2016 குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம் – AMR


(சித்திரை 3-ம் பாதம் முதல் ஸ்வாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)

இதுவரை துலா ராசி அன்பர்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமாக இருந்த குருபகவானால் வரும் ஒரு வருட காலத்திற்கு எவ்வித நன்மையையும் ஏற்பட வாய்ப்பில்லை. ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் நன்மை செய்வார்கள். ஏழரைச் சனியும் அவரது கடைசிப் பகுதியில் சஞ்சரிப்பதால் அவரால் ஏற்பட்டு வந்த சிரமங்களும் பெருமளவில் குறையும். ராசிக்கு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கும் குருவினால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், அவை அனைத்தும் சுபுச் செலவாகவே இருக்கும். கேதுவின் நிலையினால் திவ்ய தேச யாத்திரைகளும், புண்ணிய க்ஷேத்திர தரிசனமும், புனித நதி ஸ்நானமும், குருவின் கடாக்ஷமும் கிட்டும்.

அறிவுரை:
சுபுச்செலவுகளே ஆனாலும்கூட, கூடிய வரையில் சிக்கனமாக இருக்க முயற்சிக்கவும். பெண் அல்லது பிள்ளைக்கு வரனை நிச்சயம் செய்யும்போது நன்கு விசாரித்தபிறகே வரனை நிச்சயிக்கவும். ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது நன்கு ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், குருபகவான் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தவறான வரனை நிச்சயிப்பதற்கு வாய்ப்புள்ளது. சனிபகவானின் நிலையினால் தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் அதிக அலைச்சலும், கடின உழைப்பும் இருப்பதால், சக்திக்கு மீறிய உழைப்பை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம்.

பரிகாரம்:

1) தினமும் ஒரு தசகம் “ஸ்ரீமந் நாராயணீயம்” பாராயணம் செய்து வருவது குருபகவானின் திருவுள்ளத்திற்கு மிக, மிக உகந்த பரிகாரமாகும். குருவாயூர் திவ்ய க்ஷேத்திரம் குரு, வாயு பகவானால் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.

2) தேரழுந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

3) திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் தரிசனம் நல்ல பலனளிக்கும். அக்னி அம்சமான இந்த கிரியில் நமது கண்ணிற்கு புலப்படாத ஏராளமான சித்தர்கள் இன்றும் தவமியற்றி வருகின்றனர். அவர்கள் அனுக்கிரஹம் குரு பகவானின் திருவருளைப் பெற்றுத் தரும்.

4) சூரியனார் கோயில், இத்தகைய கிரக நிலையினால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் தலமாகும்.

5) ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் ராமானுஜர் திவ்ய தரிசனம் குரு பகவானின் விரய ஸ்தான சஞ்சார தோஷத்தைப் போக்கும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s