7-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

நான்காவது ரூல்: காலை உணவு என்பது அவசியம் இல்லை. பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டா போதும்.”

அப்ப டையத்துக்குச் சாப்பிட வேண்டாமா?”

ஒரு சிம்பிள் கேள்வி – கடைசியாய் எப்ப உங்களுக்குப் பசித்தது?”

புரியலையே…”

சரி நேற்று என்ன சாப்பிட்டீங்க?”

பிரேக் ஃபாஸ்ட், அப்புறம் காபி, மத்தியானம் சாப்பாடு, அப்புறம் ஒரு காபி… நாலு மணிக்கு பிஸ்கெட், டீ, அப்புறம் இரவு உணவு… படுக்கப் போகும் முன் பால். ”

இப்படி சாப்பிட்டா பசியை எப்படி உணர்வீங்க? பசி என்பது வேறு, சாப்பிடணும் போல இருக்கு என்பது வேறு.”

பசி வயித்தைக் கிள்ளுது என்று சொல்லுவார்களே.”

ஆமாம். இப்ப இருக்கும் ஜெனரேஷன் பசியை உணராதவங்க. ஏன் தெரியுமா? எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள்.”

இதுக்கும் நீரிழிவுக்கும் என்ன தொடர்பு?”

உடல் பருமன், நீரிழிவு என்று பல பிரச்னைகள் வர இதுதான் முக்கிய காரணம். முன்பு சொன்ன லைஃப் ஸ்டைல்.”

எப்படி?”

நீங்க சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்தான் பெரிய கம்பெனிகளுக்கு வியாபாரம் நடக்கும். டி.வி, நியூஸ் பேப்பர் விளம்பரங்கள் மூலம் மெதுவா நம்மை பிரெயின்வாஷ் செய்துட்டாங்க.”

ஆமாம்.”

சாப்பிடலைன்னா மோசமான பின்விளைவுகள் வரும் என்று பயமுறுத்துகிறார்கள். உதாரணங்கள் –

காலை உணவு மிக முக்கியமான உணவு.

வயத்த காயப்போடக் கூடாது; வயத்துல ஏதாவது இருந்துகொண்டே இருக்கணும்.

நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். சாப்பாட்டை மிஸ் பண்ணா அவ்வளவு தான்.

இரவு வெறும் வயிற்றில் படுக்கக் கூடாது.

ஜூஸ், பால், ஓட்ஸ், பிரெட் எல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லது.”

இது எல்லாம் சரி இல்லையா?”

நிச்சயமா இல்லை. ‘பிரேக் ஃபாஸ்ட்’ அப்படினா என்ன? ‘Breaking the fast‘ அவ்வளவுதான். அதாவது முதல் நாள் இரவு சாப்பிட்ட பின் தூங்கிடுறீங்க. மறுநாள் காலை எழுந்த பின் ஃபாஸ்டிங்கை முடிவு செய்யறீங்க. அவ்வளவுதான்!”

முக்கியம் இல்லையா?”

முக்கியமா இல்லையா என்பது இல்லை, உங்களுக்கு காலை எட்டு மணிக்குப் பசிக்கலைனா சாப்பிடாதீங்க. காலை உணவைச் சாப்பிடாதீங்கன்னு சொல்லலை. அதைக் கடமையா செய்யாதீங்கனு சொல்றேன். இப்ப இந்தப் படத்தைப் பாருங்க புரியும்.”

காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிக்கு ஒரு முறை ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம்.”

காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை நாம கார்ப்ஸை சாப்பிடுவதால் குளுக்கோஸ் அதிகமாகி இன்சுலின் சுரந்துகொண்டே இருக்கு.”

ஆனா டாக்டர், நீரிழிவு உள்ளவங்க மூன்று வேளை சாப்பாட்டைப் பிரித்து ஆறு வேளையா சாப்பிடச் சொல்றாங்களே? ஏதாவது பழம், பிஸ்கெட் அல்லது சுண்டல்?”

நீங்களே பார்த்தீங்க, இப்படிச் சாப்பிட்டா ரத்தத்தில் இன்சுலின் இருந்துகொண்டே இருப்பதால இன்சுலின் எதிர்ப்பு அப்புறம் நீரிழிவு, உடல் பருமன் என்று எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வருது.”

ஸ்நாக்ஸ் இல்லாம மூன்று வேளை சாப்பிட்டா இன்சுலின் கம்மியாகிறது. அதுதான் நல்லது; உடம்புக்கு நல்லது.”

வீட்டு மின்விசிறியைத் தொடர்ந்து ஓடவிட்டால் சீக்கிரம் பழுதாகிவிடும். ஆனா தேவைப்படற போது அதை உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும். நம் உடம்பும் அதே மாதிரிதான்.”

ஆமாம். முக்கியமா நல்லா பசிக்கும்போது சாப்பிடணும். பசிக்கிற மாதிரி இருந்தா எல்லாம் சாப்பிடக் கூடாது.”

பசித்தால் மட்டுமே சாப்பிட்டா ஆரோக்கியம் என்று திருவள்ளுவர் கூட சொல்லியிருக்கார்.”

ஓ அப்படியா?”

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துக்கது வரப் பசித்து

– அதாவது ஒரு தடவை சாப்பிட்டு செரித்தபின் நன்றாகப் பசித்தபின் நமக்கு ஒத்துக்கொள்ளும் உணவை அறிந்து உண்ண வேண்டும்.”

பாருங்க டாக்டர் சொல்லவேண்டியதை திருவள்ளுவர் இரண்டு வரியில் நச்சுன்னு சொல்லிட்டார்.”

இன்னும் நினைவு இருக்கு, சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்டா, ‘ராத்திரி சாப்பாடு சாப்பிடமாட்டே, அதனால், ஒன்றும் கிடையாது’ என்பாள் பாட்டி.”

ஆமாம், இன்னிக்கு பள்ளியிலிருந்து வரும் போதே நாம நம்ம குழந்தைகளுக்கு பிஸ்கெட், ஜூஸ் என்று பழக்கறோம்!”

என்னதான் டாக்டர் சாப்பிடுவது என்று அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்களைப் பார்த்து விடலாம்.”

டீ, காபி சாப்பிடலாமா?”

சர்க்கரை இல்லாமல் பிளாக் டீ, பிளாக் காஃபி, கிரீன் டீ, லெமன் டீ இவை எல்லாம் குடிக்கலாம். பால் கூட இல்லாமல் குடித்தால் பெட்டர்.”

பால் இல்லாமலா?”

ஆமாம். அதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.”

எந்தப் பழமும் சாப்பிடக் கூடாதா?”

டயபடீஸ் இல்லை என்றால் சாப்பிடலாம். தினமும் சாப்பிடுவது நல்லதில்லை.”

டயபடீஸ்காரர்களுக்கு ஏதாவது பழம் இருக்கா?”

அவகோடாபழம், ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கேன்பெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.”

எங்கே கிடைக்கும்?”

பார்க் செய்தவுடன் செக்யூரிட்டி வந்து கார் கதவைத்திறந்துவிடும் கடைகளில் கிடைக்கும்.”

விலை அதிகமாக இருக்கே.”

ஆமாம், நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் டயபடீஸ் மாத்திரையைக் கணக்கு செய்தால் இதற்கு ஆகும் செலவு குறைவுதான்.”

கடலை, முந்திரி வகைகள்?”

வறுத்த வேர்க்கடலை பத்து ரூபாய்க்குச் சாப்பிடலாம், தினமும் வேண்டாம். முந்திரியை டப்பாவில் கொட்டும்போது சிதறிக் கீழே ஒன்று இரண்டு விழுந்தால் அதை வாயில் போட்டுக்கொள்ளலாம்.”

தினமும் எதைச் சாப்பிடலாம்? ”

பாதாம், அக்ரூட்(வால்நட்), பிஸ்தா தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடலாம். கறுப்புப் பணம் இருந்தால் மேலும் இரண்டு கைப்பிடி சாப்பிடலாம்.”

காய்கறி வகை?”

சைவம் என்றால் வெண்டை, முட்டைக்கோஸ், கத்திரி, சுரைக்காய், பீர்க்கங்காய், புடலை, வெள்ளரி, கோவைக்காய், குடைமிளகாய், காலிப்ஃபிளவர் இவை எல்லாம் சாப்பிடலாம். கொஞ்சமாக பீன்ஸ், அவரை, கொத்தவரை, காராமணி, கேரட் எடுத்துக் கொள்ளலாம்.”

அசைவம்?”

மீன், முட்டை, இறைச்சி எல்லாம் சாப்பிடலாம்.”

பனீர், சீஸ், பட்டர், நெய்?”

இவை எல்லாம் தாராளமாகச் சாப்பிடலாம்.”

என்ன எண்ணெய்யில் சமைக்கலாம்?”

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணுங்க.நிச்சயமா வெஜிடபிள் ஆயில் கூடவே கூடாது.”

கோவிச்சிக்காதீங்க எந்த ஜூஸும் எடுத்துக்கக் கூடாதா?”

ரகசியம் சொல்கிறேன். லெமன் ஜூஸ் உப்புடன் எடுத்துக்கொள்ளலாம்.”

இவை எல்லாம் சாப்பிட்டால் அஜீரணம் ஆகாதா?”

ஆகவே ஆகாது. முதல் நாள் சிலருக்கு வயிறு சங்கடம் செய்யலாம். இவ்வளவு நார்ச்சத்து சாப்பிடுவதால் ஜீரணமாகி, எனர்ஜடிக்காக காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போய் சந்தோஷமாக இருப்பீர்கள். நம்புங்கள்.”

கேட்க மறந்துவிட்டேன், டேட்ஸ் சாப்பிட்டால் இரும்புச்சத்து என்று சொல்லுகிறார்களே?”

100 gm பேரீச்சம்பழத்தில் 1 mg இரும்புச்சத்து இருக்கிறது. கூடவே இலவச இணைப்பாக 75 gm carb வந்து தொலைக்கிறது. அதாவது 19 ஸ்பூன் சர்க்கரை! இரும்புச்சத்து வேண்டும் என்றால் கீரையைச் சாப்பிடுங்கள்.”

அப்பாடா கீரை சாப்பிடலாமா?”

எல்லாக் கீரையும் எடுத்துக்கொள்ளலாம். கீரைப்பொரியல், கூட்டு என்று தினமும் சேர்த்துக் கொள்ளலாம். பாலக்கீரை 100 gm சாப்பிட்டால் அதில் 2.7 mg இரும்புச்சத்து இருக்கிறது! carb வெறும் 3.6 gm!

பிஸிபேளாபாத் மாதிரி எதுவும் இல்லையா?”

அரிசி இல்லாமல் செய்யலாம் (பார்க்க செய்முறை).”

தேங்காய் உண்டா?”

தாராளமாக ஒரு மூடி தேங்காய் சாப்பிடலாம்!”

அப்ப சுண்டலுக்கும் தேங்காய் போட்டுச் சாப்பிடலாம்தானே?”

hanumanji

கொண்டைக்கடலை, பயறு வகைகள், சென்னா, ராஜ்மா எல்லாம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கொடுப்பது மாதிரி சின்ன தொன்னையில் வாரத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம்.”

சிக்கன்?”

சிக்கனுக்கு சம்மதம் என்றால் தாராளமாய் சாப்பிடலாம்.”

என் நண்பனுக்கு கல்யாணம், அப்புறம் ஒரு நிச்சயதார்த்தம் வேற வருகிறது. அங்கே என்ன சாப்பிடலாம்?”

மேலே சொன்னவற்றை எல்லாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுங்கள்.”

டாக்டர் இந்தக் காய், இலை, தழை எல்லாம் சாப்பிட்டால் ஆடு, மாடு மாதிரியே உணர்கிறேன்?”

உணர்ச்சி இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்!

ஐந்தாவது ரூல் – விரதம் இருங்க.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

-நன்றி கல்கி

LCHF (Low Carb High Fat) பிஸிபேளாபாத் செய்யும் முறை :

காலிஃபிளவர் ரைஸ்: காலிஃபிளவர் மீடியம் சைஸ் பூவை சின்னச் சின்னதாக உடைத்து கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிஷம் போட்டு, பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் – இதுதான் அரிசிக்கு பதிலாக நீங்கள் உபயோகிக்கப் போகும் ‘காலிஃபிளவர் ரைஸ்.

பிஸிபேளாபாத் மசாலாப் பொடி செய்யும் முறை: தனியா 4 தேக்கரண்டி; கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி; வெந்தயம் – 1/2 தேக்கரண்டி; சிவப்பு மிளகாய் – 5; பெருங்காயம் சிறிது. ஏலக்காய், பட்டை, லவங்கம் – இரண்டு. இவற்றை வறுத்து ஒரு கரண்டி தேங்காயுடன் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பு 1/4 கப் தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் கடுகு தாளித்து, இரண்டு வெங்காயம், தக்காளி நறுக்கி, வதக்கி, LCHF  (Low Carb High Fat) – காய்கறிகளைச் சேர்த்து சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு புளியைக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க விடவும். புளி வாசனை போனவுடன், வேகவைத்த பருப்பு, பிஸிபேளாபாத் மசாலா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு செய்தவுடன், அதனுடன் ‘காலிஃபிளவர் ரைஸ்’ சேர்த்து, நெய்யுடன் பரிமாறவும்.

One thought on “7-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

  1. Jagannathan R December 10, 2016 at 11:04 AM Reply

    I think it is really really hard to follow the diet! Is it really practical and pragmatic? I can understand that changing food habits and use of chemical fertilizers contribute to our increasing g number of deceases and percentage of affected people. But to do away with the taste of traditional cuisines is difficult. Probably a first indication of diabetics only scare the people to change the habits!
    Is there any statistics to indicate if one has no diabetics upto a particular age, there is least chance of getting it later?
    I enjoyed your or doctor’s humour of one or two cashew nuts dropped may be taken – and I felt like asking my wife to change the box every day and ‘accidentally’ hit her hands while she is doing it!! And to ask the chicken for its consent to be eaten – ha..ha..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s