர்மலை ஸ்ரீ நரசிம்மப் பெருமான் தரிசனம்.

2.திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் தரிசனம். பௌர்ணமி தினத்தன்று தரிசித்தல் அதிக பலனை அளிக்கும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s