கல்யாண தேங்காய்த் துவையல்!


thengaai thuvaiyal 1

சென்ற வாரம் ஒரு கல்யாணத்தில் இந்த தேங்காய்த் துவையலை சாப்பிட்டோம். நம் ஊரில் பாப்புலரான குக் சமைத்திருந்தார். என்ன ருசி! என்ன ருசி! வித விதமான வாசனை வேறு! காரசாரமாய், ருசியாய் துவையல் சாப்பிட்டு முடித்ததும் ஒரு குழுவாய் அவரிடம் சென்று, கேட்டு வாங்கிக் கொண்டு வந்த ரெசிபி இது. மறு நாள் எங்கள் எல்லோர் வீட்டிலும் சமையல் தேங்காய்த் துவையல்தான்.

தேவையான பொருட்கள்:
முற்றின தேங்காய் – 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி
இஞ்சி
உளுத்தம்பருப்பு – 1 டீ ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி (பவுடரல்ல)
சிவப்பு மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
புளி – ஒரு எலுமிச்சை அளவு

புளியை வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பெருங்காயம், தோல் நீக்கிய இஞ்சி, மிளகாய் வகைகள் உப்பு, புளி சேர்த்து நைஸாய் அரைக்க வேண்டும். பருப்பு வகைகள் இதனுடன் சேர்த்து ஒன்றிரண்டாய் அரைக்க  வேண்டும் (சாப்பிடும்போது வாயில் கரகரவென நொறுங்க). முடிவாக வெள்ளையாக துருவிய தேங்காயை (அடி ஓடு வரை துருவக் கூடாதாம்) இதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்தால் மூக்கை இழுக்கும் மணமும், நாவை இழுக்கும் ருசியுமாய், கண்ணுக்கழகாய்  தேங்காய்த் துவையல்!

நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி எப்படி இருந்தது என்ற உங்கள் அனுபவத்தை இங்கே பகிருங்களேன்!

– மல்லிகா குரு, சென்னை – 33 (இந்த வார குமுதத்தில்…)

ஓவர் டு நமது ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (தாளிக்கும் ஓசை)

*அம்மியில் அரைத்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

* தேங்காயின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் லேசாக வறுத்துக் கொள்ளலாம்.

* துவரம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். பலருக்குப் பிடித்திருக்கிறது.

* எனக்கு திவசத்தன்று செய்யும் தேங்காய்த் துவையல் பிடிக்கும். அம்மியில் அரைப்பது மட்டுமின்றி அத்துடன் 1 டீஸ்பூன் எள் சேர்ப்பதும் தான் சுவைக்குக் காரணம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். இதற்கே முதல் இடம்.

தயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s