Daily Archives: January 5, 2017

கன்னி: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(உத்திரம் 2-ம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)

குடும்பம்:

ஜென்ம ராசியில் குரு பகவானும், விரயத்தில் ராகுவும் அனுகூலத்தைத் தரும். விருச்சிக ராசியில் சனி பகவானும், சுபபலத்துடன் கேது கும்பராசியிலும் சஞ்சரிக்கும் காலகட்டத்தில், ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. ஜூன் மாதம் முடியும்வரை அளவோடு நன்மைகள் ஏற்படும். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானின் கருணையினால் முயற்சிகளில் பலன் கிட்டும்.

பெண்மணிகள், ஜூலை முதல் வாரத்திலிருந்து சிறந்த யோக பலன்களை எதிர்பார்க்கலாம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு ஓரளவு நன்மை செய்யும் ஆண்டு இது.

உத்தியோகம்:

இப்புத்தாண்டில் பல நன்மைகள் காத்துள்ளன. தசா, புக்திகளில் அடிப்படையில் பலருக்கு வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்து வரும் கன்னி ராசியினருக்கு அதிக முயற்சியின்றி எளிதில் மனதிற்கு நிறைவு தரும் வேலை கிடைக்கும். ஏற்கனவே வெளிநாடுகளில் பணியாற்றி வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமும், அதன் மூலம் வருமான உயர்வும் கிட்டும்.

ஆரோக்கியம்:

ராகுவின் நிலையினால் அவ்வப்போது சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படுக்கூடும். ஆயுட்காரகரான சனிபகவான் அனுகூலமாக இருப்பதால், கவலைப்படும் அளவிற்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

பொருளாதாரம்:

குடும்பத்தில் பெரிய பிரச்சினை என்று எதுவும் ஏற்படாவிட்டாலும், வரவும், செலவும் சமமாகவே இருக்கும். சில தருணங்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அறிவுரை:

ஜென்ம ராசியில் குருவும், விரயத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் புத்தாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் அதிக அலைச்சலும், கடின உழைப்பும் ஏற்படும். எனவே எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:

img_0146

வியாழக்கிழமைகளில் திருக்கோயில் ஒன்றில் மாலையில் பசுநெய் தீபமேற்றி வருதல், மகான்களின் பிருந்தாவன (ஜீவசமாதி) தரிசனம், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல் போன்ற பரிகாரங்கள் நல்ல பலனளிக்கும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements