117-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் மஹா பெரியவாளை, ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள். பெரியவா, ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்குக் காசு கிடைக்குமே!” என்பார். காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள் பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக்கூடாது. ஆனால், இதற்கு பூக்காரி காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், நீ உன் வியாபாரத்தை முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு விட்டு வரக்கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார். அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை ஒன்பது மணி செய்தியைச் சொல்லச் சொல்லி, கேட்டுக் கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப்போக நெடு நாழிகை ஆகிவிடும்.

அன்று, புதுக்கோட்டையிலிருந்து ‘ஜானா’ என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப்போகுமுன் கொட்டகை சென்று, தேக சுத்தி பண்ணிக் கொண்டு வரச்சென்றார். அப்போது செய்தி சொல்லும் நாகராஜன், இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன். என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!” என்று மகாபெரியவர் பாதுகையைக் கழட்டுவதற்குக் காத்திருந்தார்.

பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம் கொடுத்து, இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார் பெரியவர்.

நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார்.

அப்படிப்பட்ட அன்புக்கு, அந்த ஏழைப் பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபா தரோம், இந்தப் பாதுகையைக் கொடு” என்றனர். அவள் அசையவேயில்லை.

பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல், ஏதாவது பழம் போன்றவற்றை அதில் போட்டுத்தான் அனுப்புவார். அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?” என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, ‘போயிடுத்து,போயிடுத்து’னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோல் பல நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்யட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார். நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.

கருணைக் கடல் காஞ்சி மாமுனிவரை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் பலர். அவரை அருகில் இருந்து கண்டவர்கள், தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே பெருமிதம் கொள்வர். காஞ்சி பரமாச்சாரியாருடன் தங்களுக்கு உண்டான அனுபவங்களைச் சொல்லும் போது, எவருமே சற்று உணர்ச்சிவசப்பட்டுப் போவதைக் கண்டிருக்கலாம். அவர்களில் ஒருவர் எஸ்.கணேசசர்மா. மகா பெரியவரின் புகழைப் பேசவும் கேட்கவும் கிடைத்த வாய்ப்புகளைப் பெரும் பேறாகவும் புண்ணியப் பலனாகவும் கருதிவரும் இவர், காஞ்சி மகானின் சரிதத்தை உபந்யாசங்களாக நிகழ்த்தி வருகிறார். மகாபெரியவருடன் பக்தர்கள் பலருக்கு உண்டான அனுபவங்களை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஒரு பூக்காரியின் அனுபவத்தை அவர் விவரித்த விதம் கண்களில் நீர் கசிய வைத்தது.

வரகூரான் நாராயணன்

மஹா பெரியவா அருள்வாக்கு : –

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு குறுக்கு வழி இல்லையா ? ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். “என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்துவிடுவான் என்று சொல்லி, “நாஸ்தி அத்ர ஸம்சய:” – இதில் சந்தேகமே இல்லை என்று ‘காரண்டி‘ கொடுத்திருக்கிறார்.(கீதையில்). “அந்த காலே சமாம் ஏவஸ்மரன்” – என்னை மட்டுமே என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s