2016 குரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி – AMR


(உத்திரம் 2-ம் பாதம் முதல் ஹஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)

இதுவரையில் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய சிம்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான், தற்போது உங்கள் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். நவக்கிரஹங்களின் கோள்சார விதிகளின்படி, குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது சிரமங்கள் ஏற்படும் என்ற ஒரு பொதுவான ஜோதிடக் கருத்து உண்டு. ஸ்ரீ ராமபிரானின் வனவாசம், அவரது ஜாதகத்தில் குருபகவான் ஜென்ம ராசியில் பிரவேசித்தபோதுதான் நிகழ்ந்தது என்பதால்தான் இத்தகைய ஒரு கருத்து உருவானது. இத்தகைய கருத்தும் தவறானது. குருபகவான் ஜென்ம ராசியில் வரும்போது, அத்தகைய ஜாதகர்கள் எல்லோரும் வனவாசம் செல்ல நேரிடும் என்று கூற முடியுமா? அந்தந்த ராசிகளுக்கும், அவ்வப்போது நடைபெறும் தசா, புக்திகள், மற்ற கிரகங்களின் கோள்சார நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பலன்கள் ஏற்படும்.

அறிவுரை:
திட்டமிட்டுச் செலவு செய்தல் அவசியம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கவும். நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதம், பகையுணர்ச்சி ஆகியவற்றை விலக்கவும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போது, உணர்ச்சிவசப்படாமலும், டென்ஷன் இல்லாமலும் மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளவும். பணப்பற்றாக்குறை ஏற்படும்போது, கூடிய வரையில் கடன் வாங்காமல் சமாளிக்க முயற்சிக்கவும். ஏனெனில், குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, ‘வாங்கும் கடன் வளரும்‘ என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பரிகாரம்:
1) தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வரவும். குடும்பத்தில் ஏற்படும் ஒற்றுமைக்குறைவு நீங்க உதவும் மாமருந்து இது.

Sri Sammohana Krishna

சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!
இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!
சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!!
பொருள்:
தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான புஷ்பங்களைத் தரித்தவரும், இன்னல் படும் மக்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிக்கிறேன்!

2) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் திருத்தலம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணரை தரிசித்துவிட்டு வரவும்.

FullSizeRender (21)

3) தினமும் ஒரு தசகம் ஸ்ரீமந் நாராயணீயம் பாராயணம் செய்து வருதல், அளவற்ற நற்பலன்களை அளிக்கும்.

image (3)

4) திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தரிசனம், குருபகவானின் ஜென்ம ராசி சஞ்சாரத்தின்போது கன்னி ராசியினருக்குத் துணை நிற்கும்.

5) மிகப்புராதானமானதும், ஆச்சார்ய புருஷர்களின் அவதாரத் தலமுமான இஞ்சிமேடு க்ஷேத்திர தரிசனம்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s