2016 குரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம் – AMR


(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

ஏழரைச் சனியில், ஜென்ம ராசி சனியின் பிடியில் சிக்கியுள்ள விருச்சிக ராசி அன்பர்களுக்கு குருபகவானின் கன்னி ராசிப்  பிரவேசம் ஓர் ஒப்பற்ற, மகிழ்ச்சியளிக்கும் வரப்பிரசாதமாகும். சனி பகவானும் சிறிது, சிறிதாக நகர்ந்து தனுர் ராசியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இத்தகைய நிலையில் குரு பகவான் கன்னி ராசிக்கு மாறுவது உங்களுக்கு ஏற்படவிருக்கும் சிறந்த யோக பலன்களை எடுத்துக் காட்டுகிறது.

அறிவுரை:

சில பிரதான கிரகங்கள் அனுகூல நிலையில் சஞ்சரிக்கும்போது, அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன, அத்தகைய கிரக சஞ்சார நிலைகளை நமக்கு முன்கூட்டியே எடுத்துக் காட்டுவதால்தான் ஜோதிடக்கலைக்கு நேத்திரம் என்ற பெயரும், பெருமையும் ஏற்பட்டுள்ளது. ஜென்மச்சனியின் பிடியும் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், குருபகவான் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால் ஏற்படும் வருமான உயர்வை நீங்கள் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஜென்ம ராசி சனிக்காக நீங்கள் செய்து வரும் பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம். ஏனெனில் சனீஸ்வரர் விருச்சிக ராசியில் இருந்து முழுவதும் விலகவில்லை. தனுர் ராசியின் எல்லைக்கோட்டிற்கு சமீபத்தில்தான் அமர்ந்திருக்கிறார்.

பரிகாரம்:
1) திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக்காடு தரிசனம் நன்மை அளிக்கும்.

2) சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயிலிலோ அல்லது வீட்டிலோ மாலையில் மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருதல்.

3) ஒரு முறை சனி சிங்கனாப்பூர் (மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது) சென்று தரிசித்து வருதல்.

4) வியாழக்கிழமைகளில் ஒரு பொழுது உணவருந்தி விரதம் இருத்தல், குருபகவானால் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

5) பல மகான்களின் அவதாரத் தலமான இஞ்சிமேடு திருத்தல தரிசனம் குருபகவானின் திருவுள்ளத்திற்கு மிகவும் உகந்தது.

6) முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருச்சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகைக்கு சனிக்கிழமைகளில் பசுநெய் தீபம் ஏற்றித் தரிசிப்பது அவசியம்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s