Sweet Corn Koottu ஸ்வீட் கார்ன் கூட்டு! – கலியுக நளன் பாரதி மணி


எங்கள் நாஞ்சில்நாடு மூன்றுபோகம் நெல் விளையும் பூமி என்பதால், சின்னவயதில் சோளக்கொண்டை பார்த்ததேயில்லை! வடசேரி கனகமூலம் சந்தைக்கும் வராது! தில்லிபோய்த்தான் தணலில் சுட்டு விற்கும் ‘புட்டா’ சாப்பிட்டிருக்கிறேன்.

இன்று ஃப்ரிஜ்ஜில் எப்போதோ வாங்கிய ஒரு ஸ்வீட் கார்ன் முழித்துக்கொண்டிருந்தது. சரி…….வட இந்திய சப்ஜியாக மாற்றுவதற்கு பதில் இதை ஒரு கூட்டாக்குவோமேயென்று தோன்றியது இது தான் முதல்தடவை. ”எங்க வீட்டில் நாங்க எப்பவும் செய்வமே!” என்று சொல்பவர்கள் மோதி மாதிரி 52” நெஞ்சை நிமிர்த்தி காட்டிக்கொள்ளலாம்! உங்களோடு நான் சேர்ந்துகொள்கிறேன்!

சார்!….ரெசிப்பி…ரெசிப்பி!” என்று கேட்பவர்களுக்கு ஒரு கண்டிஷன்! இன்று மாலையே பழமுதிர்சோலை போய் ஸ்வீட் கார்ன் வாங்கி நாளை காலை இதை செய்துவிடவேண்டும்!

என்னிடமிருந்தது ஒரு சோளக்கொண்டை தான்! அதை பூராவும் உதிர்த்துக் கொள்ளுங்கள். 2 தக்காளியைப்பொடியாக நறுக்கிக்கொண்டு ஒரு இணுக்கு கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி, ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து குக்கரில் நன்றாக வேகவிடவும்.

அரைமூடித்தேங்காய், 3 மி. வற்றல், 1 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்த விழுதை வெந்த சோளத்தோடு கலக்கி கொதிக்கவிடவும்.

தாளிப்புக்கு:: 2 தேக்கரண்டி Dessicated coconut அல்லது தேங்காய்த்துருவல், ஒரு தேக்கரண்டி வீதம் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, ஒரு இணுக்கு கறிவேப்பிலை இவற்றை கருகாமல் பொன்னிறத்தில் வறுத்து அதன் தலையில் கொட்டவும்!

தயார்!…..மேலே இருக்கும் ஸ்வீட் கார்ன் கூட்டு!

Bharati Mani

3 thoughts on “Sweet Corn Koottu ஸ்வீட் கார்ன் கூட்டு! – கலியுக நளன் பாரதி மணி

  1. rjagan49 August 24, 2016 at 12:38 PM Reply

    Iththanai kuuttani samaachaarangal irunthasl, ungaL kaipakkuvaththil ethuvum suvaikkum!! Aamaam intha adaimozhiyodu Nadarajan endru oruththar irukkiraarae, avarukkuth theriyumaa intha recipe!!

    – R. J.

  2. பாரதி மணி August 29, 2016 at 4:52 PM Reply

    அய்யா……ஜகன்! அந்த அடைமொழி என்னைக்குறிப்பதல்ல!….எனக்கும் அதற்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது!

    • BaalHanuman August 29, 2016 at 6:48 PM Reply

      இந்தப் புதிய அடைமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா :-))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s