2016 குரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் – AMR


(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

ரிஷப ராசி அன்பர்களுக்கு குரு பகவானின் ஒரு வருட கன்னி ராசி சஞ்சார காலம் பல நன்மைகளை அளிக்க உள்ளது.

அறிவுரை:
உடல்நலனில் கவனம் வேண்டும். கூடிய வரையில் தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும். கற்பனையான கவலைகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:

1) கரூரை அடுத்த தேவர் மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கதரி நரசிம்மர் தரிசனம் ராகுவின் சஞ்சார நிலையினால் ஏற்படும் தோஷத்தை அடியோடு போக்கி, குருபகவானால் ஏற்படவிருக்கும் நற்பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கு நிகரற்ற பரிகாரமாகும்.

2) தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகத்தைச் சொல்லி, அவரை பூஜித்து வரவும்.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். பாற்கடலைக் கடையும் பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

சதுர்புஜம் பீத வஸ்திரம்
சர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸூராஸூர நமஸ்க்ருதம்!

3) தினமும் ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அதைப் படித்து வரவும்.

4) முடிந்தபோது, ஒருமுறை ஸ்ரீ வாஞ்சியம் எனும் அற்புத திருத்தலத்திற்குச் சென்று, நெய் தீபமேற்றி வைத்து, வழிபட்டு வரவும். இந்தப் பரிகாரங்கள் போதும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

-நன்றி குமுதம் ஜோதிடம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s