2016 குரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம் – AMR


(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இதுவரை உங்கள் ராசிக்கு திருதீய ஸ்தானமாகிய சிம்ம ராசியில் சஞ்சரித்த குரு பகவான், தற்போது கன்னி ராசிக்கு மாறுவது மிகவும் நல்லது. ராசிக்கு 3-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும்போது, ஜீவநதியும் வற்றும் என்ற கருத்து ஜோதிடக் கலையில் கூறப்பட்டுள்ளது.

அறிவுரை:
குருபகவானின் ராசி மாறுதல் சென்ற ஒரு வருட காலமாக குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிரமங்களை ஓரளவே குறைக்கும். ஆதலால், அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குத் தொடர்ந்து சிக்கனமாக இருப்பதுடன், சிறுகச் சிறுகப் பழைய கடன்களையும் அடைத்து விடுங்கள். சனி, ராகு ஆகிய இரு முக்கிய கிரகங்களும் இவ்விஷயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

kamadhenu-gowmatha-sacred-cow

பரிகாரம்:
1) மாதந்தோறும் உத்திராட நட்சத்திர தினத்தன்று மேல்வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வைத்து, தரிசித்துவிட்டு வரவும். இத்தலம் காஞ்சி மாநகரிலிருந்து பனப்பாக்கம் செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

2) வியாழக்கிழமைதோறும் கன்றுடன் கூடிய பசுவை நீராட்டி, நெற்றிக்குத் திலகமிட்டு, மலர் சூட்டி, உணவளித்து, 12 தடவைகள் வலம் வந்து பூஜிப்பது குருபகவானின் கன்னிராசி சஞ்சார நிலைக்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

3) வியாழக்கிழமைகளில் உபவாசம் இருத்தல்.

4) வியாழன்தோறும், ‘மந்த்ராலயம்‘ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மிருத்திகா பிருந்தாவனம் சென்று நெய் தீபமேற்றி வைத்து, 12 தடவைகள் பிரதட்சண நமஸ்காரம் செய்து பூஜிப்பது அற்புத பலனளிக்கும்.

5) சென்னிமலை ஸ்ரீ முருகன் தரிசனம். செவ்வாய் அல்லது வியாழக்கிழமை தரிசனம் விசேஷ பலனைத் தரும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s