பலே பஜ்ஜி… சுடச்சுட சொஜ்ஜி! உடுப்பி ருச்சி!


மற்ற ஹோட்டல்களில் இல்லாத ஒரு புதுமையை பெங்களூருவிலுள்ள ‘கஃபே உடுப்பிருச்சி’ ஹோட்டலில் பார்க்கலாம். ‘ரெடி டு குக்’ வகை உணவுகளை நம் கண் முன்னே சமைத்து சுடச்சுட மணக்க மணக்கத் தயாரித்து அளிக்கிறார்கள்.

உடுப்பி என்றாலே நினைவுக்கு வருவது குட்டிக் கிருஷ்ணனும், உலகெங்கிலும் நிறைந்துள்ள உடுப்பி ஹோட்டல்களும்தான்! சமையல் என்பது உடுப்பியின் பாரம்பர்யம். உடுப்பி ரசம், சாம்பார், மசாலா தோசை, கடுபு இட்லி… இன்னும் எண்ணற்ற வகைகளுக்கு அடிமைகள் ஏராளம்!

ருசி அபாரம் என சப்புக்கொட்டுபவர்களுக்கெனவே பெங்களூரு விஜயநகரில் ‘கஃபே உடுப்பிருச்சி’ என்ற அருமையான ஹோட்டலை ஒரு சில வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் திருமதி லலிதா ராவ் சாஹிப்.

லலிதாவின் அன்பான அழைப்பை ஏற்று நாம் நம்முடைய வாசகிகளுடன் கஃபே உடுப்பிருச்சிக்கு விசிட் அடித்தோம். ஹோட்டலின் வித்தியாசமான இன்டீரியர் நம்மைக் கவர்ந்தது. வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு கமென்ட்டுகள் எழுதியதையும் போர்டில் போட்டிருக்கிறார்கள். ‘டேஸ்டி’, ‘சூப்பர்’, ‘டிஃபரன்ட்’… என்று பலவிதம்.

விருந்தோம்பலிலும் உடுப்பியை மிஞ்ச முடியாது என்றே தோன்றுகிறது. நம்மை உட்கார வைத்து சுடச்சுட டிஃபன், ஸ்நாக்ஸ், வெரைட்டி ரைஸ், ஸ்வீட், கேசரி… வகைகள் என ஏகமாக பரிமாறி திக்குமுக்காட வைத்தார் லலிதா.

நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே நம்மை வியக்க வைத்த ஒரு விஷயம், சமையலறை செஃப் யாரும் கிடையாது என்ற செய்தி. பரோட்டா மாஸ்டர், தோசா மாஸ்டர் என ஒருத்தரும் கிடையாது. குக் இல்லாமல் ஹோட்டலா? குத்துப்பாட்டு இல்லாத சினிமாகூட எடுத்துவிடலாம். வில்லிகள் இல்லாத சீரியல்கூட பார்க்கலாம். சமையல்காரர், மாஸ்டர் இல்லாமல் ஹோட்டலா? எப்படி சாத்தியம்? என கேள்விகள் மண்டையைக் குடைய, நம் உதவிக்கு ஓடிவந்தார் லலிதாவின் கணவர் சேஷாத்ரி ராவ். இவர் லலிதாவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுபவர்.

நாங்கள் ஒருமுறை மும்பை சென்றிருந்த போது… இரவு நேரத்தில் பாவ் பாஜி ஆர்டர் செய்தோம். அந்த நேரம் அதைச் செய்து கொடுக்க குக் இல்லை. திண்டாடிப் போய்விட்டார் ஹோட்டல் நிறுவனர். அப்போது உதித்த ஐடியாதான் இந்த ரெடி டுகுக் வகை பொடி மிக்ஸ் வகைகள். ப்ளஸ் டூ படித்து முடித்த இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். டிரெயினிங் கொடுப்போம். சுத்தம், சுகாதாரத்தைப் பற்றி மெயினாகப் போதிப்போம். அது மிக முக்கியம். 45 நாள் டிரெயினிங்குக்குப் பிறகு எங்கள் ஈஸி டுகுக் மிக்ஸ் வைத்து அசத்தலாகச் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள்,” என்கிறார் திரு ராவ்.

எங்களிடம் இருப்பது எல்லாமே ரெடிடுகுக் வகைகள். இதை வைத்து யார் வேண்டுமானாலும் சமைக்கலாம். வெகு ஈஸியாக! வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வரப்பிரசாதம். திடீர் விருந்தாளிகள் வந்தால் அசத்தலாம். சமையல் கலை என்பதை எல்லோருக்குமே கைவந்த கலை என மாற்றியிருக்கிறோம்,” என்கிறார் கூலாக லலிதா ராவ்.

ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பெருகிவரும் இந்தக் காலத்தில், சுத்தமான, சுகாதாரமான முறையில் வயிற்றுக்குக் கெடுதல் செய்யாமல், சத்துக்கள் கெடாமல் கொடுக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் ருச்சி நிறுவனத்தார்.

ராவ் தம்பதிகள் இருவருமே முதலில் வெவ் வேறு துறையில் பணிபுரிந்தவர்கள். லலிதா மெக்கானிக்கல் இன்ஜினீயர். கூடவே டிஸைனிங்கிலும் தேர்ச்சி பெற்றவர். கணவர் சேஷாத்ரி பிரபல நிறுவனத்தில் பொறுப்பான பதவியில். இருவருமே உணவுத் துறையின் மேல் உள்ள காதலால் வேலையை உதறினர்.

ஒரு சிறிய அறையில் ஒரே ஒரு உதவியாளருடன் தொடங்கிய பிஸினஸ் இது. உடுப்பியைச் சேர்ந்த எனக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். போதாததற்கு விற்பனை பிரதிநிதியாக இருந்த என் கணவர், பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பதுண்டு. நம் நாட்டு உணவு வகைகளை வெளிநாட்டினர் புகழ்ந்தால் பயங்கர பெருமையடைவார்.

என் அப்பா ராகி மால்ட் பானம் தயாரிப்பில் சக்கைப்போடு போட்டவர். என் கஸின்ஸ் ஹோட்டல் பிஸினஸில் புலி. ஸோ… எனக்கும் உணவுத் துறையில் ஏதேனும் சாதிக்கணும். கூடவே அதில் ஆதரவற்ற பெண்களுக்கு, சுய தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். நியூட்ரிஷன், அதாவது ஊட்டச்சத்து பானத்துக்கென பவுடர் தயாரிக்க, ஏகோபித்த வரவேற்பு. பல பெரிய கம்பெனிகளில் முதலில் எங்கள் தயாரிப்பைத்தான் உபயோகப்படுத்தினர். பின்னர்தான், ஏன் நாமே நம்முடைய பிராண்டை பிரபல்யப்படுத்தக்கூடாது என ஆரம்பித்தோம். கடுமையான உழைப்பினாலும், தரம் ஒன்றே முக்கியம் என்ற கொள்கையினாலும் இன்று நூற்றுக்கணக்கான ரெடி மிக்ஸ் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். உலகிலேயே செஃப் இல்லாத ஹோட்டலை முதன்முதலாக ஆரம்பித்த பெருமையும் எங்கள் ‘கஃபே ஸ்ரீ உடுப்பிருச்சி’ யையே சேரும். பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் எங்களது ரெடி டுகுக் மிக்ஸ் வகைகள் சப்ளை ஆகின்றன” என்கிறார் லலிதா.

சௌராஷ்டிரத்தைச் சேர்ந்தராவ் சாஹிப் தம்பதியினருக்கு, ஆரணி அரச குடும்பத்தின் பின்னணியும் உண்டு. 2000ம் வருடத்திலிருந்து ஆரம்பித்த கம்பெனி பல்வேறு இன்னல்கள், இடையூறுகளைச் சந்தித்து இன்று வெற்றியை எட்டிப் பிடித்திருக்கிறது.

எங்களுடைய புரொடக்ட்ஸில் எந்தவித ஆர்ட் டிஃபிஷியல் வாசனை திரவியங்களும் கிடையாது. கலர்கள் போடுவதில்லை. ப்ரிஸர்வேட்டிவ் கிடையாது. நம்முடைய முன்னோர்கள் வத்தல் எப்படிக் காயவைத்தார்கள், இயற்கை முறையில். அது போலவே, உணவுப் பொருட்களிலிருந்த ஈரப்பதத்தை எடுத்துவிட்டோமானால் பொருட்கள் கெட்டுப்போகாது. எங்களுடைய கேசரி மிக்ஸில் மஞ்சள் எக்ஸ்ட்ராக்ட் எடுத்துச் சேர்த்திருக்கிறோம். எங்களுடைய டீப் பொடியில் அஷ்வகந்தா மற்றும் துளசி சேர்த்துள்ளோம். இப்படி எல்லாமே நாச்சுரல்தான். பீட்ஸா, பர்கர் சாப்பிடும் நம் இளைய சந்ததியினருக்கு நம் உணவிலும் எவ்வளவு ருசி, கலர், டேஸ்ட் இருக்கிறது என காட்ட வேண்டியது நம் கடமை. பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்க வேண்டுமே…” என்கிறார்கள் சமூக அக்கறையுடன்.

பாட்டி, அம்மாவின் சமையல் கலை, கைமணம் காணாமல் போவிட்ட இந்தக் காலத்தில் அறிவியல் வளர்ச்சியை உபயோகித்து, அந்தக் கலையைப் புதுப்பித்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் தேர்ந்த சமையல் கலைஞர்கள், மாஸ்டர் செஃப்கள் கிடைப்பது சிரமமே. எங்கள் தயாரிப்புகளை உப யோகித்து உணவுகளைத் தயாரித்தால், அந்தப் பிரச்னையே இருக்காது. கோவை மற்றும் அகமதாபாத்தில் எங்கள் ஹோட்டலின் கிளை ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. உலக அளவில் மேலும் விரிவுபடுத்தத் தயாராகி வருகிறோம்” என்கிறார் லலிதா.

சமையல் கலை வல்லுனர்களுக்கு அக்னியே தெய்வம். அக்னிக்குப் பிரார்த்தனை செய்த பின்னரே சமைக்கத் தொடங்குவர். உடுப்பி ருச்சியிலும் இந்தப் பழக்கம் உண்டு. நல்ல தூய்மையான மனதுடன்தான் சமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கிச்சனுக்குப் போவதற்கு முன்னால் எங்கள் பணியாளர்கள் கண்டிப்பாக கண் மூடி பிரார்த்தனை செய்ய வேண் டும். தூய்மையான எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். ஒருவித மனக்கிலேசத்தில், எரிச்சலில் சமையல் செய்தால், அதைச் சாப்பிடுவோருக்கும் அதே கவலை தொற்றிக் கொள்ளும். சமையல் என்பது ஆனந்தத்தையும் மற்றவருக்குக் கொடுக்கும்; பிரச்னையையும் கொடுக்கும்” என்கிறார் ராவ்.

அப் பீபிகோ மனானா பந்திரா மினிட் கா காம் ஹை” (இனி பொண்டாட்டிய சமாதானப்படுத்த 15 நிமிடங்களே போதும்) என உடுப்பி கஃபே ருச்சியின் ஸ்லோகன் சொல்லுகிறது. இனி கணவன்மார்கள் சமைக்கத் தொடங்கிவிடுவார்கள். மனைவிகளுக்கு சமையல்கட்டிலிருந்து விடுதலைதான் போங்க!

-மங்கையர் மலர் இதழில் இருந்து…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s