ராமன் எத்தனை ராமனடி!


Sri Rama Parivar

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது.

இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர்.

இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் பகவான். ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயே தான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.


ஏன் நவமியில் அவதரித்தார் ?

ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமலிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது. பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், “இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும் அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள்!” என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும், கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.

rama_sethu

ராம நாம மகிமை!

ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுர்யம் என அனைத்துமே ராம நாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல் தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்தபோது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராம நாமம்தான். அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்த போதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும் பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!

ஏகாந்த ராமர்!

தாராபுரம் அனுமந்தராயர் கோயிலில் கருவறையில் ராமர் சீதையுடன் அருள்கிறார். லட்சுமணன் இங்கு கிடையாது. அண்ணலும் தேவியும் மட்டும் தனித்திருக்கும் இந்த அமைப்பினை ஏகாந்தக் கோலம் என்பர்.

தாஸ நவமி!

ராமபிரானின் பரம பக்தர் ராமதாஸர். பக்தியோடு அரசியல், இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவர். மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இவரது புகழ் வட நாடு முழுவதும் பரவி நிற்கிறது. இவரது மெய்யடியார்கள் ‘தாஸப்ரேமி மண்டல்’ என்ற பெயருடன் நாடு முழுவதும் ராம பக்தியையும், ராம நாம மகிமையையும் தொடர்ந்து பரவச் செய்கின்றனர். மகாராஷ்டிர மொழி பேசும் மக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றனரோ அங்கெல்லாம் இவரது ஜன்ம தினம், ஸ்ரீராம நவமி போலவே, ‘தாஸநவமி’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சாந்த ராமர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்குணத்தில் ராமர் அமர்ந்த கோலத்தில் வில், அம்பு இன்றிக் காட்சியளிக்கிறார். சாந்தராமனாக விளங்கும் இவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

பீமன் பூஜித்த ராமர்!

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ளது தீர்த்தஹள்ளி ராமர் மடம். மத்வாச்சாரியார் சந்நியாசம் பெற்ற இடம் இது. பீமன் வனவாசத்தின் போது பூஜை செய்த மூலராமர், சீதாதேவி, லட்சுமணரின் விக்ரகங்கள் வழிவழியாக இம்மடத்தில் ஆராதிக்கப்பட்டு வருகின்றன.

சங்கு, சக்கர ராமர்!

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ராமர், வழக்கத்துக்கு மாறாக சங்கு, சக்கரம் இவற்றுடன் கையில் கதையும் பிடித்தபடி அருள் பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் காட்சி தரும் இந்த ராமரின் அமைப்பு மிகவும் அபூர்வமானது என்கிறார்கள்.

–நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s