திகைக்க வைத்த திடீர் விருந்து – தங்கம் ராமசாமி


என் மாமா மகனுக்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்த நேரம் அது. ஒரு நாள் மாலை திடீரென்று தன் மனைவியுடன் என் வீட்டுக்கு வந்திருந்தான். சாம்பார் சாதம், தயிர்சாதம் ஏதாவது செய்து சமாளிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் தயிர் சாதம் செய்ய தயிருக்கு எங்கே போவது? அப்போது என்னிடம் இரண்டு கரண்டி தயிர் மட்டுமே இருந்தது. அவசரத்துக்கு உறை குத்தினாலும் உறையாதே… என்ன செய்வது என்று யோசித்தபோது, சட்டென்று ஒரு ஐடியா… தயிர் சாதத்துக்குத் தேவையான அரிசியைக் களைந்து வழக்கமாய் வைக்கும் தண்ணீருடன் பாலையும் கலந்து உப்புப் போட்டு, ஒரு கரண்டி தயிரையும் விட்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே போட்டு இரண்டு விசில் அதிகமாய் விட்டு அணைத்தேன். பிறகு எடுத்தால் நன்றாகக் குழைவாய் வெந்திருந்தது. ஒரு வெள்ளரிக்காய், கேரட், கொத்துமல்லி பொடியாய் நறுக்கிப் போட்டு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டு வைத்துவிட்டேன். மணம் ஊரையே தூக்கியது.

அடுத்து பாயசத்துக்கு என்ன செய்வது? ஒரு கரண்டி கடலை மாவை நெய் விட்டு வறுத்து, தண்ணீர் விட்டு வேகவைத்து பாலை சுண்டக் காய்ச்சி ஊற்றி சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப் பருப்பு வறுத்து, சிறிது குங்குமப்பூ போட்டு வைத்தேன். கடலை மாவு கீர் ரெடி.

என் கணவர் ‘வடை இல்லாமல் விருந்தா?’ என்று என்னை உசுப்பேற்றிவிட, மீண்டும் ஒரு யோசனை. இட்லி மாவு இருந்தது. அதில் சிறிது உப்பு, கடலைமாவு, கோதுமை மாவு, அரிசி மாவு தலா ஒரு கரண்டி போட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து வடையும் செய்து விட்டேன். விருந்து தடபுடலானது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. ‘பிரமாதமான விருந்து அக்கா’ எனப் புகழ்ந்து தள்ளினார்கள் மணமக்கள்.

-தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி. (மங்கையர் மலர்)

Advertisements

3 thoughts on “திகைக்க வைத்த திடீர் விருந்து – தங்கம் ராமசாமி

 1. Balasundaram Balasanmuganathan May 15, 2016 at 3:26 PM Reply

  Kaspersky says,’Invalid name of certificate’ and not allow to read.

  2016-05-15 20:02 GMT+05:30 Balhanumans Blog :

  > BaalHanuman posted: ” என் மாமா மகனுக்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்த
  > நேரம் அது. ஒரு நாள் மாலை திடீரென்று தன் மனைவியுடன் என் வீட்டுக்கு
  > வந்திருந்தான். சாம்பார் சாதம், தயிர்சாதம் ஏதாவது செய்து சமாளிக்கலாம் என்று
  > நினைத்தேன். ஆனால் தயிர் சாதம் செய்ய தயிருக்கு எங்கே போவது? அப்ப”
  >

 2. Balasundaram Balasanmuganathan May 15, 2016 at 3:28 PM Reply

  Kaspersky says,’Invalid name of certificate’ and not allow to read.

  2016-05-15 20:56 GMT+05:30 Balasundaram Balasanmuganathan :

  > Kaspersky says,’Invalid name of certificate’ and not allow to read.
  >
  > 2016-05-15 20:02 GMT+05:30 Balhanumans Blog :
  >
  >> BaalHanuman posted: ” என் மாமா மகனுக்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்த
  >> நேரம் அது. ஒரு நாள் மாலை திடீரென்று தன் மனைவியுடன் என் வீட்டுக்கு
  >> வந்திருந்தான். சாம்பார் சாதம், தயிர்சாதம் ஏதாவது செய்து சமாளிக்கலாம் என்று
  >> நினைத்தேன். ஆனால் தயிர் சாதம் செய்ய தயிருக்கு எங்கே போவது? அப்ப”
  >>

 3. K.Balasubrahmanyan May 16, 2016 at 3:52 AM Reply

  this century’s Vaasuki( thiruvalluvar ‘s wife!).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s