2016 குரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம் – AMR


(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)

இதுவரை உங்களுக்கு அனுகூலமாகச் சஞ்சரித்த குருபகவான், தற்போது ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கன்னிக்கு மாறியிருப்பதால், இதுவரை ஏற்பட்டிருந்த நன்மைகள் குறையும். குடும்பத்தில் வீண் செலவுகளால் பணம் விரயமாகும்.   உங்கள் ராசிக்கு அதிபதி சனிபகவான். குருபகவான் அனுகூலமில்லா விட்டாலும்கூட, சனிபகவான் அனுகூலமாகச் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனிபகவான் கொடுப்பது, குருபகவானின் அனுகூலமற்ற நிலையினால், சுபகாரியங்களிலும் தவிர்க்க முடியாத திடீர்ச் செலவுகளினாலும் விரயமாகும்.

அஷ்டம ஸ்தான குருவாக இருப்பினும்கூட, அளவோடுதான் பாதிப்பை ஏற்படுத்துவார். தேவகுருவான ப்ருஹஸ்பதிக்கு மக்கள்மீது அளவுகடந்த கருணை உண்டு என்பதை மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. மிகவும், எளிய சாதாரண பரிகாரங்களே குருபகவானுக்கு ப்ரீதியை அளிக்கும்.

அறிவுரை:
திட்டமிட்டுச் செலவு செய்தல் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளியூர் பயணங்களின்போது உடல்நலனையும் சற்று கவனித்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறிது ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. மாணவ-மாணவியர் தேவையற்ற நட்பைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். கீழே தந்துள்ள பரிகாரங்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை. அவற்றில் எது முடிகிறதோ, அவற்றைச் செய்து வந்தால் குருபகவானின் உள்ளம் குளிரும், சிரமங்கள் குறையும்.

பரிகாரம்:


1) தினமும் ஒரு சர்க்கம் ஸ்ரீமத் சுந்தர காண்டம் படித்து வருவது குருபகவானின் உள்ளத்திற்கு மிகவும் உகந்ததாகும். 

ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.

2) தினமும் கோமாதாவை பூஜித்து வருவது குருபகவானின் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

3) வியாழக்கிழமைகளில் பகல் உணவு மட்டும் உண்டு உபவாசம் இருத்தல் நல்ல பரிகாரமாகும்.

4) நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழவார் திருநகரித் திருத்தலம் சென்று, நெய் தீபம் ஏற்றி தரிசித்து விட்டு வருவது நல்ல பலனளிக்கும்.

Sri Thiru Marai Kadar Temple

5) வேதமே ஆரண்யமாக (வனம்) விளங்கும் “வேதாரண்யம்” சென்று அங்கு திகழும் கோடியக்கரை, ஆதி சேது, மற்றும் மணிகர்ணிகா ஆகிய மூன்று கட்டங்களிலும் ஸ்நானம் செய்து, ஸ்ரீ வேதாரண்யேஸ்வரரை தரிசிப்பது குருபகவானின் அனுகூலமற்ற சஞ்சார நிலையினால் ஏற்படும் தோஷத்தை உடனடியாகப் போக்கும்.

Sri Rama Parivar

6) தினமும் காலையில் நீராடிய பின்பும், மாலையில் சந்தியா காலத்திலும், 108 அல்லது 1008ஸ்ரீ ராமநாமம்‘ சொல்லி, ஸ்ரீ சீதாராமப்பிரபுவைத் தியானிப்பது குருபகவானுக்கு பரம ஆனந்தத்தை உண்டாக்கும். அதனால் தோஷம் நீங்குவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s