2016 குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம் – AMR


(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குருபகவானின் கன்னி ராசிப் பிரவேசம் மீன ராசி அன்பர்களுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய மிக முக்கிய கிரக மாறுதலாகும். ராகு பகை ராசியில் அமர்ந்திருப்பினும், கோள்சார விதிகளின்படி அளவோடு நன்மைகளைச் செய்வார்.

உத்தியோகத்திற்கு காரகத்துவம் பெற்றுள்ள சனிபகவான் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், கடின உழைப்பு இருப்பினும், உழைப்பிற்கு தகுந்த கூலி கொடுப்பதில் சனி பகவானுக்கு நிகரான கிரகம் இல்லை. ஆதலால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புகள் கூடும்.

அறிவுரை:
சுபச்செலவுகள் ஏற்படும்போது, அதிக உற்சாகத்தினால் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம். உங்கள் பொருளாதார நிலையை நன்கு சீர் செய்து கொள்ள அனுகூலமான காலகட்டம் இது. சனிபகவானின் சஞ்சார நிலை ஓரளவே அனுகூலமாக இருப்பதால், பரிகாரம் அவசியமாகிறது.

பரிகாரம்:

Thirupathi
1) திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் பொங்கு சனிபகவானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்வித்து, 12 மண் அகல்களில் நல்லெண்ணெய் தீபமேற்றி வைத்து, தரிசித்துவிட்டு வரவும்.

2) பூவரசன்குப்பம், அபிஷேகப்பாக்கம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்ம க்ஷேத்திரங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்ல பலனை அளிக்கும்.

3) திருமலை-திருப்பதி சென்று, திருவேங்கடப் பெருமானை தரிசிப்பது குருபகவானுக்கு திருதீய ஸ்தானத்தில் (3-ம் இடம்) சனிபகவான் சஞ்சரிக்கும் தோஷத்திற்குச் சிறந்த பரிகாரமாகும்.

4) திருவாரூர் ஸ்ரீ தியாகேசப் பெருமான் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கமலாம்பிகை சந்நிதியில் 12 வெள்ளிக்கிழமைகள் நெய்தீபம் ஏற்றி வைத்து தரிசிப்பது மீன ராசிக்குச் சிறந்த பரிகாரமாகும்.

5) 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மருக்கு 12 சனிக்கிழமைகள் தீபத்தில் சிறிது பசுநெய் சேர்த்து தரிசித்து வருவது, வரும் ஓராண்டு காலத்திற்கு அற்புத பலனளிக்கும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s