Daily Archives: January 11, 2017

தனுசு: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

குடும்பம்:

குரு பகவானின் பூரண அருள் பெற்ற தனுர் ராசி அன்பர்களுக்கு, முக்கிய கிரகங்களான சனி, ராகு, குரு ஆகியவை அனுகூலமற்று சஞ்சரிக்கும் நிலையில் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய விருச்சிகத்தில் நிலை கொண்டிருக்கும் சனி பகவான், உங்கள் ஜென்ம ராசியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார். குரு பகவான் தங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் உடனுக்குடன் நிவர்த்தியும் ஆகும். ஆண்டின் முதல் பாதியை விட பிற்பாதி பெண்மணிகளுக்கு அதிக நன்மையைத் தரும். கூடிய வரையில், கற்பனையான கவலைகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகம்:

புத்தாண்டின் முற்பகுதியைவிட, பிற்பகுதி அதிக நன்மையளிக்கும். கூடியவரையில், ‘தான் உண்டு; தன் வேலையுண்டு’ என்றிருப்பதும், சக ஊழியர்களின் சொந்தப் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் உங்களுக்கு நன்மையைத் தரும்.

ஆரோக்கியம்:

ஜூன் மாதம் முடியும் வரை ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கடகத்திற்கு மாறுவதால், புத்தாண்டின் இரண்டாம் பகுதியில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும்.

பொருளாதாரம்:

வருமானத்தை விடச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக் கூடும்.

அறிவுரை:

ஆண்டின் பிற்பகுதியில் உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம். அஷ்டம ஸ்தான சஞ்சார ராகுவினால் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.

பரிகாரம்:

srirangam2

1) தினமும் ஸ்ரீ தன்வந்த்ரி மற்றும் மிருத்யுஞ்சய ஸ்தோத்திரம் சொல்லி வரவும்.

2) ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வாமி தரிசனம்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

விருச்சிகம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(விசாகம் 4ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:

நினைத்ததை சாதிக்கும் திறமையிருந்தும், முன்கோபம் மற்றும் பிடிவாதம் ஆகிய காரணங்களினால், பலரது பகைமையைத் தேடிக் கொள்ளும் விருச்சிக ராசியினருக்கு, தற்போது ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறும் தருணத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. செப்டம்பர் மாதம் வரையில் குருபகவான் அனுகூலமாக இருப்பதால், குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும்.

கணவர் – மனைவியரிடையே அன்னியோன்யம் நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்குச் சொந்த வீடு அமையும்  வாய்ப்பும் இப்புத்தாண்டின் முதல் பகுதியான ஜூன் 30-ம் தேதி வரை உள்ளது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அவரில் சாதகமான தீர்ப்பு கிட்டும். முயற்சிகள் பலனளிக்கும்.

பெண்மணிகளுக்கு ஆண்டின் பிற்பகுதியை விட (ஜூலை –  டிசம்பர்  – 2017) முற்பகுதி (ஜனவரி 1 – ஜூன் 30 – 2017) அதிக நன்மைகளைத் தரும். பணிக்குச் சென்று வரும் பெண்களுக்கும் இது பொருந்தும்.

உத்தியோகம்:

உத்தியோகத் துறையினருக்கு அலுவலகத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகவும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை காரணமில்லாமல் மறுக்கப்படக்கூடும். ஜூலை மாதத்திற்குப் பிறகு நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதைக் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. வெளிநாடுகளில் பணியாற்றி வரும் விருச்சிக ராசி அன்பர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.

பொருளாதாரம்:

குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளினால் செலவுகள் அதிகமாக இருப்பினும், அவற்றை சமாளிப்பதில் எவ்வித பிரச்சினையும் இராது.

அறிவுரை:

ஆண்டின் பிற்பகுதியில் பணத் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளதால், முதல் பகுதியிலேயே சற்று சிக்கனமாக இருத்தல் நல்லது.

பரிகாரம்:

1. காலை மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீதன்வந்த்ரி ஸ்தோத்திரம் சொல்லி வரவும்.

2. இத்துடன் ஆதித்ய ஹ்ருதயம் படித்து வருவதும் அதிக நன்மையளிக்கும்.

3. ஏகாதசி உபவாசம் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்