துர்முகி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – மேஷம்


இங்கு விவரிக்கப்படும் ஜோதிட பலன்கள் அனைத்தும் மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்களில் நமது மகரிஷிகள் அருளியுள்ள கணித முறைகளின் அடிப்படையில் கணித்துக் கூறப்பட்டுள்ளவை ஆகும். அனைத்து ராசியினருக்கும் பரிகாரங்கள் கூறியிருக்கிறோம். எளியவைகளாகத் தோன்றினாலும், இங்கு கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தும் அளவற்ற சக்தி கொண்டவை. குருபகவானின் ராசி மாறுதலையும் கணக்கில் கொண்டு பலன்கள் கூறப்பட்டுள்ளன.


குடும்பம்

குடும்பச் சூழ்நிலை திருப்தி அளிக்கும். வருமானம் போதுமான அளவிற்கு இருப்பதால் குடும்ப நிர்வாகத்தில் சிரமம் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு ஜெனன கால கிரகநிலைகளின்படி புத்திர பாக்கியம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. தீர்த்த, தல யாத்திரை, மகான்களின் தரிசனம், கங்கா ஸ்நானம் ஆகிய புண்ணிய பலன்களும் கிட்டும். சனிபகவானின் நிலையினால் அவ்வப்போது உடல்நலன் பாதித்தாலும் தக்க தருணத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல பலன் கிட்டும். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிப்பதில் எவ்வித சிரமமும் இராது. முயற்சிகள் பலனளிக்கும். குடும்ப நலன் சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த ஆண்டு இது. 2016 ஜூலை மாதம் வரை மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த காலகட்டமாகும்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து குடும்பத்தில் எதிர்பாராத விதமாக பிரச்சினைகள் எழக்கூடும். வருமானத்திற்கு மீறிய செலவுகளினால், படிப்படியாகப் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் கேதுவின் நிலையினால் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றமும், அதனால் பண விரயமும் ஏற்படக்கூடும். இப்போதிலிருந்தே திட்டமிட்டுச் செலவு செய்தும், சிக்கனமாகவும் இருப்பின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து, குரு பகவானின் ராசி மாறுதலினால் ஏற்படவிருக்கும் செலவுகளைச் சமாளித்து விடலாம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவலைகள் அதிகரிக்கும். கீழே கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பரிகாரங்கள் தக்க தருணத்தில் கைகொடுத்து உதவும்.

உத்தியோகம்

உத்தியோகத்திற்கு அதிகாரம் பெற்றுள்ள சனி பகவான் ஆண்டு முழுவதும் அனுகூலமற்று, ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிப்பதால் வேலை பார்க்கும் இடத்தில், சற்று கவனமாக இருப்பது அவசியமாகும். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது சற்று எச்சரிக்கையாக இருத்தல் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமலிருக்க உதவும். ஆகஸ்ட் மாதம் குரு பகவானும் அனுகூலமில்லாத நிலைக்கு மாறவிருப்பதால் அப்போதிலிருந்து துர்முக வருடம் முடியும் வரை அலுவலகத்தில் ‘தானுண்டு;  தன் வேலையுண்டு’  என்றிருப்பது நல்லது.

மாணவமணிகள்

உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது. மற்றபடி படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்விக்கு உங்கள் விருப்பம் போல் இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வேண்டுமென்ற ஆர்வமிருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெறுவதற்கு கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பெண்மணிகள்

ஜூலை மாதம் முடியும் வரையில் கிரக நிலைகள் மிகவும் அனுகூலமாக இருப்பதால், குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினைகள் எதுவும் இராது. வருமானம் நல்லபடி இருப்பதால் குடும்ப நிர்வாகத்தைக் கவனிப்பதில் சிரமம் இருக்காது. ஜூலை மாதத்திலிருந்து குரு பகவான் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு மாறவிருப்பதால், மனதில் குழப்பங்களும், சிறுசிறு உடல் உபாதைகளும், குடும்பத்தின் ஒற்றுமைக்குறைவும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கீழே கூறியுள்ள பரிகாரங்கள் இதற்கு உதவும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அலுவலகத்தில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பொருளாதாரம்

ஜூலை மாதம் முடியும் வரையில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பண விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ஆரோக்கியம்

இந்த ஒரு விஷயத்தில் ஆண்டு முழுவதும் மேஷ ராசி அன்பர்கள் சற்று கவனத்துடன் இருக்கவேண்டியதன் அவசியத்தைக் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன, கூடிய வரையில் வீண் அலைச்சலையும், நினைத்த நேரங்களில் உண்பதையும் தவிர்ப்பது அவசியம். கட்டுப்பாடான பழக்க வழக்கங்கள் உடல் நலனைக் காக்கும்.

அறிவுரை

இந்த ஆண்டு முழுவதும் மேஷ ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. முக்கியமாக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஆகஸ்ட் மாதம் குரு பகவான் அனுகூலமற்ற கன்னி ராசிக்கு மாறவிருப்பதால் இப்போதிலிருந்தே செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், சிக்கனமாக இருப்பதும் நல்லது.

பரிகாரம்

1. கீழ்க்கண்ட சனிபகவானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றை தரிசித்துவிட்டு வரவும்.

(அ) திருநள்ளாறு (ஆ) திருக்கொள்ளிக்காடு (இ) சனி சிங்கனாப்பூர்

2. சனிக்கிழமைகளில் உபவாசமிருத்தல். இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

3. உங்கள் ஊரில் உள்ள திருக்கோயிலொன்றில் 24 சனிக்கிழமைகள் மாலையில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.

4. வியாழக்கிழமைகளில் மகான்களின் ஜீவ சமாதி, பிருந்தாவனங்கள் ஆகியவற்றை தரிசிப்பது.

5. வியாழக்கிழமைகளில் திருக்கோயிலொன்றில் மாலையில் பசுநெய் தீபம் ஏற்றுதல்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s