கணக்கிலடங்கா சிறுதானிய உணவுகள்!


‘காடு வெட்டி கல் பொறுக்கிக்

கம்பு, சோளம், தினை விதைத்து – காட்டைக் காக்க கண் விழித்தார்களாம்

கம்பு நல்லா விளைஞ்சு கதிர்விடும் நாளையிலே – கம்பைத்தின்ன

குட்டி காட்டுக்கிளி பறக்குதடி!’

என்ற சுவையுடன், கருத்தும் மிக்க நாட்டுப்பாடல்களில் நம்முடைய பாரம்பரியம் மிக்க சிறுதானியங்களான கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற புரதம் மிக்க தானியங்களின் பெருமையைக் காண்கிறோம்.

பல வருடங்களுக்கு முன்பே இந்த தானியங்களின் மகத்துவத்தை அறிந்த கோயம்புத்தூர் சங்கரலிங்கம் அவர்களின் ‘லக்ஷ்மி சங்கர் மெஸ்’ சிறு தானியங்களில் கணக்கிலடங்கா உணவு வகைகளைத் தயாரிக்கிறது. அடிப்படையிலேயே கிராமச் சூழலில் வளர்ந்து, அவரது தாயாரின் கைமணத்தில் நன்கு பக்குவமான ருசியுடன் உண்டு வளர்ந்ததால், இந்த‘ஆரோக்கிய மெஸ்’ஸை பல வருடங்களாக நடத்திவருகிறார் சங்கரலிங்கம். கோயம்புத்தூர் அன்பர்களின் பாரம்பரிய உணவான ‘கம்பங்கூழ்’ தயாரிப்பதைக் காண அவர்களது சமையல் கூடத்துக்குச் சென்றோம்.

ஒரு சிறிய விறகு அடுப்பில் ‘உமி நீக்கிய அரிசி’ என்று அவர்களது வழக்கில் இருக்கும் ‘நாட்டுக் கம்பை’ சுமார் 1 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டுரலில் சிறிது ‘கொரகொரப்பான’ பதத்துக்கு ஆட்டுகின்றனர். மறுநாள் கம்புப் பாலிலிருந்து தெளிவான புளித்த நீரை எடுத்து மண்பானையில் ஊற்றி, நன்கு கொதி வந்ததும், அரைத்த கம்புப் பாலை சிறிது சிறிதாக ஊற்றி மரக்கண்டியால் மிக மிக பொறுமையாகக் காய்ச்சுகிறார் வீராசாமி. அந்த மெஸ்ஸின் கம்பங்கூழ் ஸ்பெஷலிஸ்ட் அவர்தான்!

சிறிது நேரம் கொதி வந்ததும் அது நாம் சாப்பிடும் கூழ் பதத்துக்கு வருவதை ஒரு விரலால் தொட்டுப்பார்த்து, கூழ் தயாரானவுடன் அடுப்பிலிருந்த விறகை இழுத்துச் சூட்டைக் குறைத்து விடுகிறார். சூடான கம்பங்கூழுக்கு தோதாக, சூடான பாசிப் பருப்பு சாம்பார்.

இன்று காய்ச்சிய கூழை நன்கு ஆறவைத்து, உப்பு சேர்த்து மறுநாள், அதில் சுவையான பசு மோர் சேர்த்துச் சாப்பிட்டால் ருசியோ ருசிதான்! வரமிளகாய், பொட்டுக்கடலை, புளி, உப்பு, தேங்காய்ச் சேர்த்து செய்த காரச் சட்னியுடன் சாப்பிட்டால் அமிர்தம். வதக்கிய சிறு வெங்காயமும், பச்சை மிளகாயும், உப்பும் சேர்த்த சட்னி இன்னொரு சட்னி! ஆக மூன்று வகை சட்னியுடன், கம்பங்கூழின் சுவை அபாரமாக இருக்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ‘சிறுதானிய புரட்சி’ ஏற்பட்டுள்ளது. இயற்கை உணவுக்கு ஈடு இணை இல்லை. குழந்தைகளுக்கும் அந்த உணர்வு வரவேண்டும் என்ற விழிப்புணர்வு மலர்ந்திருக்கிறது. நாம் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால், அவற்றைத் தயாரிக்க நேரமோ, பொறுமையோ சற்றுக் குறைவாகவே உள்ளது. லக்ஷ்மி சங்கர் மெஸ் பல வருட உணவு மையமாதலால், ஒவ்வொரு சிற்றுண்டி வகைக்கும் ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார்கள். நம் எல்லோருடைய நலத்தில் அக்கறை கொண்டவரான சங்கரலிங்கம் அவர்களின் ‘லக்ஷ்மி சங்கர் மெஸ்’ஸுக்கு அடிக்கடி சென்று அவருடைய வகைவகையான சிறுதானிய உணவுகளை சுவைத்து, எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன்.

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

–நன்றி மங்கையர் மலர்

2 thoughts on “கணக்கிலடங்கா சிறுதானிய உணவுகள்!

  1. Sakunthala June 8, 2016 at 10:33 PM Reply

    Please let us know where is this Lakshmi Sankar mess is located in Coimbatore.
    Sakunthala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s