ஸ்பைஸி வடை கறி!


நான் என் உணவுப் பயணத்தை திருச்சியிலிருந்து ஆரம்பித்தவுடன், அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலும், கேட்ட வரம் தரும் காமதேனுபோலும் விதவிதமான சுவைமிக்க பாரம்பரிய உணவகங்களின் அணிவகுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையுமே ருசி பார்த்து, வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறதே தவிர, ‘இது வேண்டாம்’ என்று எதையுமே ஒதுக்க முடியவில்லை. உணவுப் பிரியனான நான், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரையும், தாயுமானவர் ஸ்வாமியையும், சமயபுரம் மாரியம்மனையும் நன்கு தரிசித்துவிட்டு, ‘பசித்துப் புசி’ என்ற பழமொழிக்கு ஏற்ப பசியோடு மிக சுவாரசியமான உணவகமான பீவி டிஃபன் சென்டருக்குச் சென்றேன். ஸ்பைஸி வடைகறியும், இரும்புச் சத்து அதிகம் கொண்ட மொடக்கத்தான் தோசையும் என் பசிக்கு இனிய உணவானது.

உரிமையாளர், பாலகிருஷ்ணன். பீவியின் ஸ்பெஷாலிட்டியான ஸ்பைஸி வடைகறி மற்றும் மொடக்கத்தான் கீரை தோசை செய்யும் பக்குவத்தை விளக்கினார். தரமான குண்டு உளுந்து, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு இவற்றை சம அளவில் ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து, பின் பருப்புக் கலவையை மிக்சியில் போட்டு கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுக்கின்றனர். பின்னர் தரமான எண்ணெயில், பருப்புக் கலவையைச் சிறுசிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கின்றனர். அச் சிறிய போண்டாக்கள், மசால் வடைக்கும், மெது வடைக்கும் நடுத்தரமாக உள்ளது. சுவைமிக்க க்ரேவி தயாரிக்கும் முறையும், அதன் சுவையும், என்னை அந்த இடத்தை விட்டு நகர விடவில்லை.

பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, இஞ்சி, சோம்பு, பட்டை, வரமிளகாய், தேங்காய் இவற்றை நன்கு மைபோல் அரைத்து எடுக்கும்போது உப்பு சேர்க்கின்றனர். பின் வாணலியில் எண்ணெய் தாராளமாக ஊற்றிக் காய்ந்ததும், பிரிஞ்சி இலை, பின் பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கியபின், அரைத்த மசாலாவையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்கவைக்கின்றனர். 10 நிமிடம் கொதித்தவுடன் அழகிய கோலி போல் ‘என்னைச் சாப்பிடுங்கள்’ என்று அழைக்கும் சிறு போண்டாக்களை கிரேவியில் போட்டு ஊறவிடுகின்றனர். போண்டா கிரேவியில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியே நம்மைச் சாப்பிடத் தூண்டுகிறது.

மொடக்கத்தான் தோசைக்கு, கீரையை மட்டும் நன்கு ஆய்ந்து, மிக்சியில் உப்புடன் நன்கு விழுதாக அரைக்கின்றனர். தோசைக்கு அரைப்பது போல் அரிசி, உளுந்தை அரைத்து முடக்கத்தான் கலவையை கலந்து காலையிலேயே வைத்து விடுகின்றனர். மாலையில் சற்றுப் புளித்து, உடல் நலத்துக்கு உதவும் ஈஸ்ட் ப்ரோபயோடிக் மாவை, இரும்பு தோசைக்கல்லில் வார்த்து, அதன் மீது நெய் ஊற்றினால், வாசனை ஊரைத் தூக்குகிறது.

நல்ல திருச்சி வாழை இலையைப் போட்டு, தண்ணீர் தெளித்து, பளபளக்கும் பித்தளை டம்ளரில் குடிநீருடன் அமர்ந்து, மொடக்கத்தான் கீரை தோசையுடன், பீவி வடைகறியையும் ருசித்தால், ஆஹா! ஓஹோதான்!

பெரிய கடைவீதியில், சின்ன கம்மாளத் தெருவில் இருக்கும் ‘பீவி டிஃபன் சென்டருக்கு’ சென்று ஸ்பெஷல் முடக்கத்தான் கீரை தோசையும், காரமான வடைகறியையும் மறக்காமல் ருசித்துப் பாருங்கள்!!

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “ஸ்பைஸி வடை கறி!

  1. Uma vishnu February 18, 2016 at 6:58 PM Reply

    ரெசிபி மிகவும் அருமை…

  2. xavier raja February 19, 2016 at 1:32 PM Reply

    Mudakathaan dosai… ennai mudakiyaathu athaan…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s