Daily Archives: January 3, 2017

சிம்மம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்:

சென்ற சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சனி பகவானின் அர்த்தாஷ்டக சஞ்சார தோஷத்தினால், பல சோதனைகளையும், பிரச்சினைகளையும் கடந்து வந்துள்ள சிம்ம ராசியைச் சேர்ந்த அன்பர்களுக்கு, இந்த ஆங்கில புத்தாண்டு பல அனுகூலங்களை அளிக்கவுள்ளது.

தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள், நிம்மதியிமை, நெருங்கிய உறவினர்களிடையே ஏற்பட்டு வந்த பரஸ்பர பகையுணர்வு ஆகியவை நீங்கி, மனதில் நிம்மதி ஏற்படும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டு வந்த தடங்கல்கள் நீங்கும்.

இந்த ஆண்டில் ஏற்படும் கிரக மாறுதல்களின் நற்பலன்களை சிம்மராசி பெண்மணிகள் பரிபூர்ணமாகப் பெற்று மகிழ்வர். குடும்பத்திலும், அலுவலகத்திலும் பல்வேறு சோதனைகளைச் சகித்துக் கொண்டு வந்த உங்களுக்கு இனி நல்ல காலமே.

உத்தியோகம்:

உத்தியோகத்திற்கு ஆதிபத்தியம் பெற்றுள்ள சனிபகவான், அர்த்தாஷ்டக ராசியான விருச்சிகத்தின் பெரும்பகுதியைக் கடந்து, தனுர் ராசியை நெருங்கிக் கொண்டிருப்பதால், உத்தியோகத்தில் ஏற்பட்டு வந்த ஏமாற்றங்கள், சிரமங்கள் ஆகியவை படிப்படியாக இப்புத்தாண்டில் குறைந்து, ஆண்டு இறுதியில் அடியோடு மறைந்து சிறந்த முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியம்:

முக்கியமாக ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதாரம்:

நிதி நெருக்கடி தளரும்.

அறிவுரை:

ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு அர்த்தாஷ்டக தோஷம் குறைந்த அளவில் நீடிப்பதால், உடல்நலனில் சற்று கவனமாக இருந்தால் போதும்.

பரிகாரம்:

img_4557

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், ஸ்ரீ தன்வந்திரி ஸ்தோத்ரம், ஸ்ரீ மிருத்யுஞ்சய ஸ்தோத்திரம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றைச் சொல்லி வாருங்கள். போதும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements