கறுப்பு கள்ள பண ஒழிப்பு நடவடிக்கைகள் – மூன்று கேள்விகள்


நேற்று மாலை 6 மணிக்கு என் அலுவலகத்தில் சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்ததை உரையாடல் வடிவம் நீக்கி எழுதுகிறேன்

தன் வருமானத்தை குறைத்துக் காண்பித்து, வரி ஏய்ப்பு செய்து பதுக்கப்பட்ட பணம் , அதன் வழியாக வாங்கப்பட்ட சொத்துகள் அரசின் வருவாய் இழப்பாகும்

இப்படி வரி ஏய்ப்பு செய்து பதுக்கப்பட்டதில் ரொக்கமாகவே பதுக்கப்பட்டதில் 500 ரூபாய் நோட்டுகளும் , 1000 ரூபாய் நோட்டுகளும் அதிகம் என்பதால், அவை செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

முறையான வருமானம் அதற்கான கணக்கு வைத்திருப்போர், தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள்/ அஞ்சலகங்கள் வழியே முறையான ஆவணங்களைக் காண்பித்து மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணம் பதுக்கியவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் பதுக்கிய பணத்தினை மாற்றிக் கொண்டு விடலாகாது என்பதற்காக, பணம் மாற்ற, தங்கள் கணக்கில் பணம் செலுத்தி cheque, withdrawal slip வழியே பணம் பெறுவது எனும் நடைமுறைகளில் சில கட்டுப்பாடுகளை அரசு / ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நிலைமையினை தொடர்ந்து கண்காணித்து இந்த கட்டுப்பாட்டு நடைமுறைகளில், மேலும் கட்டுப்பாடு, சில கட்டுப்பாடுகளில் மாற்றம் / தளர்ச்சி, பிரததியேக சந்தர்பங்களில் ரொக்கமாக பணம் கையாள வேண்டிய அவசியங்களைக் கருத்திக் கொண்டு அதற்கான சிறப்பு அனுமதி என்பதாக மாற்றங்களை கொண்டு வருவது

இப்படி 500 ரூபாய் / 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதன என அறிவித்து புதிய 500 ரூபாய் நோட்டுகள், 2000 ரூபாய் நோட்டுகள் இவற்றை நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, பிற denomination ல் போதுமான அளவு நோட்டுகளை வங்கிக் கிளைகள்/ அஞ்சலகக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பது என்பதில் இருக்கும் logistics , பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வங்கிக் கிளைகளில் இருக்கும் பாதுகாப்பு அறைகளின் space constraint என்பன குறித்த logical அம்சங்கள் குறித்தும் விரிவாக உரையாடினோம்

முன்னேற்பாடாக வங்கிக் கிளைகளுக்கு புதிய நோட்டுகள் ( 500, 2000) அல்லது தேவையான 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பி இருப்பு வைத்துக் கொள்ளச் சொல்வதில் இருக்கும் risk அதாவது அரசு இப்படி ஓர் அறிவிப்பினை வெளியிட வாய்ப்பு உண்டு என்பதை வங்கி ஊழியர்கள் மேலாளர்கள் யூகிப்பது வரி ஏய்ப்பு செய்து பணம் பதுக்கியவர்களுக்கு செய்தி கசிந்து போவது, வங்கிகளில் பணம் பாதுகாப்பாக வைக்கும் அறைகளின் space constraint இவை குறித்துப் பேசினோம்.

இந்த நடைமுறை சிரமங்களினால், ரூபாய் நோட்டுகள் மாற்றுவது, வங்கியில் பணம் எடுப்பது இதில் உருவாகும் சிரமங்கள், வங்கிகள், ஏடிஎம் முன்பு நிற்கும் வரிசைகள் , இவை குறித்து விரிவாகப் பேசினோம்

மிக முக்கியமான அம்சம், வரி, வரியின் அவசியம், இவை குறித்தும் பேசினோம்

வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் வரி செலுத்தினால் வரி விகிதம் குறையும் வாய்ப்பு

மக்களின் பயன்பாட்டுத் தேவைக்கான பொருட்கள் உற்பத்தி இடத்திலிருந்து , மக்களை வந்தடையும் வரை இருக்கும் நிதி அம்சங்களைக் குறித்து விரிவாகப் பேசினோம்

உற்பத்திக்கான செலவு + விளம்பரச் செலவுகள் + overheads + பொருட்களை கொண்டு சேர்க்கும் transport இவை தாண்டி, உற்பத்தியாளர், விற்பனையாளர்களின் பல்வேறு வரிகள், இவை யாவும் அந்த பொருளின் விலையினை influence செய்கிறது.

உற்பத்தி நிறுவனங்கள் வரி, விற்பனையாளர்களின் வரி, ஏனைய முறைகேடுகளினால் பொது மக்கள் / consumer க்கு அதிக விலை கொடுக்கும் அவசியம் உருவாகும்

Employed persons தங்களின் வரி செலுத்தும் கடமையிலிருந்து தவற வாய்ப்பு இல்லை / அல்லது தவறும் வாய்ப்பு மிக குறைவு

Self Employed ( மருத்துவர்கள்/ ஆடிட்டர்கள்/ வக்கீல்கள்/ தொழில் செய்பவர்கள்) வருமானத்தின் மிகச் சொற்ப பகுதியினை மட்டுமே வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்துகின்றனர் . இவர்கள் தங்களின் பெரும் பகுதியை ரொக்கமாகவே கையாண்டு, அதனை வைத்துக் கொண்டு நிலம், வீடு, Flat வாங்குகிறார்கள். இவர்களின் இப்படியான முதலீடுகள் கட்டுமானங்களுக்கு தேவையான plan approval உள்ளாட்சி அமைப்புகளில் ( corporation / municipality / panchayat ) பெறப்படும் போது சொத்துக்கான நிதி ஆதாரம், recent tax return filed கேட்கப்படும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.. இதே நடை முறை சொத்து பத்திரப் பதிவின் போது கொண்டு வரப்பட வேண்டும்

Self Employed ( மருத்துவர்கள்/ ஆடிட்டர்கள்/ வக்கீல்கள்/ தொழில் செய்பவர்கள்) கடந்த 25 வருடங்களில் வாங்கிய சொத்து விபரங்களையும் அதற்கான நிதி ஆதாரம் ( source to buy property) , each year tax returns ஐ கண்டிப்பாக ஆராய வேண்டும். ஏய்த்தவர்களின் எண்ணிக்கை, ஏய்த்துப் பதுக்கப்பட்ட தொகையின் அளவு இவை இரண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இந்த நாட்டின் மிகப் பெரும் வரி ஏய்ப்பு, இந்த segment ல் இருக்கிறது. இந்த ஏய்ப்பின் மீது, மிகக் கடுமையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எல்லா self employed தொழில்களுக்கும் முறையான பதிவும், (Registration / license ) ம் அவை அந்த தொழில் செய்கின்றவர்களின் PAN Number உடன் இணைக்கப்பட வேண்டும்.

Self Employed ( மருத்துவர்கள்/ ஆடிட்டர்கள்/ வக்கீல்கள்/ தொழில் செய்பவர்கள்) தங்களின் சேவைக்கு printed ரசீதுகள் தருவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Cashless பரிவர்த்தனைகள், Mobile payment , internet payment, card payment இவை எப்படி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வாய்ப்பு குறித்தும் பேசினோம்

கிராமத்து இளைஞர்கள், பெரு நகரங்களுக்குப் பயணித்து , பொறியியல், மருத்துவம், நிர்வாகம் , சட்டம் என உயர்கல்வி பெற்று பெருநகரங்கள், அயல்நாடுகளில் பணி செய்யும் நிலையில், அவர்கள் இதற்கான (Cashless பரிவர்த்தனைகள், Mobile payment , internet payment, card payment ) விழிப்புணர்வு, திட்ட செயலாக்கம் போன்றவற்றில் அவர்களின் கிராமம் , அருகாமை கிராமங்களில் பணியாற்ற முன் வர வேண்டும். அவர்களை பணியமர்த்தி இருக்கும் தனியார் நிறுவனங்கள் இதனை தங்களின் Corporate Social Responsibility நடவடிக்கையாக நாட்டுக்கு செய்யும் கடமையாக செய்து கொடுக்கலாம்

சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்போம், என் தரப்பு கோரிக்கையாக ஒன்றை முன் வைத்தேன்

உங்கள் உறவினர், நண்பர்கள், சமூக ஊடகத் தொடர்பில் இருப்பவர்களிடம் இந்தக் கேள்விகள் கேளுங்கள்.

குறிப்பாக Self Employed ( மருத்துவர்கள்/ ஆடிட்டர்கள்/ வக்கீல்கள்/ தொழில் செய்பவர்கள்) நபர்களுக்கு இந்தக் கேள்விகள் கேட்கப்படவேண்டும்

கேள்வி 1 : நீங்கள் வருமான வரி செலுத்தும் கடமை உள்ளவரா ?

கேள்வி 2 : ஆம் எனில், ஒழுங்காக வருமானம் மறைக்காமல்கணக்கு காட்டி வரி செலுத்துகின்றீர்களா ?

கேள்வி 3 : நாட்டு நலம் முக்கியமில்லை, சுய நலம் தான் முக்கியம் என நினைத்து வருமானம் மறைத்து, வரி ஏய்ப்பு செய்கின்றவர் நீங்கள் எனில் , நாட்டு நலனில் அக்கறையுடன் உங்களைக் கேட்கின்றேன். மாற்றம் கொள்வீர்களா ?

இந்த கேள்விகள் சரியான நபர்களைக் கேட்கும்படிக்கு relay ஆகுமெனில் சந்தோஷம்.!

-Chandroo (Chandramowleeswaran Viswanathan)

chandru

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s