9-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

.

காந்தி மகானின் கதை சொல்லும்போது மட்டுமில்லாமல், எந்தக் கதை சொன்னாலும், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசியம் பற்றியும், நம் கலாசாரம், பண்பாடு பற்றியும் கட்டாயமாகச் சொல்லவேண்டும் என்பது எனக்கு நானே போட்டுக் கொண்டிருக்கும் விதி. அப்போது நான் குறிப்பிடும் விஷயங்களில் ஒன்று, 1947 ஆகஸ்ட் மாசம் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தத் தருணத்தில் நம்முடைய தேசத்தலைவர்கள் என்னென்ன கருத்துக்களைச் சொன்னார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியுமா? என்று கேட்பேன். அடுத்து, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், சிந்திக்க வைக்கும் ஒரு கருத்தைச் சொன்னார். அது என்ன தெரியுமா? நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு! நாளை முதல் நாம் செயும் தவறுகளுக்கு வெள்ளைக்காரன் மேல பழிபோட முடியாது” என்பேன். இதனைத் தொடர்ந்து மற்ற சில தலைவர்கள் சொன்ன கருத்துக்களைச் சொல்லிவிட்டு, அந்த மகத்தான தருணத்துல, நம்ம காஞ்சி மஹா பெரியவாள் என்ன கருத்து சொன்னார் என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்பேன். பெரியவாள் இதுபற்றிக் கூட கருத்து சொல்லி இருக்கிறாரா என்று ஆச்சர்யமாக மக்கள் பார்ப்பார்கள்; நான் அடுத்து என்ன சொல்லப்போகிறேன் என்று கேட்க ஆர்வமாக இருப்பார்கள். நமக்கு வெள்ளைக்காரன்கிட்டே இருந்து சுதந்திரம் கிடைச்சுடுத்து; ஆனா ஐம்புலன்கள்ல இருந்து நமக்கு என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ, அன் றைக்குத்தான் நிஜமான விடுதலை! அப்படீன்னு சொல்லி இருக்கார்” அதாவது, நாம தப்பான விஷயங்களைப் பார்க்கக் கூடாது; தப்பான வார்த்தைகளைப் பேசக்கூடாது; நாவடக்கம் வேண் டும்; அபாண்டமான வார்த்தைகளைக் கேட்கக் கூடாது; மூக்கைக் கூட ரொம்ப ஜாக்கிரதையாத்தான் பயன்படுத்தணும்; காரணம் இந்த மூக்கு இருக்கே, அது பொல்லாதது. எங்கே இருந்தாலும், வாசனையை நுகர்ந்து, ஒரு பிடி பிடிக்கச் சொல்லும்; அதனால, உடம்பு ஆரோக்கியம் பாதிக்கும். இப்படியாக பெரியவாளுடைய சுதந்திர தினச் செய்திக்கு நான் விளக்கம் சொல்லுவேன்.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் நம்மால அதைக் கடைப்பிடிக்கிறது சாத்தியமில்லாமல் இருக்கலாம். காரணம் நாமெல்லாம் சாமானிய மனிதர்கள்தானே! ஆனாலும் கூட, நம்மால் முடிந்த அளவுக்கு அதைக் கடைப்பிடிக்க முயற்சித்தாலே…ஆமாம்… முயற்சித்தாலே போதும். வாழ்க்கை ரொம்ப சௌக்கியமாக இருக்கும். கவிஞர் கண்ணதாசன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவருக்கு என் மீது தனி அன்பு உண்டு. அவருடன் கூடவே நான் சுமார் இரண்டரை வருட காலம் இருந்திருக்கிறேன். செட்டிநாட்டுப் பாரம்பரியத்தில் வந்தவரான அவர், சிலகாலம் நாத்திகவாதியாக இருந்து, பின்னர் ஆன்மிகப்பாதைக்கு வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய நண்பர் ஒருவர், ஒரு நடை காஞ்சிபுரத்துக்குச் சென்று பரமாச்சாரியாளைத் தரிசிக்கலாம்! வாங்க!” என்று அழைத்த போது, அவர், எனக்கும் அந்த ஆசை உண்டு என்றாலும் ஒரு சின்ன சந்தேகம். என்னையெல்லாம் அந்த மஹான் பார்ப்பாரா?” என்று தயக்கத்தோடு கேட்க, கட்டாயம் தரிசனம் கொடுப்பார்! நீங்கள் வாருங்கள்!” என்று சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு போனார் அந்த நண்பர். மடத்தில், மஹா பெரியவாளுக்கு முன்னால் கவிஞர் கண்ணதாசன் நிற்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவர் உடம்பு இருந்த நிலைமைக்கு சில நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. கை விரல்கள் நிலைகொள்ளாமல் லேசாக நடுங்கும். ஆனால், அப்படிப்பட்ட மனிதர், அன்றைக்கு அரை மணி நேரம் மஹா பெரியவாள் முன்னால் அவரைத் தரிசித்தபடி நின்றதும், அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியதும் அவரது உடல்நிலை பற்றி அறிந்தவர்களுக்கு, பெரும் ஆச்சர்யமாக இருந்தது. அன்றைக்கு, தன் மனத்தில் இருந்த ஆன்மிக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பரமாச்சாரியாளிடமிருந்தே விளக்கம் பெற்று, மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் கவிஞர்.

மடத்தின் பக்தரான ஒருவர், மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அவரது முகமே, அவர் படும் வேதனையை எடுத்துக் காட்டியது. கிணற்றடியில் பெரியவாள் முன் வந்து நின்றார். அவரது வேதனை, முனகலாக வெளிப்பட்டது. பெரியவாள் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் மஹா பெரியவாள் தன் குடிலில் இருந்து புறப்பட்டுச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தார். பக்தரது வேதனை அதிகரிக்க, முடியலையே! தாங்க முடியலையே! வலி உயிர் போகுதே!” என்று உரக்க தன் வேதனையை வெளிப்படுத்தினார். ஆனாலும், மஹா பெரியவாளிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்! இன்னும் சிறிது நேரம் வலியில் துடித்தபடி இருந்தார் அவர். வலி தாங்க முடியலையே! எனக்கு வேற எங்கே போறதுன்னு தெரியலை! பெரியவாகிட்ட வந்திட்டேன்!” என்று கண்ணீர் விட்டபடி சொன்னார்.

அவரைத் திரும்பிப் பார்த்த மஹா பெரியவாள், நோக்கு என்னடா பண்றது?” என்று கேட்க, வயித்து வலி தாங்க முடியலை!” என்றார். சில வினாடிகள் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, எதுக்கு இன்னொரு பிறவி எடுத்து, அந்த கர்மாவை அனுபவிச்சுக் கஷ்டப்படணும்? இப்பவே பேசாம வலியை அனுபவிச்சுடுடா!” என்று சொல்லி, பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார். அன்று மாலை, எங்களுடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின்போது, எதிரே உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தபோது, மனத்தில் பொறி தட்டியது. அட! காலையில் வயிற்று வலியால் துடித்த பக்தரல்லவா இவர்!”

சிவ பெருமான் மிகச் சிறந்த ரசிகர், அதுவும் இசைரசிகர். இதுவும் மஹா பெரியவாள் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குச் சொன்னதுதான். ஆஹம சில்ப சதஸ் நடந்த போது, இந்தத் தகவலை சொல்லி, அதனோடு தொடர்புடைய ஒரு கதையையும் சொன்னார். அஸ்வதரன், கம்பளதரன் என்று இரண்டு இசைக் கலைஞர்கள் இருந்தார்களாம். அவர்களுடைய இசை ஞானம் அபாரமானது. அவர்கள் பாட்டை, கந்தர்வர்கள் கூட மிகவும் லயித்துக் கேட்பார்களாம். அவர்கள் பாடுகிற பாட்டுக்களில், இலக்கணமும் பொருந்தி இருக்கும் என்பது இன்னொரு சிறப்பு. அவர்கள் நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருப்பார்களாம். ஆனால், அவர்கள் பாடுவதைக் கேட்க ரசிகர்கள் யாருமே இருக்கமாட்டார்களாம். என்னடா! நமக்கு நல்ல இசை ஞானம் இருக்கிறது! அந்த ஞானத்தைப் பயன்படுத்தி, இந்த உலகத்தினரை மகிழ்விக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நாமும் இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நம் இசையை மக்கள் யாரும் கேட்க வில்லையே!” என்று இருவருக்கும் அளவில்லாத வருத்தம்.

ரசிகர்கள் இல்லாத சூழ்நிலையில், இனி நாம் பாடுவதை நிறுத்தி விடுவதா? இல்லை, ரசிகர்கள் கேட்கிறார்களா இல்லையா என்பது பற்றிக் கவலைப் படாமல், இசையைக் வழங்குவது நமது கடமை என்று தொடர்ந்து பாடிக்கொண்டு இருப்பதா? என்று லேசான குழப்பமே ஏற்பட்டுவிட்டது.

அஸ்வதரனும், கம்பளதரனும் சிவபெருமானிடமே சென்று தங்களுடைய மனக்குறையைச் சொல்வது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டார்கள். நேரே கைலாயத்துக்குச் சென்று சிவனை வணங்கி, தங்களுடைய மனக்குறையைச் சொன்னார்கள். சிவன் அதைக் கேட்டு புன்முறுவல் பூத்துவிட்டு, அடுத்த கணம், அவ்விருவரையும் தோடுகளாக்கித் தன் காதுகளில் அணிந்துகொண்டுவிட்டார். அஸ்வதரனுக்கும், கம்பளதரனுக்கும் நாம் பாடுவதைக் கேட்க யாருமில்லையே என்ற குறையை சிவபெருமானிடம் சொன்னால், இவர் எதற்காக நம்மை தோடுகளாக்கி, தன் காதுகளில் அணிந்துகொண்டுவிட்டார் என்று ஒரே குழப்பம்.

சிவனிடமே தங்கள் குழப்பத்தைச் சொன்னார்கள். அப்போது சிவன் சொன்னாராம், உங்கள் உயர்ந்த இசையை ரசிக்க யாருமில்லை என்பதுதானே உங்களுடைய குறை? இப்போது நீங்கள் இரவு பகலாகப் பாடிக்கொண்டே இருக்கலாம்; நான் உங்கள் இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பேன்” இந்தக்கதையைச் சொல்லிவிட்டு, சிவன் எத்தனை பெரிய இசை ரசிகர்னு இப்போ தெரியறதாடா?” என்று கேட்டார்.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

6 thoughts on “9-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

 1. Balasundaram Balasanmuganathan May 14, 2016 at 7:26 AM Reply

  Kaspersky not allows to open

  2016-05-13 20:10 GMT+05:30 Balhanumans Blog :

  > BaalHanuman posted: ” காந்தி மகானின் கதை சொல்லும்போது மட்டுமில்லாமல்,
  > எந்தக் கதை சொன்னாலும், எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம்
  > தேசியம் பற்றியும், நம் கலாசாரம், பண்பாடு பற்றியும் கட்டாயமாகச்
  > சொல்லவேண்டும் என்பது எனக்கு நானே போட்டுக் கொண்டிருக்கும் விதி. அப்போது”
  >

 2. V.Radhakrishnan May 23, 2016 at 5:54 AM Reply

  PLease tell the dates on which this series “ARULE,ANBHE AMUDHE” 1,2,3 to10 appeared in Bal Hanuman Blog pages ?I want to read them one by one. It is very interesting. Thanks , Sri Bal Hanuman Sir, for publishing it in your blog. Regards, Radha.. My Email ID –radha1931@gmail.com

 3. V.Radhakrishnan May 23, 2016 at 9:01 PM Reply

  Thanks a lot Sir for your prompt reply.I enjoy all the postings in your blog on spirituality.I am amazed to note your energy and enthusiasm in spreading spirituality.please continue to do the same and I am sure Sri Kanchi Maha Periva will bless you for all your efforts. Regards, v.radhakrishnan

  • BaalHanuman May 25, 2016 at 3:45 AM Reply

   Thanks for your kind words. Really appreciate.

 4. kahanam May 27, 2016 at 2:41 AM Reply

  Maha Periyava ThiruvadigaLe CharaNam! Great series! Sri Subbu Arumugam takes us along a Spiritual Pilgrimage and makes us see Maha Periyava at close quarters which we might never have done otherwise. Thanks for sharing! Hara Hara Shanakra, Jaya Jaya Shankara!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s