குன்றாத வாழ்வு தரும் குரு பகவான் – ஏ.எம்.ராஜகோபாலன்


Maha Periyava 30

பராசர சம்ஹிதை

சனி, ராகு, செவ்வாய் ஆகிய முக்கிய, வலிமையான கிரகங்கள்கூட, குருவுடன் சேர்ந்திருந்தாலும், குருவினால் பார்க்கப்பட்டாலும், குருவின் ராசிகளான தனுசு, மீனம் ஆகியவற்றில் ஜெனனகால ஜாதகத்தில் அமர்ந்திருந்தாலும், தங்களது குரூரத் தன்மையை இழந்து சாந்தமாகி விடுகின்றனர் என்று வராஹமிஹிரரின் பிருகத் ஜாதகம் கூறுகிறது.

வியாழனின் கன்னி ராசிப் பிரவேசம்!

இதுவரை தனது நட்பு ராசியான சிம்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இனி அடுத்து வரும் சுமார் ஒரு வருட காலத்திற்கு (வக்ர கதி காலங்களைத் தவிர) கன்னி ராசியில் சஞ்சரிக்கின்றார். கன்னி ராசிக்கு அதிபதியான புதன் குருவிற்கு பகை கிரகம் ஆவார்.

வழக்கம்போல், வாக்கிய கணித பஞ்சாங்க முறைப்படி, குருபகவானின் கன்னி ராசிப் பெயர்ச்சி, ஆகஸ்ட் 2-ம் தேதியன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைப்படி ஆகஸ்ட் 10-ம் தேதியன்றும் நடைபெறுகிறது.

இனி வரும் ஒரு வருட காலத்திற்கு, குருபகவானின் கன்னி ராசி சஞ்சார பலன்களைப் பார்ப்போம்.

மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ராசி அன்பர்கள் பின்வரும் மூன்று ஸ்லோகங்களை காலை, மாலை இரு வேளைகளிலும், ஒவ்வொரு ஸ்லோகத்தையும் 12 தடவைகள் வீதம் சொல்லி வருவது, குருபகவானின் அனுகூலமற்ற சஞ்சார கால தோஷத்தை நிச்சயமாக நிவர்த்தி செய்யும். நம்பிக்கை வைத்துச் செய்து வாருங்கள். கைமேல் பலன் கிட்டும்.

மற்ற ராசி அன்பர்களும், இந்த மூன்று ஸ்லோகங்களையும் மேற்படி கூறியவாறு சொல்லி வந்தால், அற்புதமான பலன்கள் கிட்டும்.

குருபகவானின் தியான ஸ்லோகங்கள்:

1) வராக்ஷமாலிகா தண்ட கமண்டலூதரம் விபும் |
புஷ்பராகாங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும் ||

2) தேவானாம் ச ரிஷீணாம் ச காஞ்சனா ஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி பிரஹஸ்பதிம் ||

3) தேவமந்த்ரி விசாலாக்ஷ : சதா லோகஹிதேரத : |
அநேக சிஷ்ய சம்பூர்ண: பீடாம் ஹரது மேகுரு: ||

தற்போதைய குரு பெயர்ச்சியில் ஒரு முக்கிய அம்சத்தை நாம் மறந்துவிடக்கூடாது. தனது பகை வீடான சிம்ம ராசியில் நிலை கொண்டுள்ள ராகு, இதுவரை குருபகவானின் சேர்க்கையினால், அவரது கட்டுப்பாட்டிலிருந்து வந்தார். தற்போது குரு அவரை விட்டு விலகி விட்டதால், ராகுவின் பலம் அதிகரிக்கிறது. இதற்கான பரிகாரத்தையும் தேவைப்படும் ராசியினருக்குக் கூறியிருக்கிறோம்.

இனி ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலாபலன்களைக் கவனிப்போம். குறிப்பிட்ட ராசியினருக்கு ஆங்காங்கே மிக எளிய, ஆனால் உடனுக்குடன் பலனளிக்கும் பரிகாரங்களைக் கூறியிருக்கிறோம். இவற்றால் நமது வாசக அன்பர்கள் பயனடைந்தால் மனநிறைவும், மகிழ்ச்சியும் பெறுவோம்! நன்றி!

-நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s