Daily Archives: January 7, 2017

துலாம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(சித்திரை 3ம் பாதம் முதல், ஸ்வாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்:

துலா ராசி அன்பர்களுக்கு 2017 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை சிரமங்கள் நீடித்தாலும், அவற்றின் கடுமை படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். ஏழரைச் சனியின் கடைசிப் பகுதி நீடித்தாலும், சனிபகவான் தனுர் ராசியை நெருங்கிக் கொண்டே இருப்பதால், குடும்பத்தில் நிலவிய அமைதியின்மை ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து நீங்கி விடும்.

திருமண முயற்சிகளில் தடங்கலும், தாமதமும் சிறிது ஏற்படக்கூடும். நீதிமன்ற விவகாரங்கள் நீடிக்கும். பெண்மணிகள் இந்தாண்டு ஓரளவே நன்மைகளை எதிர்பார்க்கலாம். வேலை பார்க்கும் பெண்களுக்குச் சுமாரான வருடமிது.

உத்தியோகம்:

உத்தியோகத் துறையினருக்கு பொறுப்பும், வேலைச்சுமையும் கூடும். துலாம் ராசி என்பது சனி பகவானின் திருவுள்ளம் உகந்த உச்ச வீடு என்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். ஜூலை மாதத்திற்குப் பிறகு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்கும் சாத்தியக் கூறு உள்ளது.

ஆரோக்கியம்:

உடல் உபாதைகள் குறைந்து, ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி காண முடியும்.

பொருளாதாரம்:

வீண் செலவுகள் நீடித்தாலும், வருமானம் திருப்திகரமாக இருப்பதால், குடும்ப நிர்வாகத்தைச் சமாளித்து விடுவீர்கள்.

அறிவுரை:

சனி பகவான் மற்றும் குருபகவான் ஆகிய இரு முக்கிய கிரகங்களும் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

பரிகாரம்:

poovarasankuppam-sri-lakshminarasimha-perumal

1. பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தரிசனம் சிறந்த பரிகாரமாகும்.

2. காலை, மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி, ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்து வரவும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements