118-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa6

பரமாச்சாரியாருக்கு முன்னாலே வாசிக்கணும்னு ஆசையாக இருந்தது. அவர் தெய்வம் மாதிரி. ஆனால் அப்போதெல்லாம் லேடீஸ் அங்கே போய் அவர் முன்னால் வாசிக்க முடியாமல் இருந்தது. அவர் முன்னால் வாசிச்சு, அவர் என்னோட வயலினைத் தொட்டு ஆசி தரணும்னு எனக்கு ஒரே ஆசை. கடம் விநாயக்ராமிடம் என்னோட ஆசையைச் சொன்னேன். நான் பக்தி உள்ளவள் என்று எல்லாருக்கும் தெரியும். விநாயக்ராம் பரமாச்சாரியாரிடம் சொல்லி எப்படியோ அனுமதி வாங்கிவிட்டார். அவருக்கு முன்னால் உட்கார்ந்து வாசிச்சேன். வாசிச்சு முடிச்சதும் வயலினை எடுத்துக் கொடுத்தேன். அவர் அதைத் தொட்டு ஆசி தந்தார். அப்போது எம்பார் கண்ணனும் என்னோட வந்திருந்தார். விநாயகராமால் தான் இது நடந்தது. என்னால் இதை மறக்கவே முடியாது!

Violin Kanyakumari

–மகாபெரியவாள் ஆசிபெற்ற வயலின்! – ‘சங்கீத கலாநிதி’ கன்யாகுமாரி! (இந்த வார கல்கி கவர் ஸ்டோரியில்)

மஹா பெரியவா அருள்வாக்கு : –

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு குறுக்கு வழி இல்லையா ? ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். “என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்துவிடுவான் என்று சொல்லி, “நாஸ்தி அத்ர ஸம்சய:” – இதில் சந்தேகமே இல்லை என்று ‘காரண்டி‘ கொடுத்திருக்கிறார்.(கீதையில்). “அந்த காலே சமாம் ஏவஸ்மரன்” – என்னை மட்டுமே என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s