பெருமாளிடம் சொன்னாயா?


பெங்களூர், மல்லேஸ்வரம் யதுகிரி யதிராஜ மடத்தில் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி, தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், நியமங்கள் குறித்து தனது உபந்யாசத்தில் கூறினார். ஊருக்குப் போவதென்றால், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில், மேல் வீட்டில் என எல்லோரிடமும் சொல்கிறீர்களே, உங்கள் இல்லத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?” என்று வினா எழுப்பினார். தொடர்ந்து ஆற்றிய பக்தி உரை.

ஸ்ரீரங்கத்தில் ஓர் அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாள் முன்பு பிரபந்தம் சேவிப்பதே அவரது கைங்கர்யம். நீண்ட நாட்களாக அவருக்கு திருமலையப்பனை சேவித்து வர ஆசை. ஆனால், அதைப் பெருமாளிடம் கேட்க தயக்கம். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெருமாளிடம் தனது ஆசையைத் தெரிவித்தார். பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார். ‘நான் இங்கிருக்கும்போது இவன் எதற்கு அங்கே போக ஆசைப்படுகிறான்?’ என்று நினைத்தவாறே, ‘சரி, உன் விருப்பப்படி போய் வா. அதற்கு முன், ‘அமலனாதிபிரான்’ சேவித்து விட்டுப் போ’என்றார்.

அரையரும், ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லி, அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தார். திருப்பாணாழ்வாரின் பிரபந்தம் இது.

‘அமலனாதிபிரான் அடியார்க்கு என்னைஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்…’ என்று சொல்ல ஆரம்பித்தார். முதல் பாசுரம், இரண்டாம் பாசுரம் முடிந்து, மூன்றாம் பாசுரம் சொல்ல ஆரம்பித்தார். முதல் முறை சொன்னார். ஆனால், இதை இரண்டு முறை சொல்வது மரபு. ஆக, இரண்டாவது முறையாக சொன்னார்.

‘மந்திபாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவினணையான்

அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப்

படைத்ததோர் எழில்

உந்திமேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.’

இரண்டு முறை சொல்லி முடித்ததும் பெருமாள், ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை

வானவர்கள்

சந்திசெய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது. இப்போது, அரையருக்குப் பெருமாள் சொல்ல வந்தது புரிந்தது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’என்று சொல்லிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். வேங்கடமலையில் இருப்பதும் இந்த அரங்கத்து அரவின் அணையான் தானே? இங்கே இருப்பவரை, மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம். அரையர்போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை.

அதனால், எங்கே போவதானாலும் நீங்களும் முதலில் உங்கள் இல்லத்துப் பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போக முடியாது!” என்றார் பூவராக ஸ்வாமி.

– ரஞ்சனி நாராயணன், பெங்களூரு  – (தீபம் ஆன்மீக இதழில்)

Advertisements

6 thoughts on “பெருமாளிடம் சொன்னாயா?

 1. ranjani135 June 11, 2016 at 2:44 AM Reply

  நான் எழுதியதை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
  ஒரு சின்ன வேண்டுகோள்:
  ‘மந்திபாய் வடவேங்கட மாமலை…’ என்று இருக்க வேண்டும். கொஞ்சம் திருத்தி விடுங்கள், ப்ளீஸ். ஆழ்வார்களின் பாசுரங்களை பிழைபட எழுதக் கூடாது.

  • BaalHanuman June 11, 2016 at 6:03 AM Reply

   நீங்கள் கூறியது போல் திருத்திவிட்டேன். தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மனமார்ந்த நன்றி!

 2. chollukireen June 11, 2016 at 1:42 PM Reply

  வெளியூர் போவதாக இருந்தால் ஸ்வாமியை நமஸ்காரம் செய்து விட்டுதான் புறப்படுவது வழக்கம். நல்ல வழக்கமும் அல்லவா? உணர்ச்சியுடன் எழுதப்பட்டிருப்பது புரிகிறது. நன்றி. அன்புடன்

 3. ranjani135 June 11, 2016 at 1:48 PM Reply

  நன்றி, பாலஹனுமான்! உங்களை எப்படித் தொடர்பு கொள்வது?

  • BaalHanuman June 12, 2016 at 5:57 AM Reply

   suppili at gmail.com / உங்கள் தொடர்பு எண்ணைக் கொடுத்தால் WhatsApp மூலம் தொடர்பு கொள்கிறேன். நான் இருப்பது California- வில்…

 4. ranjani135 June 13, 2016 at 6:04 AM Reply

  WhatsApp போட்டுக்கொள்ளவில்லை.
  மெயில் அனுப்புகிறேன். தகவலுக்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s