2016 குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம் – AMR


(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

இதுவரை உங்கள் ராசிக்கு யோக பலன்களை அளிக்கும் ராசியான சிம்ம ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான், வரும் ஒரு வருட காலத்திற்கு கன்னி ராசியில் சஞ்சரிப்பது நன்மையளிக்கும் மாறுதல் அல்ல. மேலும், இதுவரை குருபகவானின் கட்டுப்பாட்டிலிருந்த ராகு, இனி தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும் குருபகவானின் கன்னி ராசி மாறுதல் வழி வகுக்கும்.

அறிவுரை:
கடின உழைப்பையும், தேவையற்ற அலைச்சலையும், வீண்செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். வேலைக்குச் சென்று வரும் கடக ராசியினர் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொண்டால் போதும். அலுவலகத்தில் அவசியமற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது கேதுவினால் கிட்டும் நிதி உதவிகளை உபயோகமாகச் செலவிடுங்கள்.

Thirupathi

பரிகாரம்:
1) ஒரு முறையாவது திருமலை-திருப்பதி சென்று, முதலில் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயாரையும், பின்பு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானையும் தரிசித்துவிட்டு வரவும்.

2) ஸ்ரீபெரும்புதூர் சென்று, மகத்தான கருணை வாய்ந்த ஸ்ரீமத் ராமானுஜரை தரிசிப்பது நல்ல பலனளிக்கும்.

3) மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நிதி வளாகத்தில் திகழும் ஸ்ரீ சித்தர் சந்நிதியில், வியாழக்கிழமை ஒன்றில் பசுநெய் தீபமேற்றி தரிசித்துவிட்டு வருவதை கைமேல் பலனளிக்கும்.

4) பூவரசன்குப்பம் அழகன் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் தரிசனம்.

5) பெண்கள், தினமும் ஸ்ரீ அபிராமி அந்தாதி சொல்லி வருவது சக்தியுள்ள பரிகாரமாகும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s