மூன்று ஊறுகாய்கள் – பாரதி மணி


இன்று என் கையால் மூன்று ஊறுகாய்கள் நேர்த்தியாக உருவாகின. மாங்காய்த்தொக்கு, புளி இஞ்சி, வெந்தயமாங்காய்!

மாங்காய்த்தொக்கு பெரிய கடாயில் இருப்பது. Cut Mangoes.….அதைத்தான் வெந்தயமாங்காய் என்றும் சொல்வார்கள். வறுத்த வெந்தயப்பொடியும், பெருங்காயப்பொடியும் காய்ந்த நல்லெண்ணெயில் பொரித்து சேர்க்கவேண்டும்.

ஹிந்தியில் ‘கெட்ட வார்த்தைகள்’……சமையலில் “ஊறுகாய்கள்” ரெண்டுமே சுவாரஸ்யமாக இருக்கும்!

மாங்காய் எல்லா பழமுதிர்சோலை கடைகளிலும் கிடைக்கிறது. இப்போது மட்டுமில்லை மார்கழி, தை மாதங்களிலும் கிடைக்கிறது! என்ன….விலை கிலோ 150 ரூபாய் சொல்லுவான்! அவ்ளோ தான்!

பெங்களூரிலேயே கிடைக்கிறது.போனவாரம் என் மகள் வீட்டில் விஸ்தாரமாக எல்லா ஊறுகாய்களும் போட்டேன்!

வீடு பூரா பெருங்காய வாசனை!

என் சமையலில் பெருங்காயம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். I like it that way!

அசைவ உணவுக்கு பூண்டு எப்படியோ அதற்கும் ஒரு படி மேல் சைவ உணவுக்கு பெருங்காயம்!

நான் தில்லியில் இருந்ததுவரை காபூலிலிருந்து வரும் பால் காயம் தான்!  White Hing. கரைத்தால் கெட்டியாக கள்ளிப்பால் போல இருக்கும்.  ஆஹா!…..என்ன வாசனை. அதை சமையலறையில் பக்கத்தில் வைத்துக்கொண்டு சமைத்தாலும் போதும்….வாசனை வந்துவிடும். கொஞ்ஞ்ஞ்சமாப்போடணும். துளி அதிகமானால் கசந்துவிடும். மார்க்கெட்டில் கிடைக்கும் எல்ஜி பெருங்காயத்தூளில் (LG Compound Asafoetida) ஒரு குந்துமணி அளவே பால்காயம்……மிச்சமெல்லாம் கோதுமை ஆட்டா!

எல்ஜி போகஸ்னு சொல்லலே. பால் காயம் ஒரு துளி அதிகமானாலும் சாம்பார் சாப்பிடமுடியாது. அதனால் தான் அந்தக்காலத்தில் லால்ஜி கோது & கம்பெனி கூட்டுப்பெருங்காயம் LG Compound Asafoetida தயாரித்தார்கள் அதில் 98% ஆட்டாவும் 2% மட்டும் பால்காயமும் கலந்திருக்கும். அது மோசடி அல்ல. Ingredients-லேயே குறிப்பிட்டிருப்பார்கள்!

நல்ல பால்காயத்தை உபயோகிப்பது ஒரு வித்தை! எல்லோருக்கும் வராது. ஆனால் காம்பெளண்ட் பெருங்காயம் கூடினாலும் ருசி கெடாது.!

அப்போதெல்லாம் அடிக்கடி காபூல் போவேன். பழைய மார்க்கெட் போனாலே “ஸாப் ஆயியே….ஆப்கா ஹிங் தைய்யார் ஹெ!” என்று வரவேற்கப்படுவேன். முந்திரிப்பருப்பும், பாதாம் பிஸ்தாவும் நம்மூர் வேர்க்கடலை விலையில் கிடைக்கும்!……அதொரு காலம்!

கடுகு நன்றாக வெடித்து தாளிக்காதவர்களை நான் உடனே தூக்கில் போட்டுவிடுவேன்!

 

Advertisements

4 thoughts on “மூன்று ஊறுகாய்கள் – பாரதி மணி

 1. Jayanthi sridharan August 14, 2016 at 10:03 PM Reply

  Nice, as usual. Ippodhellam LG powder il makes Shawn kalakkirargal.

 2. Jayanthi sridharan August 14, 2016 at 10:04 PM Reply

  Maida wheat illa

 3. Ram Nara August 14, 2016 at 11:19 PM Reply

  lovely

 4. Venkatesh V September 8, 2016 at 9:54 AM Reply

  மணி சார்,
  வெந்தயமாங்காய் செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது. இது போன்ற எளிய குறிப்புகளை ஸ்வயம் பாகிகளுக்காக தொடர்ந்து அனுப்பவும்.

  டிஸ்கி
  கடுகை வெடிக்க விட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s