பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட்!


கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு. அந்த ஆற்றுப் பாலத்திலிருந்து தெரியும் ஸ்ரீரங்கம் கோபுரம், திருச்சி மலைக்கோட்டை, மலைக்கோட்டையின் அருகில் கம்பீரமாக இருக்கும் தேவாலயம்… என்ன ஒரு ரம்யமானக் காட்சி! அக்காட்சியை நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்க, ‘எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற உண்மையை உணர்ந்தேன். ஆம்! லேசாக பசிக்க ஆரம்பித்தது. ‘நெய் ரோஸ்ட் பார்த்தசாரதி விலாஸ்’ என்ற வார்த்தைகள் என் பசியை மேலும் தூண்டின. கால்கள் தாமாகவே பார்த்தசாரதி விலாஸை நோக்கி நடைபோட்டன.

1943-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உண வகம் சுத்தமான நெய் ரோஸ்ட், சுவைமிக்க சாம்பார், காரமான தேங்காய்ச் சட்னிக்கு பெயர்போனது. பாரம்பரியமாக, வருடக்கணக்காக கைதேர்ந்த சமையல் மாஸ்டர்கள், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு, எல்லாவற்றிற்கும் மேல் திருவானைக் காவலின் தாய் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் கருணை கடாக்ஷம்!

IMG_4428

சமையலறையில் உள்ள இரும்பு தோசைக் கல்லின் வயது 70!!   வியப்பு மேலிடுகிறது. எத்தனை ஆயிரக்கணக்கான, விதவிதமான ‘நெய் ரோஸ்ட்’களை அந்தக் கல் பார்த்திருக்கும்; எவ்வளவு ஆயிரம் ரசிகர்கள்  இந்த ரோஸ்ட்டுக்கு விசிறிகள் என்று மனம் கணக்குப் போடத் தொடங்கியது.

தரமான பசு வெண்ணெயைப் பதமாகக் காய்ச்சி, நெய்யாக்கி, அந்த நெய்யில்தான் தோசை செய்கிறார்கள். சமையலறையில் உள்ள மாஸ்டர்கள் சிறிய கப்பில் மாவை எடுத்து, விறகு அடுப்பின் மேல் இருக்கும் கல்லின் மேல் மாவை மிகத் துல்லியமாக வட்டம் வரும்வரை லாவகமாகத் தேய்க்கிறார்கள். வெண்ணெய் காய்ச்சின நெய், தாராளமாக, தோசையின் மேல் அமர்ந்து ‘என்னைச் சாப்பிடுங்கள்’என்று நம்மை அழைக்கிறது. பொன்னிறமான தோசை சில நிமிடங்களில் தயாராகி, நம்முடைய இருப்பிடத்துக்கே வந்து விடுகிறது. அவசர அவசரமாக நாம் சாப்பிட யத்தனிக்கும்போது, அதைச் சாப்பிடும் முறை பற்றி நம் நண்பர் விவரித்தார்.

சுவைமிக்க சாம்பாரை, நீளவாட்டத்தில் நம் தட்டில் இருக்கும் தோசை மீது, மேலிருந்து கீழாக ஒரே நேர்க்கோட்டில் ஊற்றுகிறார்கள். நானும் நடுவிலிருந்து, சாம்பாரில் குளித்திருக்கும் தோசையைச் சிறிய சிறிய துண்டுகளாக்கிச் சாப்பிடும்போது அச்சுவை, வார்த்தையில் அடங்காது. தொட்டுக்கொள்ள காரமான தேங்காய்ச் சட்னி வேறு சேர, அப்பப்பா சுவையோ சுவை… சுண்டி இழுக்கும் சுவை!

நெய் என்று பயந்து ஒரு தோசைதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்த நான், மூன்று தோசைகளை கூடுதலான நெய்யுடன் சாப்பிட்டேன். டயட் வல்லுநர்களின் புதிய கொள்கையின்படி, நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய் வஸ்துக்கள் உடலுக்கு மிக நல்லது. அதனால் நெய் அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் ‘பார்த்தசாரதி விலாஸின்’ நெய் ரோஸ்ட்டை கட்டாயம் ஒருகை பார்க்கலாம்..

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

நன்றி மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட்!

 1. Right Mantra Sundar February 21, 2016 at 11:46 AM Reply

  நான் 1993-1996 வரை திருவானைக்காவலில் உள்ள மேல விபூதி பிரகாரத்தில் உள்ள என் பாட்டியின் வீட்டில் தங்கி படித்து வந்தேன். எங்கள சொந்த ஊர் அது தான். எங்கள் வீட்டுக்கு சுமார் 20 வீடுகள் தள்ளி தான் இந்த ஹோட்டல். இங்கு ஸ்பெஷாலிட்டியே அந்த முறுகல் தோசை தான். அதே போல காலை 5.30 க்கெல்லாம் தயாராகும் ரவா பொங்கல்.

  ரவா பொங்கலுக்கு தொட்டுக்க சர்க்கரை கொடுப்பார்கள். அத்தனை ருசியாக இருக்கும். சற்று லேட்டாக போனால் கூட கிடைக்காது. எனவே எழுந்தவுடன் பல் கூட விளக்காமல் பார்த்தசாரதி விலாஸ் சென்று அந்த ரவா பொங்கலை சாப்பிட்ட அனுபவும் உண்டு.

  93-96 இல் இங்கு தோசை விலை ரூ.5/- அல்லது ரூ.6- தான். (அப்போது சிங்கிள் டீ விலை ரூ.1.25/-) இப்போது தோசை விலை எவ்வளவு என்று தெரிந்துகொள்ள ஆவல்.

  • BaalHanuman February 23, 2016 at 3:11 PM Reply

   அருமை சுந்தர். பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் பிறந்த காரணத்திலாலோ என்னவோ நீங்கள் மிகச் சிறந்த சிவ பக்தராகவும், உழவாரப் பணிகளில் ஈடுபடுவராகவும் இருக்கிறீர்கள்.

   வாழ்க உங்கள் தொண்டு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s