துர்முகி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம்


இங்கு விவரிக்கப்படும் ஜோதிட பலன்கள் அனைத்தும் மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்களில் நமது மகரிஷிகள் அருளியுள்ள கணித முறைகளின் அடிப்படையில் கணித்துக் கூறப்பட்டுள்ளவை ஆகும். அனைத்து ராசியினருக்கும் பரிகாரங்கள் கூறியிருக்கிறோம். எளியவைகளாகத் தோன்றினாலும், இங்கு கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தும் அளவற்ற சக்தி கொண்டவை. குருபகவானின் ராசி மாறுதலையும் கணக்கில் கொண்டு பலன்கள் கூறப்பட்டுள்ளன.

குடும்பம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் சனி மற்றும் ராகு ஆகிய இரு முக்கிய கிரகங்களும் அனுகூலமாக உள்ளனர். குரு பகவான்  வரும் ஜூலை மாதம் முடியும் வரை அனுகூலமில்லாத நிலையில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து ஓரளவு நன்மைகள் அளிக்கும்படி மாறவிருக்கிறார். பணப் பற்றாக்குறையினால் பொருளாதார சிக்கல்கள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளினால் பணம் விரயமாகும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். சில தருணங்களில் தவறான வரங்களை நிர்ணயித்துவிடும் சாத்தியக்கூறும் உள்ளதால், வரும் ஒரு வருட காலத்திற்கு திருமண முயற்சிகளில் சற்று ஆழ்ந்து சிந்தித்து, ஆராய்ந்து அதன் பின்னரே வரனை நிர்ணயிப்பது மிகவும் அவசியம். நீதிமன்ற வழக்குகளில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் சிரமங்கள் ஏற்படும்.

உத்தியோகம்

உத்தியோகத்திற்கு காரகத்துவம் பெற்ற சனிபகவான் அனுகூலமாக இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய வேலைக்கு முயற்சித்து வரும் மிதுன ராசி அன்பர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மிதுன ராசியினருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜெனனகால கிரக நிலைகளும், தற்போது நடைபெற்றும் தசா, புக்திகளும் அனுகூலமாக இருப்பின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும் கடின உழைப்பும், அலைச்சலும் இருக்கும்.

மாணவமணிகள்

தேவையற்ற சஞ்சலங்களினாலும், தீய மாணவர்களின் சேர்க்கையினாலும் படிப்பில் நாட்டம் குறையக்கூடும். ஒருசில மாணவ-மாணவியர் அரசியலில் ஈடுபடுவதற்கும், அதனால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக நேரிடும். முக்கியமாக விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவமணிகள் சக மாணவ-மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம். வெளிநாடுகளில் கல்வி பயின்று வரும் மாணவமணிகளுக்கு குறித்த காலகட்டத்தில் தங்கள் ப்ராஜெக்ட்டுகளை முடிப்பதில் தடங்கலும், தாமதமும், உற்சாகக் குறைவும் ஏற்படக்கூடும். பரிகாரம் அவசியம்.

பெண்மணிகள்

குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு நிர்வாகம் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களின் தேவையற்ற தலையீடுகளினால், மனநிம்மதி பாதிக்கப்படக்கூடும். பொறுமை, நிதானம் உதவும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி அளிக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள பெண்களுக்கு வரன் அமைவதில் சற்று தாமதம் ஏற்படும்.

பொருளாதாரம்

வருமானம் ஆண்டு முழுவதும் நல்லபடியே இருக்கும். இருப்பினும் எதிர்பாராத செலவுகளினால் பணம் விரயமாகும். அதனால் சேமிப்பிற்குச் சாத்தியக்கூறு கிடையாது. பழைய கடன்களினால், அவ்வப்போது சிரமங்கள் ஏற்படக்கூடும். கூடிய வரையில் திட்டமிட்டுச் செலவு செய்வது அவசியம்.

ஆரோக்கியம்

சிறுசிறு உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படக்கூடும். மற்றபடி இந்த ஆண்டு முழுவதும் மிதுன ராசி அன்பர்களுக்கு கவலைப்படும்படியான ஆரோக்கியக் குறைவு எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. திருதீய குருவினால் ஜூலை மாதம் வரையில் அதிக அலைச்சலும், சிறு விஷயத்திற்குக் கூட கடின உழைப்பும் இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து அந்நிலை மாறும். ஆதலால் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிவுரை

1. கைப்பணத்தை எண்ணி எண்ணிச் செலவு செய்யவும்.

2. கூடிய வரையில் வீண் அலைச்சலையும், வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

3. மாணவ-மாணவியர் பிற மாணவர்கள் எவருடனும் நெருங்கிப் பழக வேண்டாம். அரசியல் தொடர்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கல்வி முன்னேற்றம் தடை படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை இந்த ஆண்டின் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆதலால் படிப்பைத் தவிர வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் இருக்கும்படி மாணவ-மாணவியரை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பரிகாரம்

1. வியாழக்கிழமைகளில் பகல் உணவு மட்டும் உட்கொண்டு உபவாசம் இருத்தல். இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

2. ஆலங்குடி திருத்தல தரிசனம் சிறந்த பரிகாரமாகும்.

3. நவபிருந்தாவனம் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள ஒன்பது ராஜகுருக்களையும் தரிசித்துவிட்டு வருவது ஈடிணையற்ற பரிகாரமாகும்.

4. மாணவ-மாணவியர் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரத்தைச் சொல்லி அவரைப் பூஜித்து வரவும். சென்னையை அடுத்துள்ள செட்டிப்புண்ணியம், கடலூரை அடுத்துள்ள திருவஹீந்திரபுரம், கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தரிசனம் கைமேல் பலனளிக்கும். இவற்றில் எவை உங்களால் முடிகிறதோ அவற்றைச் செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s