வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது! – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்…


ஒரு (டீ)ஸ்பூன் தோசை மாவில் மைக்ரான் திக்னஸில் இலியானா டைப் இருக்கிறதா இல்லையா தோசைகள் தந்து சென்னை ஹோட்டல்வாலாக்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்ததே! (இலியானாவின் புகழ்பெற்ற எலுமிச்சை மேட்டரில் நாம் இப்போது கைவைக்க வேண்டாம். அது பிறகு.)

காய்ந்து காலாவதியான கசமால தோசைகளுக்கு விதம்விதமான சட்னிகள் தருவதாக பாவ்லா செய்து, கலர் கலர் கனுப்பிடி கண்றாவிகள் காக்கா எச்சம் சைஸில் ப்ளேட் ஓரத்தில் ஈஷும் அவலம் பற்றி யாம் இங்கே ஏற்கனவே அங்கலாய்த்திருந்தோம்.

மிளகாய்ப்பொடி எக்ஸ்ட்ராவாக வேண்டுமா?

“கோல்ட் ரோலெக்ஸ் வாட்சைக் கழற்றுங்கள்”

ஓஹோ, அதற்கு நல்லெண்ணெய் வேறு வேண்டுமா?

“ப்ளீஸ் ரிமூவ் யுவர் வைர மோதிரம்”

தெற்கு இப்படித்தான் தேய்ந்து கிடக்கிறது.

சற்றே வடக்கே நகர்ந்து பெங்களூர் பக்கம் இடம் பெயர்ந்தால், கிண்ணென்ற தோசைகள் பொன்முறுவலுடன் நம்மைக் கண்சிமிட்டி வரவேற்கின்றன. அட் லீஸ்ட் ஒவ்வொரு தோசைக்கும் இரண்டு முழுக்கரண்டி மாவு, நான் கேரண்டி.

அமிர்த தோசையை அணைத்து மென்றபடி அப்படியே அரையடி ஆழ ப்ளேட்களில் ஆரோக்கியமான குஷ்பூ இட்லிகளை சாம்பாரில் திணறித் திக்குமுக்காடவைக்கும் செப்பிடுவித்தை கண்டு மகிழுங்கள்.

நமீதா சைஸ் வடைகள் சாம்பாரில் மூழ்கினாலும் எப்படி மொறுமொறுத்தனத்தை இழக்காமல் இருக்கின்றன என்கிற உடுப்பி மேஜிக் புரியாமல் நீங்களும் புளகாங்கிதம் அடையுங்கள்.

பிஸிபேளாஹுளியின் பிறந்தகம் அல்லவா அம்மா பிறந்த இடம்? அது பிரசித்தம் ஆனதில் வியப்பென்ன? அந்த அதிவாசனா பதார்த்தத்தைச் சாப்பிடுகையில் அவர்கள் காவிரியில் தண்ணீர் திறக்காத கொடுமையைக் கூட அல்லவா மனது மன்னித்து விடுகிறது?

“கால் தி பப்ளிக் ப்ராசிக்யூட்டர் அண்ட் வித்ட்ரா ஆல் கேஸஸ் அகைன்ஸ்ட் கர்நாடகா யா!”

செம்மோழி கிம்மொழி என்றெல்லாம் ஆய்ந்தோய்ந்து காசை விரயமாக்காமல் பெங்களூர் சமையல் மேஜிக்ஸ் பற்றிய அகழ்வாராய்ச்சிகள் தமிழக அரசு செலவில் உடனேயே தொடங்கப்படவேண்டும். அத்தனை தமிழக ஹோட்டல்களும் கர்நாடகா மேனெஜ்மெண்டில், உடுப்பி கைவரிசையில் நடத்தப்படவேண்டும். அப்படி நாம் சொல்லிவிட்டால், காவிரி என்ன, கங்கையைக்கூட அவர்கள் கொண்டு வந்து நாம் காலடியில் சமர்ப்பணம் செய்வார்கள். தேசிய ஒற்றுமை ஓங்கும்.

கெட்டி சட்னி என்றொரு வஸ்து தருகிறார்கள். அது எவ்வளவு ஸ்ட்ராங் என்றால் இன்றைய BCCI சீனு மாமாவின் இந்தியா சிமெண்ட்ஸை விட இன்னும் அதிகமாக என்பேன்.

செட் தோசை என்றால் கூட ஒன்றே ஒன்று கொடுக்கும் சென்னை மொள்ளமாரித்தனம் எங்கே, செட் தோசை என்றால் மூன்று தரும் கர்நாடக காருண்யம் எங்கே? அதற்கு குருமா என்ன, சாம்பாரென்ன, சம்டைம்ஸ் வேறேதாவது ‘கடுபு’ போன்ற சர்ப்ரைஸ் ஐட்டங்களென்ன ..!

எல்லாமே சென்னை விலைகளில் நாலில் ஒரு பங்கில் என்பது ஏற்கனவே எஸ்டாப்ளிஷ்ட் ஃபேக்ட்.

வடக்கு வாழ்வதில் வியப்பென்ன, கழுதை தெற்கு தேய்ந்து கட்டெறும்பாகி, காணாமலே போய், கலாசார பாலைவனமாகி விட்டதில் வியப்பென்ன!

[RamBW2-1.jpg]

Advertisements

6 thoughts on “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது! – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்…

 1. guruneyveli June 2, 2016 at 3:55 AM Reply

  Hilarious…keep sending more of this kind also.thanks. neyveli anbudan.

 2. Umesh Srinivasan June 2, 2016 at 4:24 AM Reply

  முழுசா ஒரு மசால் தோசைய அப்படியே உள்ளே தள்ளுன ஒரு ஃபீல், கலக்கிட்டீங்க ப்ரோ.

 3. Ramananda Acharya June 2, 2016 at 5:08 AM Reply

  Nice post

 4. D. Chandramouli June 2, 2016 at 9:22 AM Reply

  Haha! Better to eat in Amma Unavagam. Btw, do they provide Dosais? At least for curiosity sake, we should eat once in an Amma Unavagam. Of course, nothing to beat dosais made by mom or wife at home.

 5. Ramachandran Narayanasamy June 2, 2016 at 12:24 PM Reply

  மிக மிகச் சாியான ஒரு பதிவு. மங்களுாில் காபி 15 ருபாய் தான். அதுவும் டம்ளா் நிறைய. மிகப் பொிய உணவகங்களில் கூட இட்லி மற்றும் தோசை விலை மிக்க்குறைவு. தமிழ் நாட்டு உணவக உாிமையாளா்கள் ஒரு வித்த்தில் பணம் பாா்ப்பதில் சமா்த்தா்கள்.

 6. Vidya soundar June 8, 2016 at 6:26 AM Reply

  You should try Mysore masala dosai in Bangalore chalukia Restaurant next to bharatiya vidya Bhavan… Matchless taste.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s