5-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்


இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். ‘கிஞ்சித்காரம்‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலின் இறுதிப் பகுதி  இதோ…

ஸ்ரீராமர் முகத்தில் சந்தோஷம்

Sri Rama Parivar

பாம்பேல ஒருசமயம் ராமாயணம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒன்பது நாள் நிகழ்ச்சி. ஒரு வடநாட்டுப் பெண்மணி ஒன்பது நாளும் கேட்க வந்தார். ராமர் சன்னதியில் அவரும் உட்கார்ந்து கேட்பார். எனக்கு அவர் ஹிந்திக்காரர் என்பது தெரியாது. கடைசிநாள் நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும் அவரும் வந்து நமஸ்காரம் பண்ணினார். தினமும் வருகிறாரே என்பதற்காக நான் தமிழில் ஏதோ கேட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் “அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது” என்று சொன்னார்கள்.

தமிழர்கள்கூட நான்குநாள் வந்தால் ஐந்தாம்நாள் காணோம் என்று இருந்தார்கள். இவரோ ஒன்பது நாளும் விடாமல் வந்தார். “9 நாளும் வந்து ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து கேட்டீர்களே, உங்களுக்கு தமிழே தெரியாது என்றால் எதற்காக உட்கார்ந்திருந்தீர்கள்?” என்று ஹிந்தியில் கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு நீங்க சொன்ன விஷயமெல்லாம் புரியலை. ஆனா, நீங்க சொல்லிண்டிருந்த ராமாயணத்தை இங்க இருக்கிற ராமர் கேட்டார். அதைக் கேட்டு அவர் முகம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் அதைச் சேவிச்சிண்டு உட்காரத்தான் தினமும் வந்தேன்” என்று சொன்னார். அது என் பொட்டில் அடித்தமாதிரி இருந்தது. ராமாயணத்தில் ஊறி ராமர் ரசிக்கிறார்; அவர் முகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவதுதான் பக்தனின் இலக்கணம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார்.

பக்தர் குழாத்தைத் திருத்தல யாத்திரை அழைத்துச் செல்வதால் என்ன பயன்?

முதலில் சகிப்புத்தன்மை வரும். வீட்டில் வசதியுடன் பிரைவசி, பிரைவசி என்று இருக்கிறோம். அதைத் துறந்து வெளியில் வந்து பலபேருடன் பழக, தங்கும் அறையைப் பகிர்ந்துகொள்ள, முடிகிறது. அதற்கு ஒப்புக்கொள்கிறோம்; அதற்குப் பழகுகிறோம். பொது இடங்களில் பலருடன் இணைந்து சாப்பிடப் பழகுகிறோம். பிருந்தாவன யாத்திரையின்போது ஒரு கிரவுண்டில், ஒரே சமயத்தில் எட்டாயிரம் பேரை அமர வைத்து, 20 நிமிஷத்தில் அனைவருக்கும் பரிமாறியிருக்கிறோம். 8,000 பேர் அந்த யாத்திரைக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு செவ்வகமான மைதானத்தில் அமரவைத்து ஏழுநாள் பாகவத சப்தாஹம் சொன்னேன். இரண்டரை மணிநேர உபன்யாசம் அது. முடிந்ததும் அத்தனை பேருக்கும் ஒரே சமயத்தில் சாப்பாடு!

எங்கள் யாத்திரையில் டி.வி., மீடியா, வம்பு, தும்பு எதுவும் கிடையாது. அதெல்லாம் இல்லாமல் பகவானிடத்திலேயே உள்ளத்தைச் செலுத்திப் பழகமுடிந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் பொதுநதிகளில்தான் குளிக்கவேண்டும். அதற்குப் பழகுகிறார்கள். திமிர்த்தனமும், வீண் பேச்சும் இல்லாமல், கோபித்துக் கொள்ளாமல் இருக்கப் பழகுகிறார்கள். Indirect weight reduction program இது. நிறைய நடக்க வைப்போம். மலை ஏறவேண்டும், இறங்கவேண்டும். நதிக்கரையில் நிறைய நடக்கவைப்போம். சரீரம் இளைத்து நன்றாக ஒத்துழைக்கும். நம் மனம், சரீரம், ஆத்மா என எல்லாவற்றிலும் இது நல்ல மாறுதல்களைக் கொண்டுவருகிறது.

கிஞ்சித்காரம் டிரஸ்ட்

கிஞ்சித்காரம் டிரஸ்ட்‘ மூலம் பல்வேறு நற்பணிகளைச் செய்கிறோம். ஐந்து கோயில்களில் நந்தவனத்தைப் பராமரித்து எம்பெருமானுக்கு புஷ்பமாலை சாற்றும் கைங்கரியத்தைச் செய்கிறோம். அங்கே இயற்கைச்சூழல் கெடாமல் பார்த்துவருகிறோம். ஸ்ரீரங்கத்தில் வேத பாடசாலை நடத்துகிறோம். கிராமப்புறக் குழந்தைகளுக்கு 12 வயதிலிருந்தே நல்ல பள்ளியில் சேர்ந்து படிக்கப் பணவுதவி செய்கிறோம். தற்போது எஞ்சினியரிங் படிக்கக்கூட உதவுகிறோம். ‘அப்யாச கேந்திரா‘ என்னும் vocational training center for special children (kinchit.org/abhyasa-kendra) ஒன்றை ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்து நடத்தி வருகிறோம். இவர்களை 14 வயதுக்குமேல் வைத்துப் பராமரிக்க நிறைய சென்டர்கள் இல்லை. அதனால் நாங்கள் எடுத்துக் கொள்ளும்பொதே 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்குப் பயிற்சிகொடுத்து, சின்னச் சின்ன வேலைகளைச் சொல்லிக் கொடுத்து அதன்மூலம் வருவாய் வரும்படிச் செய்கிறோம். இதை V-Excel Foundation of Chennai உடன் சேர்ந்து செய்கிறோம். ஒழுக்க நெறிகளைச் சொல்லிக் கொடுக்கவும், அதில் எப்படி, ஆழ்வார்கள் பாசுரங்களில் உயர்வு தாழ்வில்லாமல், சாதி வேறுபாடில்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகவும் ஒரு 20 சென்டர்களில் வகுப்புகள் நடத்துகிறோம். இது 8-18 வயதுக்குட்பட்டவர்களுக்கானது. இதை ஸ்ரீரங்கம் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி என்று பல இடங்களில் நடத்திவருகிறோம். கேரளாவில் திருச்சூருக்கருகில் குலசேகர ஆழ்வாரின் அவதாரத் தலத்தில் 12 வருடம் முன்பு ஒரு கோயில் கட்டும் பாக்கியம் கிடைத்தது. தவிர நிறைய மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறோம்.

அடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். அது கோவிலாக இருக்கலாம், நினைவிடமாக இருக்கலாம். அவை பழுதுபட்டிருந்தால், HR & CE துறையுடன் சேர்ந்து, அதற்கான அனுமதி வாங்கி அந்த இடங்களை முழுவதுமாகச் சீர்செய்து, புதிதாக்கி பராமரிக்கிறோம்.

பார்க்க, கேட்க, படிக்க

பாசுரங்களைப் பாராயணம் செய்யும் முறையை அறிய:  https://kinchit.org/audio/

சுவாமிகளின் சிறு சிறு ஆன்மிக உரைகளை வாட்ஸப் மூலம் தினந்தோறும் கேட்க: https://kinchit.org/en-pani-whatsapp-satsang

சுவாமிகளின் உபன்யாசங்களைப் பார்க்க:
https://www.youtube.com/channel/UCmfLLEkGrpIAVXMoU-Z-QlA

(வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் ஆகஸ்ட் மாத இதழில் இருந்து…)

3 thoughts on “5-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்

 1. rjagan49 August 9, 2016 at 3:04 PM Reply

  How can we thank Sri Venkatraman for such an interview with Swami and you for posting the full interview in parts here! We are blessed. Sri Venkatraman has asked questions on behalf of all of us, people who have half knowledge of Sasthras and totally ignorant. And Swami has answered every question in detail and his own humility. My namaskasrams to him. I am forwarding these posts to all my relatives and good friends.
  Thank you,
  Jagannathan.

  • BaalHanuman August 9, 2016 at 7:22 PM Reply

   Thanks a lot Jagannathan Sir for your kind words. We were really blessed to listen to Swami’s lecture on the below topics here in person last month in Sunnyvale / Milpitas:

   இராமானுஜ முனியும் சமுதாயப் பணியும்
   ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பரமாத்மா
   ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் ஜீவாத்மா
   ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பிரபஞ்சம்
   The Divine Form and Attributes of Sri Narasimha
   The Philosophy in Narasimha Avatara

 2. Prof. Dr. வேதகிரி கணேசன், சிகாகோ, இல்லினாய்ஸ் November 8, 2016 at 12:35 AM Reply

  ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் படித்தேன். அதில் அவர் மும்பையில் ராமாயண உபன்யாசத்தின்போது தமிழறியாத ஒரு பெண்மணி தவறாமல் தினமும் வந்து உட்கார்ந்திருந்து, ஸ்ரீராமரின் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தை விவரித்திருந்தார். ‘எங்கெல்லாம் ராமநாமம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமார் உட்கார்ந்திருப்பார்’ என்று ஒரு சுலோகம் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்தப் பெண்மணி வடிவத்தில் ஹனுமாரே வந்திருந்தாரோ என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s