5-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

ஓ! அதனாலதான் நீரிழிவு உள்ளவங்களுக்கு இதயம், கை, கால், கிட்னி, கண் என்று எல்லா உருப்புகளும் சேதமடையுதா? அப்ப நீரிழிவு (இன்சுலின்) மாத்திரை சாப்பிடக் கூடாதா?”

வாழ்நாள் பூரா இப்படி சாப்பிட்டா ஏதாவது இரு பார்ட் உத்தரவாதமாகப் போய்விடும். Its just a matter of time.

அப்ப தினமும் மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருப்பவங்க?”

I just pity them! இப்படி யோசியுங்க. ஆல்கஹால் குடிச்சுப் பழகியவங்களுக்கு, குடிக்கலைனா உடல் நடுங்கும். அதைச் சரிசெய்ய நடுக்கம் வரும் போதெல்லாம், அவனைக் குடிக்கச் சொன்னா எவ்வளவு தப்போ அதே மாதிரிதான் நீரிழிவு நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரை கொடுப்பதும்.”

இன்னொரு சந்தேகம். இப்ப இன்சுலின், சர்க்கரை இரண்டும் இருந்தால் இதய நோய் வர அதிக வாய்ப்பு இருக்கு. அது எதனால்?”

இதயம் மட்டுமில்லை, கொழுப்பு, கல்லீரல்,(Fatty Liver) கிட்னி, கண் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கு. முதல்ல கல்லீரலில் கொழுப்பு பற்றிச் சொல்றேன்.”

முன்பே சொன்ன மாதிரி குளுக்கோஸ் நம் உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றப்படுது. மேலும் அதிகமா இருப்பதை ‘கிளைக்கோஜனாக’ மாத்தி கல்லீரலில் அவசரத் தேவைக்குச் சேமிக்குது.”

பேட்டரி மாதிரியா டாக்டர்?”

ஆமாம். கல்லீரல் நம் பர்ஸ் மாதிரி. குறிப்பிட்ட அளவுதான் பணம் வைக்கமுடியும். அதே போல எடுத்துச் செலவு செய்வதும் சுலபம். அதிகமாக இருக்கும் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் (fructose – இதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.) கல்லீரல் கொழுப்பாக மாத்தி வங்கி ஃபிக்ஸட் டெப்பாசிட் மாதிரி சேமிக்குது. நிறைய சேமிக்கலாம். ஆனா, சுலபமாகச் செலவு செய்ய முடியாது.”

இப்ப உங்க பர்ஸில் எப்பவும் பணம் இருந்தா, நீங்க உங்க ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஏன் கை வைக்கப் போறீங்க? அதே போலத்தான் கொழுப்பு சேரச் சேர உங்க கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து ‘fatty liver‘ ஆகுது. அதுவே இதயம் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்குது.”

எப்படி டாக்டர்?”

ரத்தத்தில சர்க்கரையும் இன்சுலினும் இருந்து கொண்டே இருந்தால், கொழுப்பு செல்கள் எரிக்கப்படாமல் ‘சார் உங்க கல்லீரல் சேதம்’ என்பதை ALT என்ற என்சைம் சுட்டிக்காட்டிடும். இதுக்கு அப்பறம் ட்ரைகிளிசரைடு (triglyceride)என்னும் கொழுப்பு அதிக அளவு ரத்தத்தில உலாவரத் தொடங்குது. இங்கேதான் பிரச்னை ஆரம்பிக்குது.”

என்ன பிரச்னை?”

அதிக ட்ரைகிளிசரைட், அதனால LDL (Low-density lipoprotein) கொலஸ்ட்ரால் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதே போல SLDL (small dense) இருக்கு. அது ஆக்ஸிடைஸ் ஆகும்போது இதுதான் நமக்கு எமன்.”

இதுக்குத்தான் ஸ்டாட்டின் மாத்திரை இருக்கே.”

இருக்கு, அதுவும் மிகக் கெடுதல். இந்த SLDL தான் ரத்தக் குழாயின் உட்புறச் சுவர்களில் படிந்து (plaque) ரத்த ஓட்டத்தை நாளடைவில் தடை செய்யுது. ‘ஹார்ட் அட்டாக்’ வரக் காரணமாக இருக்கு. இதை அத்ரோஸ்கிளிரோஸிஸ் (Atherosclerosis) என்பாங்க.”

பேரே வித்தியாசமா இருக்கே.”

ரத்தக் குழாய்கள்ல ரத்தம் ஆத்துத் தண்ணி போல ஓடுது. தண்ணி அணைக்கு வரும்போது ஒரு வேகத்திலும் அணையிலேர்ந்து வெளியேறும்போது இன்னொரு வேகத்திலும் போகும். அதேபோல, ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலேர்ந்து வெளியேறும்போது இன்னொரு வேகத்திலும் போகுது. இதைத்தான் Blood Pressure, ரத்த அழுத்தம் என்பார்கள்.”

ஆமாம். இப்ப உங்க வீட்டுல ‘சம்ப்பு’லேர்ந்து மோட்டார் போட்டு மாடிக்குத் தண்ணி ஏத்தறீங்க. மாடிக்குப் போகிற பைப்பில அழுக்கு சேர்ந்தால், சிங்கமே உறுமறது போல மோட்டார் சத்தம் போடும்.

ரத்தக் குழாகளில் அத்ரோஸ்கிளிரோசிஸ் காரணமாக ரத்தக் குழாய்கள் கொழுப்பு (plaque) படிந்து ரத்தக் குழாய் சுருங்கினா அதே எஃபெக்ட்தான். சுருங்கிப்போன ரத்தக் குழாய்களில் ரத்தம் பாயும் போது, முன்பைவிட ரத்த அழுத்தம் அதிகமாகுது. இப்ப உங்களுக்கு வருவது ஆக.”

டாக்டர் கிராப்ட் இப்படிச் சொல்லுகிறார்: Those with cardiovascular disease not identified with diabetes are simply undiagnosed.

டாக்டர் எல்லோரும் சர்க்கரை பரிசோதனையுடன், இன்சுலின் பரிசோதனையையும் செஞ்சுக்கணும் தானே?”

நிச்சயமா… குறிப்பா குண்டா இருக்கும் குழந்தைங்க.”

டாக்டர், நீரிழிவினால கண்ணுக்கு ஏன் பிரச்னை வருது?”

இதை டயபடிக் ரெட்டினோபதி (diabetic retinopathy) என்று சொல்லுவாங்க. இந்தியாவில் ஏன் உலகத்தில நீரிழிவு உள்ளவங்கள்ல 20% பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கு.”

ஓ…”

டாக்டர் எனக்கு கண்ணு சரியா தெரியலை,” என்று கண் டாக்டரை பார்க்கும் போதுதான் சிலருக்கு டயபட்டீஸ் என்றே தெரியவருது.”

எதனால வருது ?”

retina அதாவது விழித்திரைதான் நாம் பார்க்கும் ‘படங்களை’ மூளைக்கு அனுப்புது.”

எப்படி?”

ரத்த நாளங்கள் மூலமா. அவை ரொம்ப மெல்லிசா இருக்கும். ரத்தம் நம்ம உடம்புல எல்லா இடத்திலேயும் பாயுது, அதுல தொடர்ந்து குளுக்கோஸ் அதிகமா இருந்தா அது ‘Toxic‘என்று முன்பே பார்த்தோம். இதனால அந்த ரத்த நாளங்களில் ரத்தம் மற்றும் சில திரவங்கள் ‘லீக்’ ஆக ஆரம்பிக்கும். ரத்தம் கசிந்த இடங்களில் சிவப்பு, மஞ்சள் புள்ளி மாதிரி தெரியும். இதை “Cotton Wool Spots‘ என்பாங்க.”

அப்படியா?”

ஆமாம். பிரச்னையின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெரியாது, பிரச்னை தீவிரம் ஆன பின்தான் தெரியவரும்.”

அப்ப நீரிழிவு உள்ளவங்க நிச்சயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இல்லையா?”

ஆமாம். நோ டவுட்.”

கிட்னி பிரச்னை எப்படி வருது?”

சிறுநீரகத்தின் முக்கியமான வேலை என்ன தெரியுமா?”

ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுவது.”

ஆமாம். கண் மாதிரி இங்கேயும் டெலிக்கேட் ரத்தக் குழாய்கள் இருக்கு. மீண்டும் அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் இருந்தால் அதை வெளியேத்த கிட்னி ஓவர் டைம் செய்யுது. ஒரு ஸ்டேஜில் ‘என்னால முடியலப்பா’ என்று சொல்லிவிடும்.”

நம்ம வீட்டுக் குழாயிலயே உப்புத் தண்ணி ரொம்ப நாள் வந்தா பைப் எல்லாம் ஒரு மாதிரியாகி ரிப்பேர் ஆகும். அதே போல தான் நம்ம ரத்தக் குழாய்களும். என்ன இங்கே உப்புக்குப் பதில் சர்க்கரை.”

நீரிழிவு உள்ளவங்க அடிக்கடி ஏன் சிறுநீர் கழிக்கறாங்க?”

சிலருக்கு அப்படி இருக்கலாம். நம் உடம்புல நடக்கும் சில விஷயங்களைப் புரிந்துகொள்வது கஷ்டம். இப்ப இன்சுலின் அதிகமாக அதிகமாக அது சோடியத்தை( அதாவது உப்பு) தேக்கி வைத்துக் கொள்ளும். அதிக சோடியம் இருந்தா என்ன ஆகும் ?”

அதிக ரத்த அழுத்தம்.”

water will follow sodium என்பாங்க. இப்ப சிறுநீரகத்தில அதிக சோடியம் சேர சேர அதை நோக்கி நிறைய தண்ணீர் போகும். நிறைய தண்ணீரினால் ரத்த அளவு அதிகமாகி, அதனால ரத்த அழுத்தம் அதிகமாகும். அந்த ரத்தம் மிக நுண்ணிய ரத்தக் குழாகளில் சர்க்கரையுடன் பாயும் போது?”

பிரச்னைதான்!”

இங்கே மட்டும் இல்லை மூளை, காது, கால், நகம், சதை, பல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். புற்றுநோய் கூட வரும் வாய்ப்பு இருக்கு.”

ஓ…”

மேலும் சில ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கு. நீரிழிவு இருப்பவங்களுக்கு கண் பரிசோதனையின் போது சில சமயம் சிறுநீரகப் பாதிப்பையும் கண்டு பிடிக்கலாம். அதே போல பல், ஈறு சம்பந்தமான பிரச்னைக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உண்டு.”

பயமா இருக்கே.”

பயப்பட வேண்டாம். திருமதி சுதா வெங்கடேஷ் பத்திச் சொல்றேன். எட்டு வருஷமா டயபடிக். முதல் நாலு வருஷம் மாத்திரை சாப்பிட்டாங்க. சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு வரலை, அதனால அடுத்த நாலு வருஷம் இன்சுலின்.”

தினமுமா ?”

ஆமாம். காலை 30 யூனிட், மாலை 30 யூனிட்.”

இது மட்டும் இல்லை. கூடவே தைராய்ட், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என்று ஒரு மினி மருந்துக்கடையையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தாங்க”

இப்ப?”

போன வருஷம் LCHF ( Low Carb High Fat) டயட் ஆரம்பித்து படிப்படியா மருந்தைக் குறைத்து இப்ப எந்த மருந்தும் எடுப்பதில்லை. போனஸாக 17 கிலோ எடை குறைந்தது.”

டாக்டர் இதைப் பற்றி விரிவாக நம் கல்கி வாசகர்களுக்குச் சொல்லணும்.”

நிச்சயமா. இதுக்கு எல்லாம் மூலகாரணத்தை ஆராய்ந்து சரி செய்யணும். உதாரணமா, ‘டைபாய்ட்’ ஜுரம் வந்தால் சாதாரண பாரசிட்டமால் வேலை செய்யாது. You may get a temporary relief but டைபாய்ட் குணமாகாது. அதற்கு உண்டான நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கணும். இப்ப ‘டைபாய்ட்’க்கு அறிகுறி ஜுரம் மூலகாரணம் பாக்டீரியா. அதே போல தான் நீரிழிவும். ரத்தத்தில சர்க்கரை என்பது அறிகுறி, மூலகாரணம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ். அதைத்தான் சரிசெய்யணும்.”

இன்சுலினை அதிகமாக்கும் சாப்பாட்டைத் தவிர்த்தாலே பல பிரச்னைகள் காணாமல் போய்விடும் போல.”

எக்ஸாக்ட்லி. பல பழைய நம்பிக்கைகள் பொய் என்று சொல்லப் போறேன்.Be prepared

ஆர்வமா இருக்கு.”

முதல் இன்ஸ்டால்மென்ட் – நீரிழிவு சம்பந்தப்பட்ட இரண்டு பொய்களை உடைக்கலாம்.

நீரிழிவு குணப்படுத்த முடியாது என்பது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதுதான் சிகிச்சை என்று நம்புவது.”

நீரிழிவைச் சமாளிக்க வேண்டாம், சரி செய்யலாம் என்கிறீர்கள்.”

(அடுத்த வாரம் சொல்றேன்)

-நன்றி கல்கி

Advertisements

2 thoughts on “5-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

  1. rjagan49 November 25, 2016 at 6:31 PM Reply

    Very informative. My mom has blood sugar but it is continuously varying and it is in control some time and out if range some times. She is 88 but likes sweet but we force her to control and take a little as we don’t want to forcefully decline her sweet considering her age. She is under care of a family doctor, well experienced though not a diabetic specialist. He says don’t completely force her away from sweet as it will affect her mentally when she is having a craving at this old age. What is the take on this by the specialist doctor you are discussing with. I am interested.
    Thanks.
    R. J.

    • BaalHanuman November 26, 2016 at 12:46 AM Reply

      I think in the previous part I have told about Leptin Resistance – that’s the reason. Please follow the doctor’s advice.

      -Sujatha Desikan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s