2016 குரு பெயர்ச்சி பலன்கள் – சிம்மம் – AMR


(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

சிம்ம ராசியினருக்கு குருபகவான் பரிபூரண சுபக்கிரகமாவார். அத்தகைய குரு உங்கள் ராசிக்கு அனுகூலமாக கன்னிக்கு மாறுவது அளவற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய மாறுதலாகும்.

அறிவுரை:
நவக்கிரகங்கள் சதா சுழன்று கொண்டே இருப்பதால், மனித வாழ்வில் நன்மையையும், தீமையும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆதலால், எப்போதெல்லாம் நன்மைகள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் விவேகத்துடன் தங்கள் எதிர்கால நல்வாழ்விற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட பரிகாரங்கள் குருபகவானளிக்கும் நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

IMG_4557

பரிகாரம்:
1) ஜென்ம ராசியில் ராகுவும், அர்த்தாஷ்டக ராசியில் சனி பகவானும் நீடிப்பதால், திருக்கொள்ளிக்காடு மற்றும் திருநள்ளாறு க்ஷேத்திர தரிசனம் நல்ல பலனளிக்கும்.

2) திருவண்ணாமலை திருத்தல தரிசனமும், கிரிவலமும் ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும்.

3) ஜென்ம ராசி ராகுவினால், அவ்வப்போது ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால், ஸ்ரீவாஞ்சியம் திருத்தல தரிசனம் சிறந்த பலன் அளிக்கும்.

4) சனிக்கிழமைதோறும் மாலையில் திருக்கோயில் ஒன்றிலோ அல்லது மஹான்களின் ஜீவ பிருந்தாவனத்திலோ பசுநெய் தீபமேற்றி வைத்து, 12 முறை வலம் வந்து பூஜிப்பது சிறந்த பரிகாரமாகும்.

5) கும்பகோணத்தையடுத்த ஸ்ரீ ஒப்பிலியப்பன் சன்னதி தரிசனம் நல்ல பலனளிக்கும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

Guru Bagavan

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s