விருச்சிகம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(விசாகம் 4ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:

நினைத்ததை சாதிக்கும் திறமையிருந்தும், முன்கோபம் மற்றும் பிடிவாதம் ஆகிய காரணங்களினால், பலரது பகைமையைத் தேடிக் கொள்ளும் விருச்சிக ராசியினருக்கு, தற்போது ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறும் தருணத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. செப்டம்பர் மாதம் வரையில் குருபகவான் அனுகூலமாக இருப்பதால், குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும்.

கணவர் – மனைவியரிடையே அன்னியோன்யம் நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்குச் சொந்த வீடு அமையும்  வாய்ப்பும் இப்புத்தாண்டின் முதல் பகுதியான ஜூன் 30-ம் தேதி வரை உள்ளது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அவரில் சாதகமான தீர்ப்பு கிட்டும். முயற்சிகள் பலனளிக்கும்.

பெண்மணிகளுக்கு ஆண்டின் பிற்பகுதியை விட (ஜூலை –  டிசம்பர்  – 2017) முற்பகுதி (ஜனவரி 1 – ஜூன் 30 – 2017) அதிக நன்மைகளைத் தரும். பணிக்குச் சென்று வரும் பெண்களுக்கும் இது பொருந்தும்.

உத்தியோகம்:

உத்தியோகத் துறையினருக்கு அலுவலகத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகவும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை காரணமில்லாமல் மறுக்கப்படக்கூடும். ஜூலை மாதத்திற்குப் பிறகு நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதைக் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. வெளிநாடுகளில் பணியாற்றி வரும் விருச்சிக ராசி அன்பர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.

பொருளாதாரம்:

குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளினால் செலவுகள் அதிகமாக இருப்பினும், அவற்றை சமாளிப்பதில் எவ்வித பிரச்சினையும் இராது.

அறிவுரை:

ஆண்டின் பிற்பகுதியில் பணத் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளதால், முதல் பகுதியிலேயே சற்று சிக்கனமாக இருத்தல் நல்லது.

பரிகாரம்:

1. காலை மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீதன்வந்த்ரி ஸ்தோத்திரம் சொல்லி வரவும்.

2. இத்துடன் ஆதித்ய ஹ்ருதயம் படித்து வருவதும் அதிக நன்மையளிக்கும்.

3. ஏகாதசி உபவாசம் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s