திருப்புள்ளம்பூதங்குடி சயன ராமன்!


ஸ்ரீராமபிரானை பொதுவாக, நின்ற திருக்கோலத்திலேயே தரிசித்திருப்போம். அமர்ந்த கோலங்களிலும் ஒருசில ஆலயங்களில் கண்டு வழிபட்டிருப்போம். ஆனால், சயனக் கோலத்தில் அபூர்வமாக தரிசிக்கும் திருத்தலம் திருப்புள்ளம்பூதங்குடி. தவிர, ஸ்ரீராமர் வில், அம்பு இன்றி சங்கு, சக்ரதாரியாக புஜங்க சயனத்தில், கிழக்கு நோக்கி இங்கு அருள்பாலிக்கிறார்.

சீதா பிராட்டியை அரக்கன் ராவணன் கவர்ந்து செல்கையில் ஜடாயு அவனுடன் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ‘ராமா… ராமா’ என முனகியபடி கிடந்த ஜடாயுவை அவ்வழியே வந்த ராம, லட்சுமணர்கள் காண, ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற செய்தியைக் கூறிவிட்டு உயிர் துறந்தார் ஜடாயு. இதனால் வருந்திய ராமன் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை இத்தலத்தில் செய்து முடித்தார் என்பது தல வரலாறு.

ஜடாயு பறவையாகிய புள்ளிற்கு ஸ்ரீராமன் ஈமக் கிரியைகள் செய்து, மோட்சம் கொடுத்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்திருத்தலம் திருப்புள்ளம்பூதங்குடி ஆனது. திருமங்கையாழ்வார் இங்கு வந்தபோது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாகக் கருதி கவனிக்காமல் செல்ல, அப்போது ஒரு ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ஸ்ரீராமன் காட்சியளித்தார்.

இதைக்கண்ட திருமங்கையாழ்வார், ‘அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே’ என வருந்தி பத்து பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவுக்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன், ‘வல்வில் ராமன்’ என அழைக்கப்படுகிறார்.

புதன் கிரக பரிகாரத் தலமான இது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்தது. மேலும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வழிபடுகின்றனர்.

IMG_4588

பதவி உயர்வு வேண்டுபவர், பிராகாரத்தில் அருள்பாலிக்கும் (உத்தி)யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து, தோமாலை சேவை (பூவால் அலங்காரம்) செய்வதாக ப்ரார்த்தித்துக் கொண்டு வழிபட்டால், உத்யோக உயர்வு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செல்லும் வழி:

சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் 4 கி.மீ.

தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 12 வரை. மாலை 4.30 மணி முதல் 7.30 வரை.

தொடர்புக்கு: +91- 94435 25365

– எஸ்.நாராயணன், சென்னை (தீபம் ஆன்மீக இதழில்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s