கடகம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்:

இப்புத்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. சென்ற சுமார் இரண்டு ஆண்டுகளாகவே நீங்கள் பல கடுமையான துன்பங்களுக்கு ஆளாகியிருப்பதைக் கிரகநிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்திலிருந்து நீங்களே எதிர்பாராத நல்ல திருப்பம் ஒன்று ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

உத்தியோகம்:

ஜூன் மாதம் முடியும் வரை சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனுகூலமாக இல்லை. பொறுப்புகளில் அதிக கவனம் அவசியம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் விவாதிக்க வேண்டாம். பணிக்குச் சென்று வரும் பெண்களுக்கு சிறப்பான ஆண்டு இது.

ஆரோக்கியம்:

ஏப்ரல் மாதத்திலிருந்து நீங்களே எதிர்பாராத நல்ல திருப்பம் ஒன்று ஏற்படும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். பெண்மணிகளுக்கு இந்த ஆண்டின் முதல் பாதியைவிட, இரண்டாம் பாதி அதிக நன்மைகளைத் தரும். இருப்பினும், ராகுவின் சஞ்சார நிலையினால், உடல்நலனில் சற்று கவனமாக இருங்கள்.

பொருளாதாரம்:

ஏப்ரல் மாதத்திலிருந்து நீங்களே எதிர்பாராத நல்ல திருப்பம் ஒன்று ஏற்படும். நிதிப்பற்றாக்குறையினால் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது என்று கூறலாம். உதவிகள் தேடி வரும். பொருளாதாரம் படிப்படியாக சீர்பட ஆரம்பிக்கும். கடங்களினால் ஏற்பட்ட பிடி தளரும்.

அறிவுரை:

நிதி நிலைமை நன்றாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை செய்யாமல் இருப்பது அவசியம்.

பரிகாரம்:

IMG_4588

1. தினமும் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரின் மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள்.

2. வசதியிருப்பின், பூவரசன்குப்பம், பரிக்கல், அபிஷேகப்பாக்கம், மேல்கோட்டை ஆகிய திருத்தலங்களில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று தரிசித்துவிட்டு வரவும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s