ட்ரம்பினுடையது சரித்திர வெற்றி! – பி.ஏ. கிருஷ்ணன்


trump

ட்ரம்பை ஆதரிப்பவர்கள்கூட அவர் வெற்றி பெறுவார் என்று உண்மையாக நம்பியதாகத் தெரியவில்லை.

சான் பிரான்சிஸ்கோவில் இந்தக் கட்டுரையைத் தொடங்கும்போது இரவு 12 மணி. ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்று சிறிது நேரத்துக்கு முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது வெற்றிப் பேச்சு முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. மிகப் பணிவோடும் இதுவரை காட்டாத நாகரிகத்துடனும் பேசினார். ஹிலாரி கிளின்டனைச் சிறைக்கு அனுப்புவேன் என்று பயமுறுத்தாமல், நாட்டுக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி சொன்னார். எல்லா அமெரிக்கர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்; சிலருக்கும் மட்டும் அல்ல என்றும் சொன்னார்.

அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்

பலருக்கு அதிர்ச்சி. பலருக்கு மகிழ்ச்சி. இன்று காலையில்கூட எனக்குத் தெரிந்த யாரும் ட்ரம்பை ஆதரிப்பவர்கள்கூட அவர் வெற்றி பெறுவார் என்று உண்மையாக நம்பியதாகத் தெரியவில்லை. ‘ஐநூற்று முப்பத்து எட்டு’ என்ற இணையத்தளம் கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது – இரவு ஒன்பது மணி வரை ஹிலாரிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று சொல்லிக்கொண்டிருந்த்து.

ட்ரம்பினுடையது சரித்திர வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. ஹிலாரியை மட்டுமல்ல, அமெரிக்காவின் முக்கியமான பணக்காரர்கள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள், குடியரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகள் என்று பலரை எதிர்த்து அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியலில், பொதுப்பணியில் எந்த அனுபவம் இல்லாத ஒருவர் வெள்ளை மாளிகைக்குச் செல்வது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன். அவரைப் போல வேறு யாராவது பெண்களைப் பற்றியோ அல்லது வேறு பல பிரச்சினைகளைப் பற்றியோ பேசியிருந்தால், இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள். ட்ரம்ப், ட்ரம்பாக இருப்பதால் இன்று வெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறார்.

வெற்றிக்குக் காரணம் என்ன?

ஜனநாயகக் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் மாகாணங்கள்கூட ட்ரம்பின் பக்கம் சாய்ந்திருக்கின்றன. உடனடியாகத் தோன்றும் காரணங்கள் இவை. முதலாவதாக, மறுபடியும் அமெரிக்காவை மகத்தானதாக ஆக்குவோம் என்று ரொனால்ட் ரீகன் பாணியில் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது (வெற்றியுரையிலும் இதைச் சொன்னார்). இரண்டாவது, குடியரசுக் கட்சி பெண்களுக்கும் சிறு பான்மையினருக்கும் ஆதரவாகப் பேசினால்தான் கட்சி நிலைக்கும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால் ட்ரம்ப் அதற்கு நேர்மாறான முடிவை எடுத்தார். சில பத்திரிகைகள் குடியரசு கட்சியின் அழிவு தடுக்க முடியாதது என்றுகூட எழுதின. ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவருக்குத் தெளிவு இருந்ததால் தனது நிலையில் உறுதியாக நின்றார். மூன்றாவதாக, ஜனநாயகக் கட்சி எட்டாண்டுகள் ஆட்சி நடத்திவிட்டது, மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். நான்காவதாக, மெக்ஸிகோவிலிருந்தும் இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் (குறிப்பாக சிரியாவிலிருந்து) மக்கள் குடியேறுவதை ஜனநாயகக் கட்சி தடுக்காது என்று மக்கள் நிச்சயமாக நினைத்தார்கள். ஐந்தாவதாக, மிக முக்கியமாக, ட்ரம்ப் உலகமயமாக்குதலுக்கு எதிராக இருந்தார். அமெரிக்காவிலிருந்து வேலைகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஹிலாரியின் தோல்விக்குக் காரணம் என்ன?

ஹிலாரியைப் போல தகுதி பெற்ற ஒருவர் கிடைப்பது கடினம். இருந்தாலும் மக்கள் அவரைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பது வியப்பைத் தருகிறது. பெருவாரியான மாகாணங்கள் ஹிலாரியைத் தேர்ந்தெடுக்கவில்லை. தோல்விக்கு முதல் காரணம் அவருக்கு நினைத்த அளவுக்குப் பெண்கள் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இரண்டாவது புலனாய்வுத் துறை மின்னஞ்சல் விவகாரத்தில் அவர் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை என்று தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு சொன்னாலும், மக்கள் அவர் கவனமில்லாமல் நடந்துகொண்டார் என்று நினைத்தார்கள். மூன்றாவது ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் பலர் ஓட்டு போடப் போகவில்லை என்று நினைக்கிறேன். அது பல மாகாணங்களில் நிலையை ட்ரம்புக்குச் சாதகமாக ஆக்கியிருக்கலாம். நான்காவதாக, மிக முக்கியமாக, அவர் பெண் என்பதால் பலர் அவருக்கு ஓட்டு போடவில்லை என்பதே உண்மை. இன்னும் பல அமெரிக்க மக்கள் பெண் ஒருவர் அதிபராகி, திறமையோடு செயல்பட முடியும் என்பதை நம்ப மறுத்திருக்கிறார்கள்.

உலகம் எவ்வாறு எதிர்கொள்ளும்?

மேற்கத்திய நாடுகள் ட்ரம்ப், பதவிக்கு வருவதை விரும்பவில்லை என்பது வெளிப்படை. எனவே அவற்றோடு நிலைமை சீரடைய சில காலம் எடுக்கும். ரஷியாவோடு பகைத்துக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்று ட்ரம்ப் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். ரஷியாவுக்கே க்ரிமியா சொந்தம் என்று பொருள்படப் பேசியிருக்கிறார். எனவே ரஷிய அமெரிக்க உறவு நிச்சயம் சீரடையும். ஐரோப்பாவில் இப்போது நடைபெறும் யுத்த பயமுறுத்தல்கள் குறையும். சிரியாவில் நடக்கும் போரிலும் இரு நாடுகளும் இணைந்து ஐஎஸ்ஸை அழிக்க முயற்சி செய்யலாம். சீனாவுடன் உறவு பலவீனமடையலாம். இந்தியாவை அவர் உண்மையாகவே விரும்புகிறார், மோடியை அவர் மதிக்கிறார் என்று என்னுடைய இந்துத்துவா நண்பர்கள் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு நண்பராக இருப்பாரோ இல்லையோ பாகிஸ்தானுக்கு அவர் நண்பராக நிச்சயம் இருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

pak

பி.ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை

Advertisements

2 thoughts on “ட்ரம்பினுடையது சரித்திர வெற்றி! – பி.ஏ. கிருஷ்ணன்

  1. rjagan49 November 10, 2016 at 7:00 PM Reply

    With due respects to Sri Krishnan and knowing I am no political analyst, I still feel this type of analysis after a poll upset is common by the losing supporter and the journalists to fill pages. Nothing really changed between the day before elections and the day of results. What is proved is that political pundits and posters were unable to read the facts ahead of polls. Everyone knows that despite winning higher votes the other candidate can still win. These pre poll predictions and after poll explanations are only time pass. No intention to hurt Mr. Krishnan.

    • BaalHanuman November 10, 2016 at 7:16 PM Reply

      Thanks Mr. R.J. Great perspective. I fully agree with your views!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s