துயர்கள் களைந்திடும் துர்முகி புத்தாண்டு! – ஏ.எம்.ஆர்.


காலம் எனும் மகத்தான சுழற்சியில் மறைகிறது மன்மத தமிழ் ஆண்டு! மலர்கிறது துர்முகி தமிழ்ப் புத்தாண்டு!

ஒவ்வொரு புத்தாண்டும் நமது வாழ்க்கையில் பலவித எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. தமிழ்ப் புத்தாண்டு தினத்திலிருந்து அடுத்துவரும் சுமார் 365 நாட்களிலும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்ன நன்மை, தீமைகள் நடக்கவுள்ளன என்பதை முன்னதாகவே கண்டறிய உதவுகிறது, வேதத்தின் அங்கமான ஜோதிஷ சாஸ்திரம்!

‘துர்முகி’ என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. ‘துர்முகி’ என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சுமம் அடங்கியுள்ளது. துர்முகி புத்தாண்டின் பெயரில்தான் அப்படி என்ன சூட்சுமம் உள்ளது என்பதைப் பார்ப்போமோ?

Hayagreevar

‘துர்முக’ என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்தப்படியாகப் புத்தாண்டில் ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, வித்யாகாரகரான (கல்விக்கு அதிபதி) புதன் ஆகும். புதனின் அதிதேவதை  ஸ்ரீ ஹயக்ரீவர். ஹயக்ரீவர்தான் ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளித்தருளும் சக்தியாவார்.

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஸ்ரீ ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு ‘துர்முகி’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்கிரஹத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சுமமாக எடுத்துக் காட்டுகிறது.

சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களுக்கு அடுத்தபடியாக ஆண்டு முழுவதும் ஆதிக்கம் பெறுவது – கிரகங்களில் உறுதி, ஆண்மை, பிடிவாதம், முன்கோபம், வீரம் ஆகிய குணங்களைக் கொண்ட செவ்வாயாகும்.

இந்த ஆண்டின் மிக முக்கிய கிரக மாறுதல், ஆகஸ்ட் மாதத்தில் குரு பகவான், சிம்ம ராசியை விட்டு, கன்னி ராசிக்கு மாறவிருப்பதே ஆகும். மற்ற முக்கிய கிரகங்களான சனி பகவான், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சஞ்சார நிலைகளில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s