நெய் மணக்கும் ஜீரா ஜிலேபி!


ரம்யமான மலைத்தொடர்களைக் கொண்ட திண்டுக்கல்லைச் சுற்றி பலவித உணவு வகைகளைச் சுவைக்கவும், அந்த ஊரின் மிகத் தொன்மையான ‘திண்டுக்கல் பூட்டு’ செய்வதைப் பற்றியும் தெரிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. திண்டுக்கல் பூட்டு தொழிற்சாலையில் பலவிதமான பித்தளைப் பூட்டுகள் கலை ரசனையுடன் தயாரிக்கப்படுகின்றன. பூட்டுகள் செய்வதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே, சந்தை ரோடிலுள்ள ‘ஜிலேபி கிருஷ்ணய்யர் ஸ்டால்’ என் கண்முன் தெரிந்தது.

பளபளக்கும் தட்டில், கோபுரம்போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரியை காண்பித்து இரண்டு ஜாங்கிரி கொடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர், இது ‘ஜிலேபி. ஜாங்கிரி அல்ல” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். மதுரை திண்டுக்கல்வாசிகள், ஜாங்கிரியை, ஜிலேபி என்று சொல்கின்றனர் என்று தெரிய வந்தது. சில நிமிடங்களுக்குள், ‘ஜிலேபி மலை’ சிறியதாகி விட்டிருந்தது. அதன் ரசிகர்கள் ஏராளம்!

70 வருட பாரம்பரியமிக்க இக் கடையின் உரிமையாளர் விஜய்குமார், ஜிலேபி செய்முறையைக் காண்பிக்க அவர்களது சமையலறைக்கு அழைத்துச் சென்றார். வேர்க்கடலைத் தோலினால் எரியும் அடுப்பில், பெரிய வாணலியில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருந்தது. தரமான உளுந்து மற்றும் அரிசியை சரியான விகிதத்தில் கலந்து ஊறவைத்து பின், கிரைண்டரில் தண்ணீரை மிகத் துல்லியமாகச் சேர்த்துப் பக்குவமாக அரைக்கிறார். கிரைண்டர் ஓடிக் கொண்டிருக்கும்போது, ‘ஜிலேபி ரெட்’ என்ற ஒரு சிறிய துவாரம் போட்ட கனமான துணிப் பைக்குள், லாகவமாக, கரண்டியில் அந்த மாவை எடுத்து நிரப்புகிறார். ஐந்து விரலால் அப்பையின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு அழுத்தும் போது, அத் துவாரம் வழியாக மாவு எண்ணெயில் விழுகிறது. மிக்க கலைநயத்துடன், இரண்டு வட்டங்களில் ஆரம்பித்து, வெளிவட்டத்தின் மேல் சிறு சிறு வளைவுகளாக மிக்க அழகுடன் சுற்றுகிறார்.

சில நிமிடங்களில் குறைந்தபட்சம் 20 ஜிலேபிகளைச் செய்துவிட்டார். ஒரு நீள கம்பியில் ஜாங்கிரிகளைக் கோர்த்து (வளையல்களை அடுக்குவது போல்) எடுத்து, முன்பே தயார் செய்து வைத்திருந்த ‘சர்க்கரை ஜீராவில்’ போட்டு, ஜல்லிக்கரண்டியால் அழுத்துகிறார்.

ஜீரா தயாரானவுடன், நெய்யைத் தாராளமாக பாகில் ஊற்றிவிடுவதால், ஜிலேபிகள் ‘நெய் மணக்கும் ஜிலேபி’களாகி விடுகின்றன. கலர் என்பதையே சேர்க்காததால், எண்ணெயில் பொரித்தவுடன், பொன்னிறத்தில் இயற்கையான கலரில் இருக்கின் றன. நெய் ஜீராவில் ஊறிய ஜிலேபிகளை நான் சாப்பிடும்போது, அப்பப்பா! அந்தச் சுவை வார்த்தையில் அடங்காதது. உணவுப் பிரியர்கள், ஜிலேபி பிரியர்கள், கிலோ கணக்கில் வாங்கிச் செல்லும்போது, நானும் என் பங்குக்கு என் நண்பர்களுக்காகவே வாங்கி வந்தேன். திண்டுக்கலுக்குச் சென்று இந்தப் பாரம்பரிய மிக்க கடையின் நெய் ஜிலேபி ருசியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்.

மலிவு விலை மகத்தான சேவை!

இட்லி (2) – ரூ.5.00, பூரி செட் – ரூ.6.00, உப்புமா – ரூ.5.00, சப்பாத்தி (1) -ரூ.5.00, தோசை – ரூ.8.00, ரவா தோசை – ரூ.8.00, வெஜ்.பிரியாணி – ரூ.10.00, பொங்கல் – ரூ.10.00. திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் உள்ள ‘பாபு கேன்டீனி’ன் விலைப் பட்டியல்தான் இது. குறைந்த விலையில் நிறைந்த உணவு அளிப்பதில், அவரது குடும்பத்தினர் 40 வருடங்களாக தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். காலை 7-9 மணி வரை காலை உணவுக்கும், இரவு 6.30-8.30 மணி வரை இரவு உணவுக்கும் திறக்கிறார்கள். லாபத்தை எதிர்நோக்காமல், சேவை புரியும் பாபு குடும்பத்தினருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றேன்.

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

One thought on “நெய் மணக்கும் ஜீரா ஜிலேபி!

  1. GiRa ஜிரா March 26, 2016 at 9:26 AM Reply

    திண்டுக்கல்ல ஜாங்கிரிய ஜிலேபின்னு சொல்வாங்களா.. இனிப்புப் பண்டங்கள்ளயே சொகுசான பண்டம் ஜாங்கிரி. கடிக்க மெதுவ்வ்வ்வா இருக்கும். உள்ள இருக்கும் இனிப்பு ஜல்ல்ல்லுன்னு நாக்கில் பட்டு இறங்கும். ஒன்னு சாப்பிட்டா ஒன்னோட நிறுத்த முடியாது. இனிப்புகளின் இராணி ஜாங்கிரி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s