4-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

உங்களுக்கு சின்ன வயசுல தட்டம்மை வந்திருக்கா?”

வந்திருக்கு.”

இனிமே உங்க வாழ்நாளில் உங்களுக்கு தட்டம்மை வராது.”

ஏன்?”

ஏன்னா, தட்டம்மை ஒருவிதமான வைரஸ். அது வந்தா அதை எதிர்க்கும் சக்தி நம்ம உடம்புல வருது. அதனாலதான் அது திரும்பவராது. வந்தாலும் அதை நம் உடல் எதிர்த்துவிடும்.

இன்னொரு உதாரணம், குடிகாரங்களைப் பாருங்க. முதலில் கொஞ்சமாக ஆரம்பிப்பாங்க, அதற்கு உடல் எதிர்ப்பு தெரிவிக்கும். இந்த எதிர்ப்புனால கொஞ்ச நாளில் குடிச்சாபோதை ஏறாது. உடனே அவர்கள் அதிகமாகக் குடிப்பாங்க. உடல் மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும். இன்னும் அதிகமாகக் குடித்து, குடியின் எல்லைக்கே போய்விடுவார்கள். இன்சுலின் எதிர்ப்பும்  இதே போல்தான்.”

அதிக இன்சுலினால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகிறதா? அல்லது இன்சுலின் எதிர்ப்பால் அதிக இன்சுலின் சுரக்கிறதா?”

இந்தக் கேள்வி, கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா? என்பது போல. ஒரு விதமான ஆபத்தான சுழற்சி. ‘விஷியஸ் சைக்கிள்’ என்பார்கள்.”

இதுக்கும் நாம் குண்டாவதற்கும் என்ன காரணம் டாக்டர்?”

இன்னொரு ஹார்மோன்பத்திசொல்றேன். அதுக்குப் பெயர் லெப்டின்.”

லெப்டினா?”

ஆமாம். 1890ல் இதைக் கண்டுபிடிச்சாங்க.

சின்ன பையன் ஒருத்தன் திடீர்னு குண்டானான். என்னன்னுசொதிச்சுப் பார்க்கும்போது மூளையின் ஹைப்போதலாமஸ் (hypothalamus) என்ற பகுதியில சேதம். அதனால் ஒபிசிட்டி, ஹார்மோன் கோளாறுன்னு கண்டுபிடிச்சாங்க. ஹைப்போதலாமஸ் பகுதியில இருக்கும் நியூரான்களுக்கும் நம் உடல் எடைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு யூகிச்சாங்க.”

அப்பதான் லெப்டின் கண்டுபிடிச்சாங்களா?”

இல்லை. 1994ல் தான் லெப்டினைக் கண்டுபிடிச்சாங்க. லெப்டின் என்றால் கிரேக்கத்தில் ஒல்லி. லெப்ட்டின் கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்து உடலுக்கு ஒரு சிக்னல் கொடுக்குது.”

என்ன சிக்னல்?”

போதும், இதுக்கு மேலே சாப்பிடாதே என்று! ஒரு கால் கிலோ மைசூர்ப்பாகை சின்னப் பையனிடம் கொடுத்தால், ஒண்ணு இல்ல ரெண்டுக்கு மேல சாப்பிடமாட்டான். திகட்டிவிடும். ஆனால் நீரிழிவு உள்ளவர், ராத்திரி யாருக்கும் தெரியாம ஒன்றில் ஆரம்பித்து, ஒன்றை மட்டும் மீதம் வைப்பார்.”

ஆமாம் டாக்டர். நான்கூட முன்பு…”

இது உங்க பிரச்னை மட்டும் இல்லை, பலருக்கும் இருக்கு. உங்க மூளையில் ஹைப்போதலாமஸ் (hypothalamus) பகுதிக்கு லெப்டின் சிக்னல் வேலை செய்யவில்லை. அதனால சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். மூக்கு வழியாக வெளியே வரும்வரை!”

ஆனால் ஏன் லெப்டின் வேலை செய்யவில்லை?”

அதிக இன்சுலினால்தான்!”

விளக்கமுடியுமா டாக்டர்?”

அதிக இன்சுலின் லெப்டின் ஓட்டத்தைத் தடை செய்யுது. ‘சாப்பிட்டது போதும்’ என்ற சிக்னல் மூளைக்கு எட்டாது. இதனால் மேலும் அதிக லெப்டின் உற்பத்தி ஆகும். மேலும் மேலும் அதிக லெப்டின் உற்பத்தியானால்? இப்ப உங்களுக்கே தெரிந்திருக்கும்.

அடுத்து என்ன நடக்கும்?”

லெப்டின் ரெஸிஸ்டன்ஸ்.”

சரியாசொன்னீங்க. மூளையில் இன்னொரு பகுதியும் இருக்கு நியூக்ளியஸ் அகும்பென்ஸ் (nucleus accumbens). இங்கேதான் நமக்குத் திருப்தி, இன்பம் எல்லாம் ஏற்படுது (it is our reward centre) ஒரு மைசூர்ப்பாகு சாப்பிட்ட பின் நமக்கு ஏற்படும் திருப்தி, ஆனந்தம்.

feel good‘ என்பார்கள், அது இங்கேதான் நடக்குது. லெப்டின் வேலை செய்யாதபோது ஒரு மைசூர்ப்பாகு ஆனந்தத்தைக் கொடுக்காமல், தொடர்ந்து சாப்பிட்டு டப்பா காலியாகும்வரை சாப்பிட்டுக்கொண்டே இருக்க வைக்கிறது.”

குடித்துக்கொண்டே இருக்கும் குடிகாரன் போலத்தானே டாக்டர்?”

ஆமாம். அதிக இன்சுலினால் லெப்டின் வேலை தடைபட்டு, மேலும் உங்களுக்குப் பசிக்குது. ஜாஸ்தி சாப்பிட்டு இன்னும் ஜாஸ்தி இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு கூடுகிறது. அதைச் சரிசெய்ய மேலும் இன்சுலின் எடுத்துக்கொள்கிறீர்கள். மேலும் மேலும் சாப்பிட்டு, மேலும் கொழுப்பை சேகரித்து நீங்கள் குண்டாகறீங்க. முதல் கேள்விக்கு பதில் ”We do not get fat because we overeat. We overeat because we get fat!” என்கிறார் Gary Taubes.”

தலை சுத்துகிறது டாக்டர். சர்க்கரையைவிட இன்சுலின்தான் பெரிய பிரச்னை போல.”

ஆமாம். ஆரம்பத்துல அதிக ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் துருப்பிடிப்பது மாதிரிதான். அதிக இன்சுலின் இருந்துகொண்டே இருந்தால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி, இதயம், கிட்னி, கண், காது என்று எல்லாம் ரிப்பேர் ஆகுது. அதனால்தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு எல்லா உறுப்புகளும் டாமேஜ் ஆகுது.

இதைப் பற்றி டாக்டர் ஜோசப் கிராஃப்ட் (Dr Joseph Kraft) 1976ல் ஒரு சுவாரஸ்யமான ஆய்வு செஞ்சார் அவர். 1976ல் பதினாலாயிரம் பேரை நீரிழிவு உள்ளவர்கள், நீரிழிவு இல்லாதவர்கள் என்று இரண்டு குழுக்களாகப் பிரித்தார். அவர்களுக்கு OGTT டெஸ்ட் செய்தார்.”

”OGTT டெஸ்டுன்னா என்ன டாக்டர்?”

‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்.’ அதாவது வெறும் வயிற்றில் குளுக்கோஸ் கொடுத்து அதற்கு உங்க உடம்பு இரண்டு மணி நேரத்தில எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பார்ப்பது.”

பரிசோதனையில நீரிழிவுக்காரர்களுக்கு, அதிக சர்க்கரை இருந்திருக்க வேண்டுமே.”

ஆமாம். எதிர்பார்த்த மாதிரியே நீரிழிவு உள்ளவங்களுக்கு ரத்தத்துல சர்க்கரை அதிகமா இருந்தது. டாக்டர் கிராஃப்ட் புத்திசாலித்தனமாக இன்னொரு பரிசோதனையையும் கூடவே செஞ்சார். சர்க்கரையின் அளவுடன் இன்சுலின் அளவையும் சேர்த்து எடுத்தார். நீரிழிவு உள்ளவங்களுக்கு சர்க்கரை, இன்சுலின் இரண்டும் அதிகமா இருந்தது.”

இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லையே?”

ஆச்சர்யம் நீரிழிவு இல்லை என்று நினைத்துக் கொண்டவர்களுக்குத்தான்!”

நீரிழிவு இல்லாதவங்களுக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு சரியா இருந்திருக்குமே?”

சர்க்கரை அளவு சரியா இருந்தது. ஆனா இன்சுலின் அளவு மூணுல இரண்டு பங்கு அதாவது 75 சதவிகிதம் பேருக்கு அதிகமா இருந்தது. இவங்களுக்கு நிச்சயம் பிற்காலத்தில உடல் பாதிப்பு இருக்கும். இதயம், கிட்னி, குறிப்பாக நீரிழிவால பாதிக்கப்படுவாங்கன்னு கணிச்சார்.”

என்ன நடந்தது?”

அவர் கணிச்சது மாதிரியே நடந்தது. டாக்டர் கிராஃப்ட் ஆராச்சிக் குறிப்புகளைப் பாருங்க” என்று வரைபடத்தைக் காண்பித்து விளக்கினார் டாக்டர்:

பச்சையில் இருப்பவர்கள் (1) :

குளுக்கோஸ் சாப்பிட்டபின் இன்சுலின் நிலை உயர்கிறது. ஆனால் சுமார் மூன்று மணி நேரத்தில் மீண்டும் குறைந்து விடுகிறது. இவர்கள் ஒன்றும் பிரச்னை இல்லாத ‘நார்மல்’ மக்கள்.

மஞ்சள் (2) குளுக்கோஸ் சாப்பிட்ட பிறகு அதன் சுமையை (Load) எதிர்கொள்ளும் வகையில், இங்கேயும் இன்சுலின் நிலை விரைவில் உயர்கிறது. மேலே சொன்ன ‘நார்மல்’ நபர்களைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து, கீழே இறங்கிவர 4-5 மணி நேரம் ஆகிறது.”

இதுதானே டாக்டர் ஹைபர் இன்சுலினிமியா (hyperinsulinemia).”

ஆமாம்.”

ஆரஞ்சு(3), சிவப்பு (4) நிறங்களில் இருப்பவர்களைப் பாருங்க. அவங்களுக்கு இன்சுலின் அளவு இறங்க, அஞ்சு இல்ல ஆறு மணி நேரம் கூட ஆகலாம்.

அதிக இன்சுலின் இருந்துகொண்டே இருந்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் வந்துடுமே.”

ஆமாம். நிச்சயம் இன்சுலின் எதிர்ப்பு வந்து பத்து பதினைந்து வருஷத்துல டயபட்டீஸ் வரும் என்று ஜோசியமே சொல்லலாம்!”

இப்ப நாம சர்க்கரை அளவுதானே டெஸ்ட் செய்யறோம். இது சரியான டெஸ்ட் இல்லையா?”

அப்படியில்ல இன்சுலின் ரொம்ப அதிகமானா இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி, இன்சுலினால ரத்தத்துல இருக்கிற சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாம, அதனால ரத்தத்துல சர்க்கரை அளவு கூடுது, பிறகு இரண்டும் அதிகமானா-Its a double edged sword.”

அப்ப சர்க்கரை வெறும் அறிகுறிதான், அடியாள் மாதிரி. வில்லன் இன்சுலின், சரியா டாக்டர்?”

சரியாசொன்னீங்க. டயபடீஸுக்கு இன்சுலின் கொடுத்துக் கொடுத்து ரத்தத்துல சர்க்கரை அளவைக் குறைப்பதால, நீரிழிவு மேலும் மோசமாகுது! அது எப்படின்னு சொல்றேன். நீங்க சமீபத்தில ஊருக்கு சூட்கேஸ் எடுத்துக்கொண்டு தானே போனீங்க?”

ஆமாம்.”

இப்ப உங்க சூட்கேஸில் வேஷ்டி, துண்டு, போர்வை, பேன்ட், சட்டை, டி-ஷர்ட் எல்லாம் பேக்கிங் முடிச்சபோது, போன வாரம் உங்க மனைவி வாங்கிய புதுச் சட்டை நினைவுக்கு வருது. ஆனால் பெட்டியில இடமில்லை. ஏற்கெனவே பேக் செய்ததை வெளியே எடுக்கவும் மனசு வரலை. என்ன செய்வீங்க?”

சட்டையை உள்ளே வெச்சு, அழுத்தி மூடி ‘ஜிப்பை’ போடுவேன்.”

இப்ப மேலும் ஒரு எக்ஸ்ட்ரா டவல் உள்ளே வைக்க வேண்டும். என்ன செய்வீங்க?”

கஷ்டம்தான். சூட்கேஸ்மீது ஏறி உட்கார்ந்துடுவேன்!”

இப்படியே செஞ்சிக்கிட்டு இருந்தா உங்க சூட்கேஸ் என்னாகும்?”

சூட்கேஸ் வாய் இருந்தா அழும். ‘ஜிப்’ பிளந்துக்கும், இல்ல வீக்கான இடத்தில் தையல் விட்டிருக்கும்.”

இதேதான் உங்க உடம்புக்கும் ஆகுது. நம் செல்தான் அந்த சூட்கேஸ். குளுக்கோஸ்தான் நம் துணி மணிகள். அதை அழுத்தம் கொடுத்து உள்ளே செலுத்துவது இன்சுலின்.”

இப்ப சர்க்கரை அதிகமா இல்லனா சுலபமா மூடலாம், அதிகமா இருந்தா அதிக இன்சுலின் உற்பத்தி செய்து பெட்டியை அழுத்தம் கொடுத்து மூட முயற்சி செய்கிறோம், மாத்திரை மூலம். பெட்டி உடையற மாதிரி அதிக இன்சுலின், மேலும் அதிக இன்சுலின் என்று உடம்பு பார்ட் பார்ட்டா ரிப்பேர் ஆகுது.”

ஓ! அதனாலதான் நீரிழிவு உள்ளவங்களுக்கு இதயம், கை, கால், கிட்னி, கண் என்று எல்லா உருப்புகளும் சேதமடையுதா? அப்ப நீரிழிவு (இன்சுலின்) மாத்திரை சாப்பிடக் கூடாதா?”

(அடுத்த வாரம் சொல்றேன்)

-நன்றி கல்கி

Advertisements

2 thoughts on “4-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

  1. rjagan49 November 18, 2016 at 5:44 AM Reply

    Informative and interesting!

  2. Cuddalore Ramji November 18, 2016 at 10:42 PM Reply

    பயனுள்ள பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s