121-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


photo (19)

ஒரு சமயம் மஹாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்ட மகாபெரியவா, அங்கே தனக்கு பணிவிடை செய்வதற்காக ஜமீன்தார் ஒருவரால் அனுப்பப்பட்ட பவார் என்ற இளைஞனை தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்பினார். ஜமீந்தார் அதற்குச் சம்மதிக்கவே பவார், பரமாச்சார்யாளின் அணுக்கத் தொண்டனாக மடத்திலேயே சேர்ந்தான்.

ஒரு சமயம் பவார் தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்ல ஆசைப்பட்டபோது, அவனுக்கு தாமே திருப்பதி பெருமாளாக தரிசனம் தந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மற்றொரு சமயம் வடநாட்டு யாத்திரை சமயத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் பரமாச்சாரியார் திடீரென்று எங்கோ செல்லப் புறப்பட்டார். தன்னோடு பவாரைத் தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டு மளமளவென்று நடந்தார்.

அடர்த்தியாக காடுபோல இருந்த மலைப்பிரதேசம் ஒன்றின் வழியாக சிரமப்பட்டு பாதை கண்டுபிடித்து நடந்த பெரியவா, அங்கே இருந்த ஒரு குகைக்கு முன் சென்றதும் நின்றார்.

பவாரைப் பார்த்து, “நீ முதலில் போய்விட்டு வருகிறாயா?” என்று குகை வாயிலைக் காட்டினார். இருட்டாக இருந்த அந்த குகைக்குள் ஏதாவது விஷ ஜந்துகள் இருக்கலாம் என்று பயந்த பவார் தயங்கினான். உடனே மளமளவென்று குகைக்குள் போனார் பரமாச்சார்யாள். கொஞ்ச நேரம் கழித்து, எதையோ பார்த்துவிட்டு வந்த பரமானந்தம் தேஜஸாக முகத்தில் பிரகாசிக்க வெளியே வந்த பரமாச்சார்யாள், பவாரைப் பார்த்து, ‘இப்போது போய் பார்க்கிறாயா?’ என்பது போல ஜாடை காட்டினார்.

ஆச்சார்யாளே போய்விட்டு வந்த பிறகு நாம் அச்சப்பட வேண்டியதில்லை என்று நினைத்து, அப்படி என்னதான் உள்ளே இருக்கிறது என்ற எண்ணத்தோடு குகைக்குள்ளே போனான் பவார். அங்கே அவன் கண்ட காட்சி அவனை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இருட்டான குகையின் மையப்பகுதியில், கோடி சூர்ய பிரகாசத்துடன், அந்த இடமே தங்கம் போல ஜொலிக்க, நடுவில் சின்ன மேடை போல் இருந்த ஒரு கருங்கல் பீடத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார் அனுமன். அவரைப் பார்த்ததும் பவாரின் உடல் நடுங்கியது. உள்ளம் ஜில்லிட்டது. ராம்… ராம்.. ராம்.. என்றபடியே குகையை விட்டு வெளியே வந்தான் பவார்.

‘என்ன பார்த்துட்டியா?’ என்று மட்டுமே கேட்டார். ஆமாம் என்பது போல தலையை வேகமாக அசைத்தான் பவார்.

அமைதியாக புன்னகைத்த ஆச்சார்யாள், “வா, போகலாம்!” என்று அவனை அழைத்துக் கொண்டு தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பி வந்தார்.

பரமாச்சார்யாளாலேயே பக்த ஆஞ்சநேயரைக் காணும் பாக்யம் பெற்ற பவார் பிறகு சொன்ன அடையாளத்தின் அடிப்படையில் வரையப்பட்ட அனுமன் படம்தான் இது.

fullsizerender-22

 

ராமநாமத்தை மனதார ஜபித்தபடி இந்த அனுமனை வணங்குங்கள். உங்கள் இருப்பிடம் தேடி சூட்சும உருவில் வந்து, சுபிட்சங்கள் அனைத்தையும் அருள்வான் அந்த ராமபக்த அனுமான்!

(இந்த வார குமுதம் பக்தி ஸ்பெஷலில் இருந்து)

மஹா பெரியவா அருள்வாக்கு : –

 • அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா ? அச்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்.
 • எந்த வீட்டில், யார் இறக்கும் தறுவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.
Advertisements

2 thoughts on “121-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. nparamasivam1951 December 16, 2016 at 3:01 AM Reply

  சில்லிடவைக்கும் அனுபவம் பெற்றேன்.

 2. vasanth99in December 16, 2016 at 9:48 AM Reply

  Thank u Mohan

  Muralidharan

  Sent from my iPhoneS. MURALIDHARAN

  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s