2016 குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு – AMR


(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

உங்கள் ராசிக்கு அதிபதி ஆயிற்றே குருபகவான்!  அவர் தங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமாகிய கன்னி ராசியில் சஞ்சரிப்பது ஓர் அனுகூலமான கிரகநிலை என்றே கூறவேண்டும். ஏனெனில், தற்போது உங்களுக்கு ஏழரைச் சனியின் முதல் பகுதி நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் குருபகவானின் கன்னிராசிப் பிரவேசம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். இதுவரையில் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய சிம்ம ராசியில் சஞ்சரித்ததாலும், ராகுவை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாலும் குருவின் பூரண அனுக்கிரஹம் உங்களுக்குக் கிடைக்கவில்லை.

அறிவுரை:
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். திட்டமிட்டுச் செலவு செய்தல் வேண்டும். குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களுக்கும் பரிகாரம் செய்வது அவசியம். குடும்ப சம்பந்தமான முக்கிய விஷயங்களில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. எத்தருணத்திலும் உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

Ramanujar_ma_se
1) ஸ்ரீபெரும்புதூர் சென்று ஆச்சார்ய புருஷரான ஸ்ரீமத் ராமானுஜரை நெய் தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வரவும்.

2) ஸ்ரீசைலம் சென்று, கிருஷ்ணா நதியில் நீராடி, ஸ்ரீ பிரம்மராம்பிகா சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனா ஸ்வாமியை தரிசித்துவிட்டு வரவும்.

3) திருக்கழுக்குன்றம் சென்று வேதகிரியையும், ஸ்ரீ வேதபுரீஸ்வரரையும் தரிசிப்பது மிகச் சிறந்த பலனளிக்கும்.நெய்தீபம் ஏற்றி வைக்க மறந்துவிடாதீர்கள்.

4) ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குருபகவானும், அதே தருணத்தில் ஏழரைச் சனியும் நடைபெறும் கிரகநிலைக்கு ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவெள்ளறை என்னும் மகத்தான திவ்ய க்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள புண்டரீகாக்ஷனை தரிசிப்பது இத்தகைய கிரக தோஷத்தை உடனடியாகப் போக்கிவிடும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

5) காலை மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரின் மந்திர ராஜபத ஸ்தோத்திரம் மற்றும் ஸ்ரீ சனிபகவானின் ரக்ஷோபுவன ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம் படிப்பது, வரும் ஒரு வருட காலத்திற்கு உங்களுக்குத் துணை நிற்கும். இதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடியும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

6 thoughts on “2016 குரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு – AMR

 1. padmasun1972 August 28, 2016 at 2:46 AM Reply

  Madhavsrajan@yahoo.com

  Sent from Yahoo Mail on Android

 2. PONNUSAMY August 28, 2016 at 4:20 AM Reply

  அய்யா சொல்லியுள்ள ஸ்ரீ சனிபகவான் ரஷோபுவன ஸ்ரீ நரசிம்ம சுலோகம் ….
  இதை தயவுசெய்து வெளியிடவும் அல்லது எங்கே கிடைக்கபெறுவது என்றாவது சொல்லுங்கள் .
  நன்றி.

  • BaalHanuman August 28, 2016 at 3:00 PM Reply

   சனிபகவான் அருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

   சனிபகவானே அருளிய இந்த அற்புத துதியின் எட்டு ஸ்லோகங்கள் ஸ்ரீ நரசிம்ம பீஜாட்சரங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

   “இந்த அற்புத ஸ்தோத்திரத்தை எவர் பக்தியுடன் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்கிறார்களோ, அவர்களுக்கு சனி பகவானின் ஜென்ம ராசி, அர்த்தாஷ்டக ராசி, அஷ்டம ராசி, ஏழரைக் கால சனி சஞ்சாரத்தின் போது ஏற்படும் துன்பங்கள் அடியோடு நீங்கும்…” என ஸ்ரீ கிருஷ்ண பகவானே, தர்மராஜனுக்கு உபதேசித்துள்ளார் என்றால், இந்த ஸ்தோத்திரத்தை உயர்வை மேலும் கூற வேண்டுமோ ?

   சனி பகவானின் சஞ்சார தோஷம், ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் நீச்சம் அடைந்திருத்தல் போன்ற தோஷங்களை அடியோடு நீக்கும், சனிபகவானே அருளிய இந்த மகத்தான சக்தி வாய்ந்த “ஸ்ரீ ந்ருசிம்ஹ துதி’ யை மக்கள் நலன் கருதி, பல ஆன்மீக சேவையைச் செய்து வரும் புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி ட்ரஸ்ட் பிரசுரித்துள்ளது.

   மேலும் விவரங்களுக்கு…
   ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி ட்ரஸ்ட்
   ராமகிருஷ்ணா நகர்
   புதுச்சேரி – 3

   http://www.lakshmihayagriva.org/books.html

   தொலைபேசி எண்: +91 413 2222928 / 0413 – 2260096

 3. MrJn August 28, 2016 at 11:46 AM Reply

  நன்றி balhanuman .
  இந்த “ஸ்ரீ சனிபகவானின் ரக்ஷோபுவன ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்” எங்கு கிடைக்கும் என யாராவது சொல்லயிலுமா?

  • BaalHanuman August 28, 2016 at 2:59 PM Reply

   சனிபகவான் அருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

   சனிபகவானே அருளிய இந்த அற்புத துதியின் எட்டு ஸ்லோகங்கள் ஸ்ரீ நரசிம்ம பீஜாட்சரங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

   “இந்த அற்புத ஸ்தோத்திரத்தை எவர் பக்தியுடன் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்கிறார்களோ, அவர்களுக்கு சனி பகவானின் ஜென்ம ராசி, அர்த்தாஷ்டக ராசி, அஷ்டம ராசி, ஏழரைக் கால சனி சஞ்சாரத்தின் போது ஏற்படும் துன்பங்கள் அடியோடு நீங்கும்…” என ஸ்ரீ கிருஷ்ண பகவானே, தர்மராஜனுக்கு உபதேசித்துள்ளார் என்றால், இந்த ஸ்தோத்திரத்தை உயர்வை மேலும் கூற வேண்டுமோ ?

   சனி பகவானின் சஞ்சார தோஷம், ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் நீச்சம் அடைந்திருத்தல் போன்ற தோஷங்களை அடியோடு நீக்கும், சனிபகவானே அருளிய இந்த மகத்தான சக்தி வாய்ந்த “ஸ்ரீ ந்ருசிம்ஹ துதி’ யை மக்கள் நலன் கருதி, பல ஆன்மீக சேவையைச் செய்து வரும் புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி ட்ரஸ்ட் பிரசுரித்துள்ளது.

   மேலும் விவரங்களுக்கு…
   ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி ட்ரஸ்ட்
   ராமகிருஷ்ணா நகர்
   புதுச்சேரி – 3

   http://www.lakshmihayagriva.org/books.html

   தொலைபேசி எண்: +91 413 2222928 / 0413 – 2260096

 4. MRJN August 31, 2016 at 3:33 AM Reply

  மிக்க நன்றி , Balhanuman .

  http://www.lakshmihayagriva.org/books/sri%20Lakshmi%20Narasima%20Sotiram.pdf — இதில் “ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்” மிக அற்புதமாக விளக்கிச்சொல்லப்பட்டுள்ளது .

  http://koshasrini.blogspot.com.au/2013/08/blog-post_4607.html – இதில் இன்னும் தெளிவான எழுத்துக்களில் .

  https://www.youtube.com/watch?v=PfoMZnehp2Y – இதில் ஒலியுடன் .

  ஆனால் சிறு சந்தேகம். “சனிபகவான் அருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்” OR “ஸ்ரீ சனிபகவானின் ரக்ஷோபுவன ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்” என்பது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றதா ? ஏன்னென்றால் மேலே குறிப்பிட்ட சுட்டியில் (புத்தகத்தில்) “ஸ்ரீ நவ நரசிம்ஹ துதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் இதை ஸ்ரீ சனி பகவான் அல்லாத வேறு ஒரு மகா ஸ்வாமிகள் அருளியதாக சொல்லப்பட்டு இருக்கின்றது .

  “ஸ்ரீ சனிபகவானின் ரக்ஷோபுவன ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்” -க்கான இனைய தேடல்கள் எல்லாம் “ஸ்ரீ நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையே ” விடையாய் தருகின்றன . குழப்பமாகவும் , சரியான ஸ்தோத்திரத்தை சொல்லவேண்டுமே என்கிற பதட்டமுமாக இருக்கிறது.

  உங்களை சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும் . இங்கு ஆஸ்திரேலியாவில் நேரில் யாரிடமும் கேட்பதற்கு வசதியில்லை. உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கேனும் இது பற்றி தெரிந்து ..நீங்கள் எங்களுக்கு சொன்னால் மிக பயனுடையதை இருக்கும்.

  நன்றி பல கோடிகள் . வாழ்க வளமுடன் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s