தேவ கைங்கர்யம்! – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


நம் வாழ்வில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். அவற்றோடு, பிறருக்கும் உதவி செய்து வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்லவும் வேண்டும். குறிப்பாக, பகவத் ப்ரீதியை அனுபவிக்க வேண்டுமானால், இறைவன் தொடர்புடைய காரியங்களுக்குப் பெரிதும் உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் பகவானின் அருள் பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்றார் தமது சொற்பொழிவில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி.

பகவான் விஷ்ணுவின் அவதாரத்துடன் தொடர்புடைய நதிகள் எத்தனையோ குறிப்பிடப்படுகின்றன. ஆனாலும், அவற்றில் கோதாவரி நதியை விட யமுனை நதி சிறப்பிடம் பெறுகிறது. பகவான் விஷ்ணுவின் ராம அவதாரத்தின்போது ராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது, வான் வழியே சென்ற சீதை, கோதாவரி நதியிடம், தகவல் ஒன்றைச் சொல்லிவிடுமாறு கூறுகிறாள்.

‘ஹம்ஸ காரண்ட வாகீர்ணாம் வந்தே ப்ரஸ்ரவணம் கிரிம்டூ

ஷிப்ரம் ராமாய சம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண டூடூ’

இந்தச் சுலோகம் வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் வருகிறது. ‘அம்ஸங்களாகிய அன்னப் பறவைகள் நிறைந்த கோதாவரி நதியே உன்னை வணங்குகிறேன். நீ ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். ராவணன் சீதையைக் கடத்திச் செல்கிறான் என்பதை, என்னைத் தேடி வரும் ராமபிரானிடம் கூறி விடுங்கள்’ என்று கூறுகிறாள்.ஆனால், ராவணனிடம் கொண்ட பயத்தினால், சீதையின் கதறல் வார்த்தைகளை ராமபிரானிடம் சொல்லாமல் மௌனம் காத்து, தேவ காரியத்துக்கு உதவாமல் போயிற்று கோதாவரி நதி.

ஆனால், யமுனை நதியோ ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த போது, கிருஷ்ணரை தம் தலையில் சுமந்து வந்தார் வசுதேவர். பெருமழை பெய்து, நதி பெருக்கெடுத்துச் செல்லும்போதும், வேறு வழியின்றி அவர் யமுனையில் இறங்கிச் செல்கிறார். அப்போது, பகவானின் காரியத்துக்கு உதவும் வகையில், யமுனை நதி வழி விட்டு ஒதுங்கியது. மேலும், ஸ்ரீகிருஷ்ணர் சிறுவனாக அந்நதியில் விளையாடும்போது, அது அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பொதுவாக, பெருமாள் கோயில் திருவாராதனத்தின்போது, உத்தரணியில் சிறிது ஜலத்தை எடுத்து, அதை பெருமாளின் திருமுக மண்டலத்துக்கு அருகே கொண்டு சென்று, அவரது திருவாய்தனில் காட்டி, பெருமாள் அதை ஏற்று அருளியதாகக் கருதி, அந்த ஜலத்தை தீர்த்த வட்டிலில் சேர்ப்பார்கள். அந்தத் தீர்த்தம்தான் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.

அவ்வகையில், ஸ்ரீகிருஷ்ணர் யமுனையில் நீராடும் போது பலமுறை அந்நதி ஜலத்தை வாயில் இட்டு உமிழ்ந்திருப்பார். இதனால்தான் யமுனை நீர் புனிதத் தீர்த்தமாகி விட்டது. எனவே, யமுனைக்கு ஏற்றம் மிகுதி. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் 75வது ஸ்லோகத்தில் கடைசி பதமாக 712வது நாமாவளியாகஸூயாமுன:’ என்று இடம் பெற்றுள்ளது.

‘ஸத்கதி ஸத்க்ருதி ஸத்தா ஸத்பூதி ஸத்பராயண:

சூரசேனோ யதுச்ரேஷ்ட ஸந்நிவாஸ ஸுயாமுன:’

நல்ல யமுனையின் திறத்தை நாமும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பயில்கிறோம். இவ்வாறு, யமுனை நதியின் புனிதத்தைக் கருதியே ஆண்டாளும் தம் திருப்பாவையில், ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்ற தமது ஐந்தாம் பாசுரத்தில்தூய பெருநீர் யமுனைத்துறைவனை’ என்று பாடி யமுனையின் சிறப்பை எடுத்துக் காட்டினார்.

இவ்வாறு தேவ காரியங்களுக்கு உதவும்போது, பக்தர்களாலும் பலவற்றாலும் அவர்கள் சிறப்பு பெறுகிறார்கள். எனவே, நாமும் தேவ காரியங்களுக்கு உதவிபுரிந்து பகவத் ப்ரீதிக்கு பாத்திரர் ஆவோம்.”

–நன்றி தீபம் ஆன்மீக மாத இதழ்

Advertisements

2 thoughts on “தேவ கைங்கர்யம்! – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

 1. nandhitha July 22, 2016 at 4:43 AM Reply

  வணக்கம்
  ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ருக்மிணி மற்றும் சத்யபாமா என்ற இரு மனைவியர்கள் இருக்கையில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ நப்பின்னையின் வீட்டில் போய் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் என்கிறாள். நப்பின்னை என்பதற்கு ந+பின்னா (பிரிக்கப் பட முடியாதவள் என்று பொருள் கொண்டு நப்பின்னை பெரிய பிராட்டியே என்று கொண்டால், திருப்பாவையின் தனியனில் நீளா துங்க என்றல்லவோ இருக்கிறது. அதன்படி நீளா தேவிதான் நப்பின்னை என்றாகிறது. பெரியாழ்வார் கூட நப்பின்னை காணில் சிரிக்கும் என்று நீராட்டல் பாசுரத்தில் குறிப்பிடுகிறார், ஏன் ருக்மிணியைப் பற்றி யாரும் கூறவில்லை. ஸ்ரீமான் வேளுக்குடி ஸ்வாமியிடம் இருந்து இதற்கான பதிலைப் பெற்றுத் தர முடியுமா
  அன்புடன்
  நந்திதா

  • BaalHanuman July 26, 2016 at 5:59 AM Reply

   நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஸ்ரீ வைஷ்ணவம் என்று பெயர். ஸ்ரீ என்று கொண்டாடப்படும் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டே விஷ்ணுவின் திருவடிகளைப் பற்ற வேண்டியது மரபு. இராமனைப் பற்ற ஸ்ரீதேவியின் அவதாரமான சீதையையும், வராஹனைப் பற்ற பூமிதேவியையும், கண்ணனைப் பற்ற நீளா தேவியின் அவதாரமான நப்பின்னைப் பிராட்டியையும் முன்னிட வேண்டும்.

   –நான் கண்ட நல்லது (ஸ்ரீ உ. வே. வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s