2016 குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம் – AMR


(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)

குருபகவானின் கன்னி ராசி சஞ்சார காலம் மகர ராசியினருக்கு சிறந்த யோக பலன்களை அளிக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானும் உங்களுக்குத் பல நன்மைகளை அளித்தருள்கிறார். மேலும், சனி உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால் அவரால் ஏற்படும் நன்மைகள் இப்போது பல மடங்கு அதிகரிக்கும். குருபகவான் தனது தற்போதைய நிலையில் உங்கள் ராசியையும் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு நிலை கொண்டிருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.

அறிவுரை:
இரவில் தனியாகச் செல்வது, வேகமாக வாகனங்களை ஓட்டுவது (முக்கியமாக இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்) ஆகியவற்றைத் தவிர்க்கவும். வரும் ஒரு வருட காலத்தில் பண வசதி அதிகரிப்பதால், உங்கள் பொருளாதார நிலையைச் சீர் செய்து கொள்ளுங்கள். பெண்கள் தனியே செல்லும்போது அதிக ஆபரணங்களை அணிய வேண்டாம். குறிப்பாக இரவில் தரக்குறைவான உணவு வகைகளை உண்ண வேண்டாம்.

பரிகாரம்:

thirumogur_chakkara

1) தினமும் காலையில் நீராடிய பின்பு ஸ்ரீ மிருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தையும், மாலையில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரின் மந்திர ராஜபத ஸ்தோத்திரத்தையும் சொல்லி வருதல் ராகுவினால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவும்.

2) திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி தரிசிப்பது சிறந்த பரிகாரமாகும்.

3) மேட்டுப்பாளையம் – சிறுமுகையை அடுத்த இடுகம்பாளையம் இன்னமுதன் ஸ்ரீ ராமபக்த அனுமனின் தரிசனம் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்.

4) ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருக்கடையூர் திருத்தல தரிசனம் அஷ்டம ராகுவினால் ஏற்படும் தோஷத்தைப் போக்கும்.

5) முன்னூர் ஸ்ரீ அருளாளப் பெருமானின் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மிகப் புராதனமான ஸ்ரீ நரசிம்மர் தரிசனம் அற்புத நற்பலனை அளிக்கும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s